"மன்னா என் பாட்டில் சொற்குற்றமா, பொருட்குற்றமா?"
"நீங்க பாடணும்-னு நெனச்சதே குற்றம்தான்!"

- ப்ரணா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS``மன்னர் அரண்மனை வைத்தியருக்கு சம்பளம் போக தனியா வேற கவனிக்கிறாரே ஏன்?’’
``போர் வரும்போதெல்லாம் மன்னருக்கு குடல்புண், வயிற்று வலி, காய்ச்சல்னு பொய் மெடிக்கல் சர்ட்டிபிகேட் கொடுத்து மன்னரை போருக்குச் செல்லாமல் காப்பாத்துறாரே!’’

- எஸ்.முகம்மது யூசுப்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
"சிசிடிவி கேமராவை வீட்டு மொட்டை மாடியில வெச்சிருக்கீங்களே எதுக்கு..?"
"அங்கேதானே சின்டெக்ஸ் டேங்க் இருக்கு..!’’

- வேம்பார் மு.க.இப்ராஹிம்
"உங்க மனைவி அத்தனை பாத்திரத்தையும் உங்க மேல விட்டெறிஞ்சப்போ நீங்க ஏன் சமையல் அறையை விட்டு ஓடல...?"
"இது பவர் பிளே... இந்த எல்லைக்கு உள்ளே தான் நிக்கணும்னு கண்டிஷன் போட்டுட்டா."

- அதிரை யூசுப்