Published:Updated:

நீங்க சிரிச்சா தீபாவளி!

 நீங்க சிரிச்சா தீபாவளி!
பிரீமியம் ஸ்டோரி
நீங்க சிரிச்சா தீபாவளி!

ஜோக்ஸ் எழுத்தாளர்களுக்கு என்று தனியுலகம் இருக்கிறது. அங்கே ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட மாமன்னர்கள் புறமுதுகு காட்டி ஓடிவந்து பதுங்குகுழியில் படுத்துக் கொள்வார்கள்.

நீங்க சிரிச்சா தீபாவளி!

ஜோக்ஸ் எழுத்தாளர்களுக்கு என்று தனியுலகம் இருக்கிறது. அங்கே ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட மாமன்னர்கள் புறமுதுகு காட்டி ஓடிவந்து பதுங்குகுழியில் படுத்துக் கொள்வார்கள்.

Published:Updated:
 நீங்க சிரிச்சா தீபாவளி!
பிரீமியம் ஸ்டோரி
நீங்க சிரிச்சா தீபாவளி!

டாக்டர்கள் தப்புத்தப்பாய் ஆபரேஷன் செய்வார்கள். யாருமே இல்லாத டீக்கடையில் தாராளமாய் டீ ஆற்றுவார்கள். நாடி, நரம்பு, ரத்தம், விரல் நகம், சலூன்கடையில் கத்தரிக்கப்படும் முடிவரை ஜோக்வெறி ஏறிக்கிடக்கும் ஜோக்ஸ் எழுத்தாளர்களைச் சந்திக்கவைத்தேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“எந்த நேரத்தில் உங்களுக்கு ஜோக் வரும்?”

கிணத்துக்கடவு ரவி: “நான் 1977 முதலாக பத்திரிகைகளுக்கு ஜோக்ஸ் எழுதிட்டு வர்றேன். இந்த நேரம்னு எல்லாம் கிடையாது. ஐந்தாண்டு களுக்கு முன்பு எனக்கு ஆஞ்சியோப்ளாஸ்ட் பண்ணினாங்க. அப்போ ஐ.சி.யூ-வில் இருக்கும்போதும் ஜோக்ஸ் பற்றித்தான் நினைத்துக்கொண்டே இருந்தேன்.”

 நீங்க சிரிச்சா தீபாவளி!

அஜித்: “ஒரு நாளைக்கு நாலு, அஞ்சு ஜோக்குகள் எழுதுவேன். பொதுவாக இரவில்தான் ஜோக்குகள் எழுதுவேன். பகலில் அதிகம் எழுதத்தோணாது.”

கி.ரவிக்குமார்: “நான் நெய்வேலி தெர்மல் ப்ளான்டில் மூன்று ஷிப்ட்களிலும் மாறிமாறிப் பணியாற்றுகிறேன். எனக்கு ஜோக் எழுத குறிப்பிட்ட நேரம் என்று எதுவும் கிடையாது. ஜோக் மனதில் தோன்றினால் உடனே எழுதிவைத்துக்கொண்டு, மொத்தமாக ஐந்து ஜோக்குகள் சேர்ந்ததும் பத்திரிகைக்கு அனுப்புவேன். நடுராத்திரி ஒரு மணி, இரண்டு மணிக்குக்கூட ஜோக்குகளை அனுப்பியிருக்கிறேன். என் மனைவி பெயரில் உமா மகேஸ்வரி என்ற பெயரிலும் எழுதியிருக்கிறேன்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“பத்திரிகையில் முதல் ஜோக் வந்தபோது உங்கள் மனநிலை என்ன?”

அஜித்: “2000-த்தில்தான் எனது முதல் ஜோக் வந்தது. அப்போது அஜித்லால் என்ற முழுப்பெயரில் எழுதிக்கொண்டிருந்தேன். முதன்முதலில் ஆனந்த விகடனில் எனது ஜோக் வந்தபோது, நமக்குப் பிடித்த கல்லூரியில், பிடித்த கோர்ஸ் கிடைத்தால் என்ன சந்தோசம் கிடைக்குமோ அதை உணர்ந்தேன்.”

கி.ரவிக்குமார்: “முதன்முதலில் எனது ஜோக் வந்தபோது, ஒவ்வொருத்தரையும் விரட்டி, மிரட்டி அதைக் காட்டி சந்தோஷப்பட்டேன்.”

நா.கி.பிரசாத்: “எந்த ஜோக் எழுத்தாளருக்கும் விகடனில் அவரது ஜோக் வருவதுதான் உச்சபட்ச இலக்காக இருக்கும். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன்.”

“ஜோக் எழுதுவதே கதியாக இருக்கிறீர்களே, வீட்டில் என்ன நிலவரம்?”

கி.ரவிக்குமார்: “நான் ஜோக் எழுதுறதை மனைவி தப்பா நினைக்கக்கூடாதுன்னு நான் திருமணமானதிலிருந்து ஐந்தாண்டுக்காலத்துக்கு மனைவியின் பெயரில்தான் எழுதி அனுப்பிட்டிருந்தேன். என் மனைவிதான் முதல் வாசகியே. ஜோக்குகளை மனைவியிடம் காட்டிட்டுதான் பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். ஜோக் வராவிட்டால், “என்னங்க, அவ்ளோ அனுப்பியும் ஒண்ணுகூடவா வரல?” என்று ஆதங்கப்படுவார். ஜோக் வெளியானால் என்னைப்போலவே அவங்களும் சந்தோஷப்படுவாங்க!”

நா.கி.பிரசாத்: ஒரு பத்திரிகை நடத்திய ஹைக்கூ போட்டிக்கு எழுதியனுப்பி அதற்கு மிக்ஸி பரிசு கிடைத்தது. அந்தப் போட்டிக்கு என் மனைவியின் பெயரில் அனுப்பியிருந்தேன். அந்தப் பரிசு கிடைத்தபிறகு நான் சும்மா இருந்தால்கூட ‘ஏன் சும்மா உக்காந்துகிட்டிருக்கீங்க, எதாவது எழுதலாம்ல!’ என்று மனைவி ஊக்கப்படுத்துவார்!

வெ.ராம்குமார்: “பொதுவா எல்லா ஜோக் ரைட்டர்ஸ் வீட்டுலயும் சொல்லுறது என்னன்னா, பேருதான் ஜோக் எழுத்தாளர், ஆனால் சிடுசிடுன்னுதான இருக்கீங்க, என்பாங்க!”

“ஜோக்ஸ் எழுதுறவங்களுக்கு சமூகப்பொறுப்பு தேவையா?”

அஜித்: “கண்டிப்பா தேவை. நான் ஆபாச இரட்டை அர்த்த ஜோக்ஸ் எதுவும் எழுத மாட்டேன். மூன்றாம் பாலினத்தவரைக் கிண்டலடிக்கும் ஜோக்ஸ் யாரும் எழுதுவதில்லை. இப்பல்லாம் நிறம், உருவத்தை வைத்து கேலி செய்யும் ஜோக்குகளை அதிகமா யாரும் எழுதுவதில்லை.”

கி.ரவிக்குமார்: “லேட்டஸ்ட்டாக இருக்கும் ஏதேனுமொரு சமூகப்பிரச்னை அல்லது சமூக அவலத்தை நேரடியாகச் சொல்லும் போது பெரிய எதிர்ப்பு எழக்கூடும். ஆனால் அதையே மன்னர் ஜோக்காகவோ, மருத்துவர் ஜோக்காகவோ நையாண்டியாக மாற்றிச்சொல்லும்போது வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல அனைவரையும் சிந்திக்க வைக்கும். ஆனந்தவிகடனின் சிறப்புகளில் இதை முக்கியமானதாகப் பார்க்கிறோம்.”

