``சீரியஸான நேரத்தில் ஜாலியான கேள்விகளா? கேளுங்க, மனசைக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்” என்றபடி தயாரானார், நடிகை ஊர்வசி.

“எத்தனை கேள்விக்கு எனக்கு பதில் தெரியும்னு தெரியாது. உங்களை வெச்சு எனக்குத் தெரியாததைக் கத்துக்கிறேன்’’ என ரெடியானார், தொகுப்பாளினி பிரியங்கா.

“பதில் தெரியலைன்னா ‘நோ கமென்ட்ஸ்’னுதான் சொல்லுவேன் பரவாயில்லையா? சரி ஆசைப்படுறீங்க, கேளுங்க. மாட்டிவிடாமல் இருந்தா சரி” என்றபடி ஜாலி மோடில் கேள்விகளை எதிர்கொண்டார் நடிகர் கலையரசன்.

போனை அட்டன்ட் செய்து இந்த கான்செப்ட் பற்றிக் கேட்டவுடன், “இப்போவே கேள்விகளைக் கேட்கப்போறீங்களா... சரி கேளுங்க பார்ப்போம்?” என்றார் வாகை சந்திரசேகர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் இன்னொரு பெயர் என்ன?

சரியான பதில்: பேச்சிமுத்து

ஊர்வசி: “சினிமாவில் நடிக்கிறவங்க தான் தங்களோட பெயரை மாத்திப்பாங்கன்னு கேள்விப்பட்டி ருக்கேன். அரசியல் வாதிகளும் பெயரை மாத்திப்பாங்களா என்ன? எனக்கு அவரோட ஒரு பெயர்தான் தெரியும்.”

பிரியங்கா: “அவருக்கு இன்னொரு பெயர் இருக்கா? எனக்கு ஓ.பன்னீர் செல்வம்கிற பெயர்தான் தெரியும்.”

கலையரசன் : “ஐயய்யோ! சத்தியமா தெரியாது தல.”

வாகை சந்திரசேகர் : “ஓ.பன்னீர்செல்வம்தான் நமக்குத் தெரிஞ்ச பேரு. வேற ஒரு பேரு இருக்கா அவருக்கு?”

தமிழ் இலக்கணத்தில் வினைத்தொகை என்றால் என்ன?

சரியான பதில் : மூன்றுகாலத்துக்கும் பொருந்தும்படி இருக்கும் பெயர்ச்சொல். உதாரணம் : ஊறுகாய்.

நடிகை ஊர்வசி: “நான் மலையாளியா இருந்தாலும், தமிழ் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததனால எழுத, படிக்க மட்டும் கத்துக்கிட்டேன். ஆனால், இலக்கணம் வரைக்கும் கத்துக்கலையே.”

பிரியங்கா: “வினைத்தொகையா? நான் காலேஜ் படிக்கும் போதுதான் தமிழையும் படிக்க ஆரம்பிச்சேன். இப்படி ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட்டதுகூட இல்லையே. பதிலை நீங்களே சொல்லுங்களேன்” என்றவரிடம், பதிலைச் சொன்னபின், “இதை நான் சொன்னதா எழுதிக்கோங்க ப்ரோ” என்றார்.

கலையரசன் : “தல இதெல்லாம் எங்க தமிழ் மிஸ் சொல்லிக்கொடுத்திருக்காங்க. ஆனா, இத்தனை வருஷமானதுல மறந்துட்டேன். நீங்களே உதாரணத்தோட சொல்லிடுங்களேன்!”

வாகை சந்திரசேகர் : “என்னங்க தமிழ் ஆசிரியர் மாதிரி கேட்குறீங்களே! இலக்கணத்துல அவ்ளோ தூரம் எனக்குத் தெரியலையே!”

ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர் யார்?

சரியான பதில் : ஜோ பிடன்

ஊர்வசி: “எனக்கு நம்ம ஊரு அரசியலே தெரியாதுங்க. இதுல, வெளிநாட்டு அரசியல் கேள்வியெல்லாம் கேட்டா எப்படி? ஓட்டு போடுறதைத் தவிர, அரசியலில் வேறு எதையும் நான் பாலோ பண்ணுறது இல்ல.”

பிரியங்கா: “ ஜோ பிடன். இவரு வின் பண்ணணும்னு நிறைய பேர் ஆசைப்படுறாங்கன்னும் கேள்விப்பட்டேன்.”

கலையரசன் : “உள்ளூர் அரசியலே நமக்குப் பஞ்சாயத்தா இருக்கு. இதுல வெளியூர் அரசியல் வேறயா? ஹிலாரி கிளின்டனா நிக்குறாங்க... தெரியலையே!”

வாகை சந்திரசேகர் : “இந்திய வம்சாவளிப் பெண் யாரோன்னு நினைக்கிறேன்.”

‘ரஜினியுடனான அரசியல் முரண்பாடு முடிந்துவிட்டது’ என்று சொன்ன அரசியல் கட்சித் தலைவர் யார்?

சரியான பதில்:  சீமான்

ஊர்வசி: “சமீபத்தில்தான் இப்படி நியூஸைப் பார்த்தேன். ரஜினி சார் அவருக்கு போன் பண்ணிப் பேசியதாகவும் அந்தச் செய்தியில் போட்டிருந்தாங்க. ஆனால், அவர் யாருன்னு தெரியலையே.”

பிரியங்கா: “நான் கமல் சார்னு சொல்லுவேன். நீங்க இல்லைன்னு சொல்லுவீங்க. அப்படித்தானே.”

கலையரசன் : “அவருடைய அரசியலைப் பத்தி நிறைய பேர் கருத்து சொல்லிருக்காங்க. அதுல இதைச் சொன்னது யாருன்னு தெரியலையே... சீமானா?”

வாகை சந்திரசேகர் : “சீமான்”

காஜல் அகர்வால் திருமணம் செய்யவிருக்கும் தொழிலதிபரின் பெயர் என்ன?

சரியான பதில் : கௌதம் கிச்லு

நடிகை ஊர்வசி: “தொழிலதிபரைக் கல்யாணம் பண்ணிக்கப்போறாங்க; மும்பையில் கல்யாணம்னு கேள்விப்பட்டேன். ஆனால், அவர் பெயர் எனக்குத் தெரியாது.”

பிரியங்கா: “தொழிலதிபர்னு தெரியும். ஆனால், பெயர் தெரியலை.”

கலையரசன் : “கெளதம் கிச்லு... கரெக்டா?”

வாகை சந்திரசேகர் : “அந்தச் செய்தியைப் பார்த்தேன். ஆனா, முழுமையா படிக்கலையே.”