சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

"கூட்டம் வரும்வரை காத்திருக்கத் தயார் என்று தலைவர் சொன்னது உண்மைதான்.

அதற்காக, நான்கு மாதங்கள் கழித்து இதே மைதானத்தில் பாம்பே சர்க்கஸ் நடக்க இருக்கிறது...

அதுவரையில் காத்திருங்கள் என்று சொல்வதை எப்படி அவரால் சகித்துக்கொள்ள முடியும்?"

- அஜித்

ஜோக்ஸ் - 1

"ஏம்பா, ஒட்டுமொத்தமா எப்படி எல்லாத் திருடனுகளும் ஒரே இடத்திலே சிக்குனீங்க...?"

"எல்லோரும் திருட்டு ஒத்திகைப் பயிற்சியிலே ஈடுபட்டிருந்தோம்..."

- பழ.அசோக்குமார்

ஜோக்ஸ் - 1

“நம்மிடம் போர்க்கருவிகள் இருக்காதுன்னு எதிரி எப்படி அனுமானித்தான் அமைச்சரே?"

"ஆயுதங்கள் விற்பனைக்குன்னு, `ஓஎல்எக்ஸ்'ல நாம போட்டதை எதிரியும் பார்த்திருப்பான் மன்னா!"

- வி.சி. கிருஷ்ணரத்னம்

ஜோக்ஸ் - 1

"என் மனைவி என்னைக் கொல்லப் பார்க்கறா டாக்டர்!"

"எதை வெச்சுச் சொல்றீங்க?"

"அவதான் என்னை இந்த ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணினா!”

- அஜித்