தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

“தலைவருக்கு இந்தத் தடவையும் நம்பிக்கை இல்லேன்னு எப்படிச் சொல்ற?!”

“அச்சச்சோ! ஆபரேசன் ஆள் மாறி நடந்திருச்சே!”

“சத்தம் போடாதே! டாக்டரே ஆள்மாறாட்டம் செய்து படிச்சவர்தான்!”

ஜோக்ஸ் - 1

- கி.ரவிக்குமார்

“அந்தப் பத்திரிகையில நான் நடிச்ச படத்துக்கு விமர்சனம் எழுதறப்ப என்னை டாக்டராகச் சொல்லியிருக்காங்களே... ஏன்?”

“நடிக்க வரலைன்னா டாக்டராகியிருப்பேன்னு ஒரு பேட்டியில சொல்லியிருந்தீங்கில்ல மேடம்... அதான்!”

ஜோக்ஸ் - 1

- மலர்சூர்யா

“தலைவருக்கு இந்தத் தடவையும் நம்பிக்கை இல்லேன்னு எப்படிச் சொல்ற?!”

“பிரசாரத்துக்கு வரமாட்டேன்.. ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’கிறாரே!”

ஜோக்ஸ் - 1

- நெல்லை குரலோன்

"தலைவர் கொக்கு மாதிரி காத்திருப்பாரா, எதுக்கு...?"

"ஆத்துல தண்ணி வத்திப்போனதும் உடனே மணல் அள்ளக் கிளம்பலாமுன்னுதான்..."

ஜோக்ஸ் - 1

- இராமனூத்து த.ஆறுமுகத்தாய்