“என் கட்சியை விட்டு வேறு கட்சிக்குத் தாவும் தலைவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்... டாடா... பைபை... ஸீ யூ தேர் ஸூன்!”

- அஜித்

“நம்ம தலைவர் ஏன் கட்சியை ரெண்டா பிரிச்சிட்டார்?!”

“ரெண்டு மகன்களும் இளைஞரணித் தலைவர்

பதவி வேணும்னு அடம்பிடிக்கிறாங்களாம்..!”

- கோவை.நா.கி.பிரசாத்

“என்னங்க... நம்ம பையன் உங்ககூட

தனியா கொஞ்ச நேரம் பேசணுமாம்!”

“சாயந்திரம் கூட்டத்துக்கு வரச் சொல்லு!”

- அஜித்

“உங்க வீட்ல புடவை திருடினது பெண்தான்னு

எப்படிச் சொல்றீங்க?”

“புடவைக்கு மேட்ச்சான கலரில்

பாசிமாலையும் திருடு போயிருக்கு ஏட்டய்யா!”

- எஸ்.முகம்மது யூசுப்.

“உங்க கிளினிக்குக்கு ஒரு வருசமா வர்றேன்...

நல்ல இம்ப்ரூவ்மென்ட் தெரியுது டாக்டர்..!”

“என் மருத்துவம் அப்படி..!”

“அதில்லே டாக்டர்... ஒரு வருசத்துக்குள்ள நாலு ஆம்புலன்ஸ் வண்டி வாங்கிட்டீங்களே!”

- வேம்பார் மு.க.இப்ராஹிம்

“சென்னைக்குப் பக்கத்துல நல்ல வீட்டுமனைகள் இருக்கு. பார்க்கிறீங்களா..?”

“கல்குவாரி பக்கத்துல இருந்தா சொல்லுங்க...பார்ப்போம்..!”

- வேம்பார் மு.க.இப்ராஹிம்

“வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்தா

என்ன தண்டனை தெரியுமா?”

“என்ன தண்டனை?”

“உடனே டெல்லி கட்சியில போய்ச் சேர்ந்துடணும்!”

- எஸ்.முகம்மது யூசுப்

“அதிக பவுண்டரிகளை அடித்தவர்களுக்கு எப்படி உலகக்கோப்பை கொடுத்தார்களோ அதேபோல, அதிகமுறை தேர்தலில் நின்று தோற்ற எங்கள் தலைவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன்!”

- மகிழினி மணி.எம்.