“நீங்க ரொம்பவும் எதிர்பார்த்து எழுதிய ஜோக் பத்திரிகையில் வராமல் போனால் எப்படி ஃபீல் பண்ணுவீங்க?”

மலர்சூர்யா: “நான் ஒரு வாரத்தில் ஐந்து ஜோக்குகள் அனுப்பி ஐந்தும் வராமல்போனால் உடனே கடுப்பாகி, அடுத்த வாரத்தில் 10, 15 ஜோக்குகளாக அனுப்புவேன். எனது வருத்தமே போராட்ட உணர்வுபோல மாறிடும்.”

“நகைச்சுவை எழுத்தாளர்களில் ஏன் பெண்கள் இல்லை?”

மலர்சூர்யா: “எழுத்தில் மட்டுமா, சினிமாவில்கூட மனோரமா, கோவை சரளா தாண்டி நகைச்சுவை நடிகைகளே அதிகம் கிடையாதே!”

வெ.ராம்குமார்: “காமெடியாக எழுதினால் சமூகத்தில் எதாவது தப்பாப் பார்ப்பாங்களான்னு தயக்கத்தால்கூட எழுதாமல் இருக்கலாம்.”

 நீங்க சிரிச்சா தீபாவளி!

நா.கி.பிரசாத்: “வீட்டையும் கவனித்துக்கொண்டு எழுதவேண்டியிருப்பதால் அவர்களால் மனதை ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு காமெடியா எழுத முடியலைன்னு நினைக்கிறேன்.”

கி.ரவிக்குமார்: “இப்ப ஃபேஸ்புக்கில் பலரும் நகைச்சுவையாகவும், சமூகக்கருத்துகளாகவும் எழுதி பட்டையக் கிளப்புறாங்க!”

“பத்திரிகைகளுக்கு ஜோக்குகள் அவசியமா?”

கிணத்துக்கடவு ரவி: “எந்தப் பத்திரிகையானாலும் ஜோக்குகளைத்தான் அனைவரும் முதலில் விரும்பிப் படிப்பாங்க.”

நா.கி.பிரசாத்: “பாயசத்துல முந்திரி மாதிரிதான். பத்திரிகைகளுக்கு ஜோக்ஸும் முக்கியம்!”

“இப்போது மீம்ஸ் காலமாக இருக்கிறது. இதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

மலர்சூர்யா: “நானும் மீம்ஸ் கிரியேட்டராக மாறி மீம்ஸ் பண்ணியிருக்கேன். என்னோட மீம்ஸ் வைரலாகி பல பேரிடம் சுற்றி, எனக்கே திரும்ப வாட்ஸ் அப்ல வந்திருக்கு!”

வெ.ராம்குமார்: “மீம்ஸ்களில்கூட எங்களுடைய ஜோக்குகளைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். மீம்ஸ் மட்டுமல்ல, தொலைக்காட்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடி பண்ணி பிரபலமானவர்கள்கூட எங்களது ஜோக்குகளைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம்.”

ஆசிரியர் குழு குறிப்பு : “சூப்பர் பாஸ்! உங்கள் சேவை எங்களுக்கு எப்போதும் தேவை. தொடர்ந்து ஆனந்த விகடனுக்கு எழுதி அனுப்புங்கள். ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள். வெங்காயம் விலை ஏறினால் உடனே,

“அது வசதியான கல்யாணம்னு எப்படிச் சொல்றே?”

“பந்தியில் வெங்காய சாம்பார் போடறாங்களே?” என்று ஜோக் எழுதுவது, தக்காளி விலை ஏறினால் வெங்காய சாம்பாரைத் தக்காளிச் சட்னியாக மாற்றுவது என்பதுபோன்ற க்ளிஷேக்களை மட்டும் தவிர்க்கலாமே! டீல் ஓகே?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism