சினிமா
Published:Updated:

கடுப்பேத்தினா கதை... உசுப்பேத்தினா உல்டா!

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்

கொசக்ஸி சாயல்ல இருக்குறகாட்பாடி கந்தசாமிங்கிற ஆளுங்கட்சி மந்திரி திடீர்னு ஆட்சியப்பிடிச்சு அதிரடியா தமிழ்நாட்டை ஆளுறாரு.

‘விஜய் மக்கள் இயக்கம் எப்போது வேண்டுமானாலும் அரசியல் கட்சியாக மாறும்!’ என்று சரசர சரவெடி கொளுத்திப் போட்டிருக்கிறார் அவரின் தந்தை எஸ்.ஏ.சி. அப்படினா அரசியல் என்ட்ரிக்கு முன்னாடி என்ன பண்ணுவாங்க. சட்டுபுட்டுனு நாலு டைரக்டர்களைக் கூப்பிட்டு அடுத்த படத்துக்குக் கதை கேட்பாங்கதானே? ஒருவேளை இவங்க டைரக்ட் பண்ணுனா விஜய்கிட்ட இப்படிக் கதை சொல்வாங்களோ?

ஷங்கர்:

“டபுள் ரோல்ல நண்பன் 2-வே பண்ணலாம். கொசக்ஸி பசப்புகழோட கண்டுபிடிப்புகள் ஒவ்வொண்ணும் டெஸ்லாவுக்கும் எடிசனுக்கும் சவால் விடுது. அவர் கண்டுபிடிச்ச குண்டூசி மைக்ரோ பிராசஸர் முதல் ராட்சச ரோபோக்கள் வரை அகில உலக அங்கீகாரம் கிடைச்சு பேடண்ட்ஸ் மூலமாவே உலகத்தோட நம்பர் ஒன் பணக்காரர் ஆகிடுறாரு. பலவருஷமா நம்பர் ஒன்னா இருந்த கில்கேட்ஸ் உலகின் இரண்டாம் பணக்காரரா மாறிடறாரு. தன் கம்பெனில அவரை இணைச்சுக்க பேரம் பேசுறார் கில் கேட்ஸ். ‘இல்லை கில்லு... ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனா, ஒருவகை ஆற்றலை இன்னொருவகை ஆற்றலா மாற்றலாம்... அந்த ஆற்றல் நான் இல்லை. நீ வேற ஆளைப் பாரு!’ன்னு பஞ்ச் பேசி கலாய்ச்சிடுறார். இவர்மேல கொலகாண்டாகி எட்டுப் பணக்காரர்களைக் கூட்டு சேர்த்துக்கிட்டு உளுந்தூர்ப்பேட்டை பக்கத்துல உளுந்தவடை சாப்பிட்டுக்கிட்டு நிம்மதியா வாழ்ந்துட்டு இருந்த கொசக்ஸியோட வீட்டை பாம் வெச்சு தரைமட்டம் ஆக்கிடுறாங்க கில் ஆட்கள். நிலச்சரிவுல கொசக்ஸியும் அவர் மனைவி ரியாவும் இறந்துட்டதா பிபிசி, சிஎன்என் நியூஸ்களில் காட்டுறாங்க. சில ஆண்டுகளுக்குப் பிறகு...

கடுப்பேத்தினா கதை... உசுப்பேத்தினா உல்டா!

கொசக்ஸி சாயல்ல இருக்குறகாட்பாடி கந்தசாமிங்கிற ஆளுங்கட்சி மந்திரி திடீர்னு ஆட்சியப்பிடிச்சு அதிரடியா தமிழ்நாட்டை ஆளுறாரு. கங்கையையும் காவிரியையும் இணைக்கிறாரு. பாலாற்றுல நிஜமாவே தேனாறு ஓடுது. நேத்துவரை லாஸ் ஏஞ்சல்ஸ்னு ஒழுங்கா உச்சரிக்கத் தெரியாத சி.எம் இன்னிக்கு பிரஸ்மீட்ல மூணுவாட்டி கரெக்டா உச்சரிக்கிறதைப் பார்த்து அமெரிக்க தூதர் சந்தேகப்பட்டு சிஐஏகிட்ட போட்டுக் கொடுக்குறார். ஆமா... கொசக்ஸியோட ஆரா தான் காட்பாடி கந்தசாமி உடம்புக்குள்ள புகுந்திருச்சுன்னு தெரிய வருது. கில் கேட்ஸ் தற்கொலை பண்ணி ஆராவா மாறி எதிர்க்கட்சித் தலைவர் ‘அய்யாத்துரை’ பிரகாஷ் ராஜ் உடம்புக்குள்ள போயிடுறார். இந்த இரண்டு ஆராவும் சட்டப்பேரவையில சண்டை போடுற சீன்லாம் பஞ்ச் தெறிக்குது. ‘வாழ்க்கை ஒரு சதுரம்டா. நாலு மூலையிலயும் கட்டம்கட்டி அடிப்பேன்டா!’, ‘உசுப் பேத்துறவன் கிட்ட உம்முனு, கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனு இருப்பேன்னு பார்த்தியா... கும்முகும்முனு கும்மிடுவேன் பார்த்துக்க!, சட்டப்பேரவையில் பஞ்ச் தெறிக்க விடுறார். கெட்ட ஆராவை நேரு ஸ்டேடியத்துக்குள்ள புரட்டிப் புரட்டி அடிச்சு விரட்டுறதுதான் க்ளைமாக்ஸ். லுக் அலைக்கா இருக்கிற காட்பாடி கந்தசாமி நிரந்தர சி.எம்மா மாறிடுறார். தமிழ்நாடே நியூயார்க் மாதிரி ஆகிடுது..! டைட்டில் கிரெடிட்ல சிங்கப்பூர் பத்தி போட்டோஸோட ஓடவிடலாம் நண்பா நண்பி!”

ஏ.ஆர்.முருகதாஸ்:

“கள்ளக்குறிச்சி பக்கத்துல பால்விளம்பரத்துல வர்ற கிராமம் மாதிரி இருக்குற தியாகதுருகம்கிற ஊருல தியாகத்தின் உருவமா வாழ்ந்துகிட்டு இருக்குற எளிமையான இளம் விவசாயிதான் தமிழ்நாடன். ஊருக்குள்ள நிம்மதியா இருக்குற மனுஷனுக்கு பிரச்னை விளம்பரக்கம்பெனி வெச்சிருக்குற நீல்ஸ் மூலமா வருது.

“உங்க வீட்டு சுவத்துல ‘கட்டுறுதியான கம்பி எஸ்கேடி முறுக்குக் கம்பி’ன்னு விளம்பரம் எழுதிக்கலாமான்னு கேட்குறாங்க. ஓகே சொல்லி எழுதிக் கொடுக்குறப்போ ஏமாத்தி வீட்டையே பட்டா போட்டு அபகரிச்சுக்கிறாங்க. பண்ருட்டி பக்கம் முந்திரிக்காட்டுக்குள்ள பஞ்சம் பொழைக்கப்போன தமிழ்நாடன் எப்படி தன் வீட்டை மீட்கிறான்கிறதுதான் மெய்ன் ப்ளாட்.

கடுப்பேத்தினா கதை... உசுப்பேத்தினா உல்டா!

ஹாலிவுட் படங்களில் தன் குடும்பத்தைக் காப்பாத்தப் போற ஹீரோ போறபோக்குல கொசுறா உலகத்தையும் பேரழிவுல இருந்து காப்பாத்துற மாதிரி இதுல தமிழ்நாடன் வீட்டையும் தமிழ்நாட்டையே அபகரிச்சுக்குற ஒரு அரசியல்வாதிகிட்ட இருந்து மொத்த ஸ்டேட்டையும் எப்படி மீட்குறார்கிறதுதான் கதை. க்ளைமாக்ஸ்ல பிரதமர் ஆகுறமாதிரி ஹேப்பி எண்டிங். ‘ஒருவாட்டி முடிவெடுத்துட்டா ஒவ்வொருவாட்டியும் முடிவெடுக்க மாட்டேன்!’,

‘கிரிக்கெட் ஆடலாம், கில்லி ஆடலாம், ஏன் பல்லாங்குழிகூட ஆடலாம். ஆனா ஆணவத்துல மட்டும் ஆடக்கூடாது மச்சி!’ இப்படி பஞ்ச் தெறிக்கவிட்டா அமெரிக்க ஜனாதிபதியே அடுத்து நம்ம தளபதிதான்!”

அட்லீ:

“நான் இல்லாம தளபதிக்கு அரசியல் என்ட்ரியா? எங்க அண்ணனுக்கு நான்தான்டா செய்வேன். கதைப்படி அண்ணன் மரகதம் சென்னைல குட்டியானை ஓட்டுறார். தண்ணி கேன்ல சாராயத்தைக் கடத்துற கும்பல் அவர் வண்டியில அவருக்கே தெரியாம சரக்கைக் கடத்துறாங்க. லோக்கல் ஸ்டேஷன்ல லாடம்கட்டி அடிச்சப்பவும் யார்னு காட்டிக்கொடுக்காம கம்முனு அடி வாங்கிட்டு வீட்டுக்கு வந்திடுறாரு. மொட்டை மாடில துணி காயப்போடப்போன தங்கச்சிமேல லைட் அடிச்சு விளையாடுறான் எதிர் போர்ஷன் பிளேபாய் ஒருத்தன். அவ கதறிட்டு வந்து சொன்னப்பவும் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு, ‘அது வாலிப வயசு’ன்னு கப்சிப்புனு நிக்கிறான். கிரிக்கெட் விளையாடப்போன தம்பியோட மண்டையப் பொளந்து மாவிலக்கு ஏத்தி அனுப்புறான் ரௌடியோட மகன் ஒருத்தன். ‘அண்ணே, வந்து தட்டிக்கேளுண்ணே’ன்னு அழுதுட்டு நிக்கிற தம்பிய, ‘சாந்தமு லேகா சௌக்கியமு லேது!’ என சமாதானப்படுத்துகிறான். இப்படி கோபமே படாம கோழை மாதிரி இருக்குற மரகதத்துக்கிட்ட ஒருநாள் குடும்பமே கோபமாகி, கட்டிவெச்சு உறிக்குது. ‘சொல்லுங்க...யாரு நீங்க... தூக்கத்துல பாம்பேன்னு சொன்னீங்க. பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’ன்னு கேட்குறாங்க. ‘நான் பாம்பேல இருந்தேன்னு சொல்லவே இல்லையே... கனவுல பார்த்த பாம்பைத்தான் சொன்னேன்!’னு சமாளிக்கிறார் மரகதம்.

கடுப்பேத்தினா கதை... உசுப்பேத்தினா உல்டா!

ஆனா, வீட்டுவாசல்ல பாம்பே குல்பி ஐஸ் விக்கிற தினேஷ் வந்து, ‘தலிவரே, நம்ம அடுத்த ஆபரேஷன் என்ன?’ன்னு கேட்டுவைக்க, வசமா மாட்டிக்கிட்டார் மரகதம்.

அப்புறம் என்ன, ஏரியாக்குள்ள பீடாக் கடை போட்ட சேட் பிரெண்டும், டீக்கடை வெச்சிருக்குற சிங்கும் சொன்னபிறகுதான் தெரிய வருது மரகதத்தோட முழுப்பேரு மரகதமணின்னு. மும்பை பவசோனா கட்சியோட தலைவரு. அப்பாவை எதிரி கேங் போட்டுத் தள்ளுனதும் சென்னைக்கு வந்து அடையாளத்தை மறைச்சு மரகதமா குட்டியானை, மீன்பாடி லாரி ஓட்டிக்கிட்டு ஒண்டுத்தன குடும்பத்தோடு ஒண்டிக்கிட்டார். ப்ளாஷ்பேக்கை சத்தமாவா சொல்லுவான் மனுஷன்? விஷயம் கேள்விப்பட்டு ஆப்போசிட் கேங்கும் மும்பை போலீஸும் துரத்த, எல்லோர் கண்ணிலும் விரலைவிட்டு ஆட்டிட்டு சுயேச்சையா எலெக்‌ஷன்ல நின்னு ஜெயிச்சு எம்.எல்.ஏ ஆகுறார். இவர் யாருன்னு மீடியா மூலம் விஷயம் தெரிஞ்சதும் எல்லா எம்.எல்.ஏக்களும் வரிசையா வந்து கையில் முத்தம் கொடுத்து இவரோட இணைஞ்சுக்கிறாங்க. க்ளைமாக்ஸ்ல சி.எம் நாற்காலில கம்பீரமா உட்காருறார் தளபதி! அவர் கட்சி பெண் எம்.எல்.ஏக்களுக்கு சிங்கப் பெண்ணே சிங்கப்பெண்ணே சாங் போட்டுரலாம்!”

கௌதம் வாசுதேவ் மேனன்:

“படத்தோட ஆரம்பத்துல தளபதிக்கு க்ளோஸ்-அப். அவர் வாய்ஸ் ஓவர்... ‘ஒரு பியூட்டிபுல் மிஸ்ட்டிக்கல் நைட். நான் ஓடிட்டே இருக்கேன். என்னைக் கொல்லத் துரத்திட்டு வர்ற கும்பலுக்கும் எனக்கும் 42 யார்ட்ஸ் கேப் இருக்கு. ஒரு வேளை நான் கொல்லப்படலாம். கொல்லப்படாமலும் இருக்கலாம். ஆனா நான் இப்ப தப்பிச்சே ஆகணும். ஏன்னா என்னை நம்பி எட்டுக்கோடி மக்கள் இருக்காங்க. எஸ்... ஐ ஆம் ஆன் மை *** லைப் கேம். இன்னிக்கு நான் செத்தேன்னா நாளைக்கு மில்க். ஸோ நான் ஓடணும். இப்ப நான் 120 டிகிரி விலகி ஓடணும். இல்லைன்னா... தோ இந்த குண்டனோட புல்லட்ஸ் என் பொடனிய பதம் பார்த்துடும். ஆமா... நான் யார்? வருங்கால சி.எம். எக்ஸிட் போல்ல நான்தான் வின் பண்ணப்போறதா நியூஸ் வந்துச்சு. உடனே போட்டுத்தள்ள அந்த *** இளமாறன்தான் ஸ்கெட்ச் போட்டு என்னைத் தூக்க இந்த குண்டாஸை அனுப்பி இருக்கான். நான் இப்ப பொழைக்கணும். ஏன்னா மாயா... வூ இஸ் ஸீனு கேட்குறீங்களா..? அவளைப் பத்தி நான் சொல்லியே ஆகணும். அவளை மாதிரி யாரும் இங்கே அழகா இல்லை. ஆனா, அவ அவ்ளோ ஸ்மார்ட் இல்லை. திமிருக்கே பிடிச்சவள்னு டிபி வெச்சிருக்குற ஆப்பாயில் ஏஞ்சல். ஆனா, அவளுக்கு என்னைப் பிடிக்கும். பீலிங் இஸ் மியூச்சுவல். ஒருவகையில நான் இப்ப என் சாவை சட்டைப் பாக்கெட்ல வெச்சிட்டு ஓடுறதுக்கும் அவதான் காரணம். என்ன குழப்பமா இருக்கா... சம்திங் ஸ்ட்ரேன்ச்? எஸ் ஸீ இஸ் ரிடிகுலஸ். என்னோட வலியும் அவதான். நிவாரணியும் அவதான். ஆப்டர் ஆல் ஸீ இஸ் டாட்டர் ஆப் அமுதவாணன். யார் அவர்னு கேட்குறீங்களா..? யூ நோ ‘மிராக்கிள்ஸ் டோண்ட் ஹேப்பன் டு யூ... தே ஹேப்பன் த்ரூ யூ’ன்னு சும்மாவா சொன்னாங்க. சீப் மினிஸ்டர் ஆப் தமிழ்நாடோட பொண்ணை லவ் பண்ண நான் கொடுக்குற விலை இந்தத் தோட்டாக்கள். பிராபபலிட்டி டிஸ்ட்ரிபியூஷன் படிச்சிருக்கீங்களா?

கடுப்பேத்தினா கதை... உசுப்பேத்தினா உல்டா!

என்னைக் கொல்ல ஒரு தோட்டா என் லங்ஸை 25% டச் பண்ணினா போதும். ஆனா, நான் இப்ப ஓடுற ஸ்பீடு 80 கிலோமீட்டர் பெர் செகண்ட். புல்லட் ஸ்பீடு 3000 பீட் பெர் செகண்ட். நான் சாகுறது உறுதி. ஆனா, தமிழ்நாட்டோட மக்கள் என்னை நாளைய நம்பிக்கைன்னு கொண்டாடுறப்போ நான் செத்துப்போனா உருவாகுற வேக்வம் நாட் அக்சப்டபிள்! அதனால நான் பொழைக்கணும். ஓடுற டைரக்‌ஷனை மாத்தி வளைஞ்சு வளைஞ்சு ஓடுனா 50% நான் பிழைக்க வாய்ப்பிருக்கு. என் லங்ஸும் நானும் தப்பிப்போம். துரத்துற *** எல்லோரும் ஆல்கஹாலிக். எஸ். தே ஆர் டிரங்கன். நான் டீ டோட்டலர். இப்ப நான் தெளிவா இருக்கேன். நான் தப்பிச்சா நாளைக்கு வர்ற எலெக்‌ஷன் ரிசல்ட்ல மெஜாரிட்டி ஓட்டுவாங்கி ஜெயிப்பேன். பத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கிட்ட பேசியிருக்கேன். ஒருவேளை என்னை இப்ப உசிரோட பிடிச்சு ஜெயில்ல தள்ளினாலும், எல்லா ஜெயில்லயும் ஸ்லீப்பர் செல்ஸ் வெச்சிருக்கேன். யூடியூப் முழுவதும் கன்டென்ட் ரெடியா இருக்கு. எல்லா சேனல்ஸிலும் விளம்பரம் கொடுத்திருக்கேன். நாளைக்கும் நாளன்னிக்கும் டிரெண்ட் ஆவேன். ஐ ஆம் ரெடி. ஐ ஆம் பியாண்ட் தி ஆர்டினரி ஹியூமன் பீயிங். நிச்சயம் பீப்பிள் ரெவல்யூஷன் வரும். நான் வெளில வருவேன். தோ கோட்டையில கொடி ஏத்துறேன். நேற்று இல்லை நாளை இல்லை... அப்பவும் நான் முதல்வன்... கோட்டை இல்லை கொடியும் இல்லை... அப்பவும் நான் முதல்வன்! டொப். என்ன பயந்துட்டீங்களா... ஹாஹா... நான் சாகமாட்டேன். வாய்ல பப்புள் விட்டேன். சத்ரியனுக்கு சாவே இல்லை... குட்பை..!

நடுநடுவே நாலு பாட்டு, ரெண்டு பைட்டு...கொஞ்சம் ப்ரீஸி லொக்கேஷன்ல மாண்டேஜ் எடுத்தா ‘யோஹன் தி சி.எம்’ படத்தை ரிலீஸ் செஞ்சிடலாம். ஒரு காபி ஷாப் போனா மிச்ச சொச்ச டயலாக்ஸை எழுதிட்டு வந்துடுவேன். ஹோப் பார் தி பெஸ்ட் தளபதி!”