
News
சீன அதிபர்கிட்ட நம்ம தலைவர் என்ன கோரிக்கை வைக்கப்போறாராம்..?

"எங்க கட்சியிலே வாரிசு அரசியலை ஒழிக்கிறதுக்காக ஒரு கமிட்டி அமைச்சிருக்காங்க..."
"பரவாயில்லையே..."
"அதுக்கு எங்க தலைவரின் மகன்தான் அமைப்பாளர்..."
- அதிரை யூசுப்

"தலைவர் ஏன் இந்தக் கூட்டத்தில் எதுவுமே பேசல?"
"புரட்டாசி மாதத்தில் எந்த உயிரையும் கொல்ல மாட்டாராம்."
- மாணிக்கம்

"அவர் போலிச் சாமியார்தான்னு கன்ஃபார்மா தெரிஞ்சுபோச்சு...!"
"எப்படி.?"
"ஒரு வரம் வேண்டும் சுவாமி' ன்னு கேட்டதுக்கு, கையில ஏகப்பட்ட வரன் இருக்கு, எப்படிப்பட்ட வரன் தேவைன்னு கேட்டாரே..!’’
- வி.ரேவதி, தஞ்சை

"சீன அதிபர்கிட்ட நம்ம தலைவர் என்ன கோரிக்கை வைக்கப்போறாராம்..?"
"ஹோட்டலில் சைனீஸ் ஐட்டங்களோட விலையைக் குறைக்க உத்தரவு போடணுமாம்..."
- பழ.அசோக்குமார்