“அதை விட்டுத்தள்ளுய்யா. அது அப்போ...!
எந்தக் கட்சியிலே ஜெயிச்சாலும் அந்த எம்.எல்.ஏ-க்கள் நம்ம கட்சிக்கு வந்து நம்மை ஆட்சி அமைக்க வைப்பாங்க... இது இப்போ!”

- பழ.அசோக்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS‘`அந்தச் சென்னை ரியல் எஸ்டேட்காரர், என்னன்னு விளம்பரம் போட்டிருக்கார்?”
“ ‘ஜோலார்பேட்டை தண்ணீர் ரயில் வந்து நிற்கும் இடத்துக்கு வெகு அருகில் அபார்ட்மென்டுகள் விற்பனைக்கு இருக்கு’ன்னு!”

- வி.சி. கிருஷ்ணரத்னம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
“டாக்டர், பில் மாறிப்போச்சு... இது என் பில் இல்லே.’’
“ஆபரேஷன்கூடத்தான் மாறிப்போச்சு, இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணினா எப்படி?”

- தஞ்சை சுபா
“சின்னச் சின்ன திருட்டு செய்திட்டிருந்த நீ ஏன் திடீர்னு பெரிய கொள்ளைகள் பண்ண ஆரம்பிச்சுட்டே?”
“என்ன பண்றதுங்க... காஸ்ட் ஆஃப் லிவிங் தாறுமாறா ஏறிப்போயிடுச்சே!”

- அஜித்