Published:Updated:

ஐடியா அய்யனாரு!

விறுவிறுப்பாக நடந்து வருகின்றன உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள். யோசித்துப் பார்த்ததில் சில இதழ்களுக்கு முன் எழுதிய ‘உலகக் கோப்பை அணிகளும் நம்மூர் கட்சிகளும்’ பார்ட் - 2 எழுதலாம் என்று தோன்றியது.

பிரீமியம் ஸ்டோரி

கடந்த முறை போலவே, இந்த முறையும் அணிகளுக்கும் விட்டுப்போன கட்சிகளுக்கும் இடையில் அவ்வளவு ஒற்றுமைகள். எனவே, இது பார்ட் - 2.

ஆப்கானிஸ்தான்

பெரிய பெரிய அணிகள் மல்லுகட்டும் உலகக்கோப்பையில் லேட்டஸ்ட் என்ட்ரி இந்த அணி. சொல்லிக்கொள்ளும்படி வெற்றிகளைக் குவிக்காவிட்டாலும் டீசன்ட்டாக ஆடி, எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த அணி. அணியின் பிரச்னையே கேப்டனின் புரியாத கேம் பிளான்கள்தான். அவர் என்ன நினைக்கிறார் எனக் கூட இருப்பவர்களுக்கே புரியாது. இப்போது இதை அனைத்தையும் அப்படியே ம.நீ.ம-வோடு பொருத்திப் பார்க்கவும்.

தென்னாப்பிரிக்கா

90-களில் அசாத்திய பலத்துடன் இருந்த அணி. இந்த அணி வளர்ந்த வேகத்தைப் பார்த்து சாம்பியன் அணிகள் எல்லாமே கொஞ்சம் டரியலாகித்தான் கிடந்தன. ஆனால், சரியான நேரத்தில் தப்பான முடிவுகளை எடுத்துச் சொதப்புவது இந்த அணியின் டி.என்.ஏ-விலேயே இருப்பதால், இப்போதுவரை பெரிதாக வெற்றிகளே இல்லை. யெஸ், இதைப் படித்தவுடனே உங்களுக்கு ம.தி.மு.க ஞாபகத்துக்கு வருமே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜிம்பாப்வே

இதுவும் 90-களில் பலமாக இருந்த அணிதான். அணியில் ஏகப்பட்ட ஸ்டார் பிளேயர்கள் இருந்தார்கள். பழம் தின்று கொட்டை போட்ட அணிகளையே தோற்கடித்து அப்செட்டாக்கும் திறமை இருந்தது இந்த அணிக்கு. ஆனால், காலம் செய்த கோலத்தில் இப்போது கேப்டனின் அனுபவத்தை மட்டுமே நம்பி வெற்றிக்காகக் காத்திருக்கிறது. இதைப் படித்ததும் பா.ம.க ஞாபகத்துக்கு வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

நியூசிலாந்து

ஜெயிக்காது என நினைக்கும் நேரத்தில் சடசடவென முக்கால்வாசி அணிகளைத் தோற்கடித்து முன்னேறும். ஆனால், இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுடன் மோதும்போது மட்டும் எவ்வளவு முக்கினாலும் வெற்றி பக்கத்தில்கூட வராது. பல ஆண்டுகளாக இதுதான் நிலைமை. இப்போது பி.ஜே.பி மற்ற மாநிலங்களில் வென்றதையும் தென் மாநிலங்களில் தோற்றதையும் கணக்கிட்டுப் பார்க்கவும்.

நேபாளம்

1996-லிருந்து ஐ.சி.சி-யில் பார்ட் டைம் உறுப்பினராக இருக்கிறது. பக்கத்து நாடுகள் எல்லாம் கிரிக்கெட்டில் சூப்பராகக் கோலோச்சும்போது இந்த அணியும் அதே மாதிரி வளர்ந்துவரும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இருபது ஆண்டுகளாகியும் பல உலகக்கோப்பைகள் கடந்தும் ‘இந்தா வர்றேன், அந்தா வர்றேன்’ என பூச்சாண்டி காட்டிக்கொண்டே இருக்கிறது இந்த அணி. அந்த ஆண்டு உள்பட எல்லாமே அப்படியே ரஜினிக்குப் பொருந்திப்போகுதே... மிராக்கிள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு