“சி.பி.ஐ ரெய்டு காரணமாக அவசரமாக நான் வேறு கட்சிக்கு தாவ வேண்டியிருப்பதால், இதுவே இந்தக் கட்சியில் நான் பேசும் கடைசிக் கூட்டம். அடுத்து வேறு கட்சிக் கூட்டத்தில் சந்திப்போம் என்பதைச் சொல்லி விடைபெறுகிறேன்...”
- அஜித்

``ஆபரேஷனுக்குப்பிறகு நீங்க நடந்தே வீட்டுக்குபோகலாம்!’’
``ஆட்டோவுக்கு கூட பணம் இருக்காதா டாக்டர்?’’
- அதிரைபுகாரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS``எங்கள் தலைவர் மீது செருப்பு வீசியது மட்டுமல்லாமல் அந்த செருப்பில் `அன்பளிப்பு ராமசாமி’ என்று எழுதி சுயவிளம்பரம் தேடிய எதிர்கட்சியினரை இந்த கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறேன்!

- எஸ்.முகம்மது யூசுப்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
``சர்வர், சாப்பாடு என்ன விலை?’’
``அளவுத் தண்ணி சாப்பாடு நூறு ரூபாய். அன்லிமிடெட் தண்ணி சாப்பாடு இருநூறு ரூபாய் சார்!’’
- எஸ்.முகம்மது யூசுப்

``எங்கள் மெகா கூட்டணியைத் தோற்கடித்ததால்தான் வானில் மேகக்கூட்டணி உருவாகவில்லை என்பதைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்…”
- தஞ்சை தாமு
"அரசியலிலும்,சினிமாவிலும் தலைவர், தல, தளபதின்னு பலர் இருப்பதால், இன்று முதல் நம் தலைவர், அரசியலின் "வால்"என அழைக்கப்படுவார் என்பதை..."
- வெ.ராம்குமார்

“சென்னைக்குப் பக்கத்துல ஒரு மனை இருக்கு. பார்க்கிறீங்களா?”
“எப்ப வந்தா பார்க்கலாம்?”
“காலைல தஞ்சாவூர் வந்துடுங்க. பார்த்துடலாம்.”
- அஜித்