Published:Updated:

குண்டக்க... மண்டக்க... குறியீடு!

குண்டக்க... மண்டக்க... குறியீடு!
பிரீமியம் ஸ்டோரி
குண்டக்க... மண்டக்க... குறியீடு!

எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும். பட்டாசும் சும்மா கொளுத்தாம வெடிக்கும்!’னு தலைக்கு என்னை அறிந்தால் படத்துக்கு லிரிக்ஸ் எழுதினார் விக்னேஷ் சிவன்.

குண்டக்க... மண்டக்க... குறியீடு!

எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும். பட்டாசும் சும்மா கொளுத்தாம வெடிக்கும்!’னு தலைக்கு என்னை அறிந்தால் படத்துக்கு லிரிக்ஸ் எழுதினார் விக்னேஷ் சிவன்.

Published:Updated:
குண்டக்க... மண்டக்க... குறியீடு!
பிரீமியம் ஸ்டோரி
குண்டக்க... மண்டக்க... குறியீடு!

இந்தக் குறியீடு கண்டுபிடிக்கிறவங்ககிட்ட தமிழ் சினிமா மாட்டிக்கிட்டு அல்லோலகல்லோலப்படுது பாஸ். என் கண்ணில் பட்ட அரிய குறியீட்டுக் கண்டுபிடிப்புகள் இவை... எப்படில்லாம் தினுசு தினுசா குறியீடு கண்டுபிடிச்சுக் கொல்றாங்கன்னு, சே... சொல்றாங்கன்னு என்மேல கோபப்படாதீங்க!

* இதுலாம் நிஜமாவே ரத்தத்தின் ரத்தங்கள் கண்டுபிடிச்ச காமெடிக் குறியீடுகள்... ‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த காலங்களில் இருந்து சினிமாவுக்கு குட்பை சொல்லும்வரை அவரது மீசையைப் பார்த்தால் தெரியும். அவர் கட்சி சின்னமான இரட்டை இலையை அப்போதே மீசையாக வரைந்து வைத்திருப்பார். பின்னாளில் கட்சி ஆரம்பிக்கப் போவதைக் குறியீடாக அன்றே சொன்னார் எங்கள் வாத்தியார்!’

குண்டக்க... மண்டக்க... குறியீடு!

‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்...’ என்று இரட்டை இலை சிம்பலை கைகளிலும் மீசையிலும் காட்டி பாட்டாவே உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வைத்தார் புரட்சித் தலைவர் என்கிறார்கள். ‘யோவ்...எல்லோருக்குமே மீசை அப்படித்தான்யா இருக்கும்!’ என்று சொல்ல நினைத்தால் சொல்லிவிடாதீர்கள்.

விட்டால் ‘ஆயிரத்தில் ஒருவன் படத்துல தலைவர் போட்டிருக்குற சட்டைல தாமரைப்பூவெல்லாம் டிஸைனா இருக்கு. கூட்டணியை அன்றே கணித்தார் எங்கள் தலைவர்’னு சொன்னாலும் சொல்வாங்க!

குண்டக்க... மண்டக்க... குறியீடு!

* சிவாஜிலாம் நமக்குத்தான். கிராமத்தில் எப்பவும் ‘சிவாசி.’ ரிவர்ஸ்ல எழுத்துக்கூட்டி வாசிச்சாலும் சிவாசிதான். அதனால்தான் அப்படியொரு பேரை நடிகர் திலகம் தேர்ந்தெடுத்து வெச்சுக்கிட்டார். எப்படிப்பட்ட கேரக்டர்லயும் நான் நடிப்பேன்டா. தமிழ் சினிமாவின் சக்கரவர்த்திடா நான். நடிப்புல எல்லாத்தையும் தலைகீழா திருப்பிப் போட்டு புது இலக்கணம் படைப்பேன்டான்னு அப்போதே குறியீடா சொல்லியிருக்காராமாம்!

குண்டக்க... மண்டக்க... குறியீடு!

* 1960-ல் ஆறு வயசுக் குழந்தையா `களத்தூர் கண்ணம்மா’வுல அறிமுகம் ஆகுறாரு கமல்ஹாசன். அந்தப் படத்துல அவருக்கு அப்பா ஜெமினி கணேசன். காதல் மன்னன்னு பேரு எடுத்தவரோட வாரிசா அப்பவே இயக்குநர் பீம் சிங் கமலை அறிமுகப்படுத்திட்டார். ‘அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே!’ன்னு ஒரு பாட்டை டவுசர் போட்ட குட்டிப்பையன் கமலுக்கு வெச்சதோட நோக்கமே எல்லாமே முன்னாடியே டைரக்டரோட உள்ளுணர்வுக்குச் சொல்லியிருக்கு. இல்லைன்னா பீம் சிங்கோட முதல் படத்துக்குப் பேரு ‘அம்மையப்பன்’னு வெச்சிருப்பாரா..? எல்லாம் கமல் எனும் இலுமினாட்டி தமிழ் சினிமாவுல வரப்போறாருன்னு உணர்த்தத்தான். இந்த விஷயம்லாம் பாரி சாலனுக்குத் தெரியுமா?

குண்டக்க... மண்டக்க... குறியீடு!

* கமல் ஒரு இலுமினாட்டி... ‘தசாவதாரம்’ல நம்ம கமல் சயின்டிஸ்ட் கோவிந்தாக வந்து கொடிய வைரஸ்கிட்ட இருந்து உலகத்தைக் காப்பாத்த ரொம்ப மெனக்கெடுவார். பேர்ல ஆரம்பிச்சு எல்லாமே குறியீடுதான். அவர் நெத்தியில பெரிய பிளாஸ்திரி ப்ளஸ் மாதிரி இருக்கும். அது முதலுதவி சிகிச்சைப் பெட்டியில இருக்குற சிம்பல். வேறொண்ணுமில்லை, கொரோனா போல ஒரு பெரிய கிருமி நம்மை அழிக்க வரப்போகுதுன்னு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கணும்னு சிம்பாலிக்கா காட்டத்தான் அந்த சிம்பல். இல்லைன்னா அம்மாம்பெரிய ப்ளஸ் பிளாஸ்திரியை மூஞ்சிமேல வைக்க கமல் என்ன அகாதுகா ஆர்ட்டிஸ்ட்டா?

குண்டக்க... மண்டக்க... குறியீடு!

* `கரகாட்டக்காரன்’ படத்துல ‘இந்த மான் உந்தன் சொந்தமான்!’ பாட்டுக்கு முந்துன காட்சியில கவனிச்சீங்கனா, ராமராஜன் தோள்ல கெடந்த துண்டைத் தவற விட்டிருப்பார். பறந்த அவரோட துண்டை கனகா அம்மணி கேட்ச் பிடிச்சு ஒரு இத்துப்போன டிரங்குப் பெட்டிக்குள்ள போட்டு அடைச்சு வெச்சிருவாங்க. புகழின் உச்சத்துல இருந்த ராமராஜன் படங்கள் பொட்டிக்குள்ளேயே அடங்கிப்போனதை அப்பவே கங்கை அமரன் குறியீடா வெச்சார். அன்னிக்குப் போன மார்க்கெட்டும் அதோட போச்சு.

குண்டக்க... மண்டக்க... குறியீடு!

* கே.ஜி.எஃப் படத்துக்குப் போட்டியாக பீஸ்ட் ரிலீஸாகப் போகுதுன்னு அவசர அவசரமா குறியீடு கண்டுபிடிக்கிறாங்க விஜய் ரசிகர்கள். ‘எங்க தளபதி மாஸுக்கு முன்னாடி யாஷு எல்லாம் தூசுடா!’ன்னு சவுண்ட் விட்டப்போதான், ‘இது என்ன போரா?’ன்னு சொல்லி பிரஸ்மீட்டில் ஃபுல்ஸ்டாப் வெச்சார் நம்ம யாஷ்.

விடுவாங்களா தளபதி ரசிகருங்க... `ஒரு பெரிய சம்பவம் 2009 டிசம்பர் 18-லயே நடந்திருக்கு. அவதார் படமும் வேட்டைக்காரனும் ஒரே நாளில் ரிலீஸ் ஆச்சு. ரெண்டுமே சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் கான்செப்ட். அப்படி ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுத்தவர் எங்க தளபதி’ங்கிறாங்க! கொஞ்சம் வரலாற்றை அகழாய்வு செஞ்சு டீப்பா போனோம்னா... ‘1997 டிசம்பர் 19 அன்னிக்கு `காதலுக்கு மரியாதை’யும் `டைட்டானிக்’கும் ஒரே நாள்ல ரிலீஸ் ஆச்சு!’ங்கிறாங்க.

குண்டக்க... மண்டக்க... குறியீடு!

* ‘எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும். பட்டாசும் சும்மா கொளுத்தாம வெடிக்கும்!’னு தலைக்கு என்னை அறிந்தால் படத்துக்கு லிரிக்ஸ் எழுதினார் விக்னேஷ் சிவன். அதை எழுதும்போதே தான் வாய்ப்பு கேட்காமலே அஜித் தனக்கு வாய்ப்பு கொடுப்பார்னு AK62-க்கு அங்கேயே குறியீடு வெச்சவராம் இந்த விக்கி. அடேய் பக்கிகளா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism