"இந்தத் தமிழ் அகராதியை மன்னர்தான் எழுதியுள்ளார் என்று உனக்கு எப்படித் தெரியும்?"
"போருக்கு அர்த்தமாக இரக்கம், பயம், கனிவு, ஓடுதல், ஒளிந்துகொள்ளல், பதுங்குதல் என்றெல்லாம் போட்டிருக்கிறதே!"

- அஜித்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS"நதிப் பங்கீடு பேசப்போன தலைவர் என்ன பேசினாராம்!"
" ‘தண்ணி உனக்கு, மணல் எனக்கு'ன்னு பேசி முடிச்சுட்டாராம்!"

- கி.ரவிக்குமார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
" ‘எல்லாத் தொகுதியிலும் நானே நிக்கறதா நினைச்சு ஓட்டு போடுங்க' என்று கடந்த தேர்தலில் சொல்லியதற்காக, இப்போது தலைவர்மீது ஆள் மாறாட்ட வழக்கு போடுவது அரசியல் பழிவாங்குதலின் உச்சமாகும் என்பதை..."

- அஜித்
"ரெண்டு மாசத்துக்கு முன்ன திருட்டு போன வெங்காய மூட்டைக்கு இப்ப வந்து புகார் தர்றியேப்பா..?"
"இப்படியொரு விலை வரும்னு அப்ப தெரியாதுங்களே..."

- அதிரை யூசுப்