Published:Updated:

அன்புடன் தண்டிப்போம்!

யூத்ஃபுல் இயக்குநர்கள்
பிரீமியம் ஸ்டோரி
யூத்ஃபுல் இயக்குநர்கள்

அமிதாப் பச்சன் சாஃப்ட்டா நடிச்ச பிங்க் ரீமேக்லயே அஜீத்தை வெச்சு ஸ்போர்ட்ஸ் பைக்கால இரும்பு கேட்டைப் பேர்த்து எடுத்தீங்க.

அன்புடன் தண்டிப்போம்!

அமிதாப் பச்சன் சாஃப்ட்டா நடிச்ச பிங்க் ரீமேக்லயே அஜீத்தை வெச்சு ஸ்போர்ட்ஸ் பைக்கால இரும்பு கேட்டைப் பேர்த்து எடுத்தீங்க.

Published:Updated:
யூத்ஃபுல் இயக்குநர்கள்
பிரீமியம் ஸ்டோரி
யூத்ஃபுல் இயக்குநர்கள்
இன்றைய தேதியில் தமிழ் சினிமாவைத் திரும்பிப் பார்க்கவைக்கும் பிஸியான யூத்ஃபுல் இயக்குநர்களின் க்ளிஷே அட்ராசிட்டிகளுக்கு ‘அன்புடன்’ என்ன தண்டனை கொடுக்கலாம்னு யோசிச்சபோது...
அன்புடன் தண்டிப்போம்!

அட்லீ

பழைய தமிழ் சினிமால ஆரம்பிச்சு புது பாலிவுட் படம் வரைக்கும் சகட்டுமேனிக்கு ரீமேக் ரைட்ஸ் வாங்காமலேயே அப்புடியே படம் எடுக்குற உங்களைத் தண்டிக்க ஆளே இல்லையா? சீக்கிரமே காப்பி ரைட்ஸ் சட்டத்துல உங்களைப் புடிக்க ஸ்பெஷல் டீம் விஷால் தலைமையில வரும் சார்.

தண்டனையா உங்கள டிவிடி இல்லா இருட்டறையில் புடிச்சுப் போடணும் அட்லீ சார். ‘என்னது சட்டம்... இருட்டறை... புடிச்சிட்டேன்...சட்டம் ஒரு இருட்டறை படத்தைப் புதுசா பண்ணப்போறேன்’னு கிளம்பிடாதீங்க.

தமிழனோட பாடி தாங்காது சார்!

அன்புடன் தண்டிப்போம்!

கார்த்திக் சுப்புராஜ்

வாங்க டான் சார். ‘பீட்சா’ படத்தைப் பார்த்துட்டு ‘தமிழ் சினிமாவோட தேவதூதன் வந்துட்டான்’னு சில்லறையைச் சிதறவிட்டவய்ங்கள்ல நானும் ஒருவன். உங்க வாழ்க்கையில டானைப் பார்த்தீங்களோ இல்லையோ டான் டான்னு டான் படமா சுட்டுத் தள்றீங்க போங்க. போதும் சார் லென்த்தா போய்க்கிட்டிருக்கு. இப்பல்லாம் உங்க டான் படங்களைப் பார்த்தா அலர்ஜியாகிடுது. பின்ன என்ன சார்... காந்தி மகான்னு ஹீரோவுக்குப் பேரும் வெச்சு சரக்கு சாம்ராஜ்ய டானா காட்டுறதெல்லாம் எங்களுக்கு ஹேங் ஓவர் ஆகுமா ஆகாதா?

‘டான் படங்களை இனி எடுக்கவே மாட்டேன்’னு பாண்ட் பேப்பர்ல எழுதிக்கொடுங்க கார்த்தி சார்!

அன்புடன் தண்டிப்போம்!

வெங்கட் பிரபு

வாங்க வி.பி சார்... உங்க படத்துல வர்ற பார்ட்டில காட்டுறதெலாம் ஜீரா தண்ணிதானே? ஆனா, இது தெரியாம உங்களைத் தப்பா நினைச்சிட்டேன். உங்க படத்தைப் பார்த்துட்டு வீட்டுக்கு வந்தா வீட்டுல ஊதச் சொல்றாங்க சார். சரி, தீன்னு சொன்னா சுடவா போகுதுன்னு தெளிவாப்போய் படம் பார்த்துட்டு வீட்டுக்கு வந்தா கையெலாம் நடுங்குது சார்... போதாக்குறைக்கு உங்க தம்புடு பிரேம்ஜி காட்டுற விரல் வித்தை வேற தொத்து வியாதி மாதிரி என் செல்ஃபிலயும் தொத்திக்கிச்சு சார். வீட்டுல சாவிக்கொத்தெல்லாம் எடுத்துக் கையில கொடுக்குறாங்க. ஒரே அசிங்கமாப்போச்சு வி.பி சார். கொஞ்சநாள் பார்ட்டி இல்லாம படம் எடுங்க. என்னது... அடுத்து ‘பார்ட்டி’ன்னே படம் வருதா? அட போங்க சார்... அட்லீஸ்ட் உங்க தம்பிகூட நீங்க படம் பண்ணமாட்டேனாச்சும் வாக்கு கொடுங்க. வாய்ப்பில்லையா... விரல் வித்தையையாச்சும் காட்டச் சொல்லாதீங்க. என்ன கொடுமை வி.பி சார்!

அன்புடன் தண்டிப்போம்!

ஹெச்.வினோத்

அமிதாப் பச்சன் சாஃப்ட்டா நடிச்ச பிங்க் ரீமேக்லயே அஜீத்தை வெச்சு ஸ்போர்ட்ஸ் பைக்கால இரும்பு கேட்டைப் பேர்த்து எடுத்தீங்க. அப்பவே சுதாரிச்சிருக்கணும். கண்டிக்காம விட்டதுக்கு இப்ப உங்களால நாலு பஸ்ஸும், நானூறு பைக்கும் காயலான்கடைக்கு வந்திருக்கு சார். விற்குற விலை வாசில பழைய இரும்புக்கடையை வாழ வைக்கிற உங்க நல்ல உள்ளம் தெரியுது. அதுக்காக இப்படியா..? அளவற்ற வலிமை போனி கபூர் மனசுதான்னு கண்டுகொண்ட தினம் பிப்ரவரி 24.

உங்க படத்தைப் பார்த்துப்புட்டு டிவிஎஸ் 50-லகூட ‘சாத்தான் ஸ்லேவ்’ ஸ்டிக்கரை ஒட்டிக்கிட்டுத் திரியிறானுக சார்... டேய் யார்ரா நீங்கெல்லாம்னு கேட்டா, ‘மே பேகுனாப் சாப்’னு கலாய்க்குறானுக சார். அப்புறம் சார்... இனிமே ஸ்டேட், நேஷனல் ஹைவேயை வாடகைக்கு எடுத்து ஓடுற பஸ்ஸுல உள்ளே வெளியே தாவி விளையாடுற வித்தைலாம் காட்டாதீங்க. பார்க்குற எங்களுக்கு வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை உருண்டு வருது. இனி அப்படிக் காட்டுனீங்கன்னா ‘எ பிலிம் பை திலீப் சுப்பராயன்’னு சென்சார்ல போட்டுவிட சட்டம் கொண்டு வரச் சொல்லிடுவோம் பார்த்துக்கங்க!

அன்புடன் தண்டிப்போம்!

லோகேஷ் கனகராஜ்

கல்யாண ஜானவாசக் கார்ல எல்லோரையும் பொண்ணு மாப்பிள்ளையோட சேர்த்து ஏத்திக்கிற மாதிரி ‘போண்டா மணி ஆன் போர்டு’, ‘சிசர் மனோகர் ஆன் போர்டு’னு போட்டு ஃபுட் போர்டு அடிக்க விடுறதை நிறுத்துங்க முதல்ல. இப்படித்தான் ஆண்டனி வர்க்கீஸு பேருலாம் மாஸ்டர்ல ஆன் போர்டு லிஸ்ட்ல இருந்துச்சு. அப்புறம் காணாமப் போச்சு. லேடி பேர்டு ஆண்ட்ரியாவை ஆன்போர்டுல போட்டு ஃபுட்போர்டு அடிக்க விட்டதெல்லாம் மன்னிக்க முடியாது மிஸ்டர் லோகி. ஆண்ட்ரியாவை விடுங்க... ஹீரோயின் மாளவிகா மோகனனுக்கே உங்க படத்துல நடிக்க ஒண்ணும் இல்லை. உங்களுக்கு அஞ்சு நிமிஷம் டைம் தர்றேன். ஹீரோயின் கேரக்டரை முழுசா எழுதாமலே படம் புடிக்கிற உங்களுக்கு கருடபுராணத்துல என்ன தண்டனை கொடுக்கலாம், நீங்களே சொல்லுங்க! முக்கியமான விஷயம், மிஷ்கினுக்கு அப்புறம் ராத்திரி சீனை அதிகம் காட்டுனது நீங்கதான். ஸ்க்ரீன்ல சோடியம் வேப்பர் லைட்டைப் பார்த்துப் பார்த்து எல்லாமே மஞ்சளா தெரியுது. எனக்கு மஞ்சள் காமாலையான்னு பயமே வந்துருச்சு. கொஞ்சநாள் நைட் ஷூட்டுக்குத் தடை போடணும். மீறினா தடால உள்ள போட்டுருவோம் பார்த்துக்கங்க!

அன்புடன் தண்டிப்போம்!

கௌதம் வாசுதேவ் மேனன்

காபி ஷாப்ல சீன் வெச்சா சீனாகிடும்னு சொல்லித்தான் உங்களை இனிமேல் எந்த புரொடியூசரையும் புக் பண்ணச் சொல்லணும். பாதி இங்கிலீஷ் படம் எடுத்தாலும் தூய தமிழ்ல டைட்டில் வைக்கிறதும் தாவாங்கட்டையை கையால முட்டுக்கொடுத்து யோசிச்சுப் படம் எடுக்குறதெல்லாம் சரி... படத்தை சீக்கிரம் கண்ணுல காட்டணுமா இல்லையா? துருவ நட்சத்திரம் மாதிரி வெறும் டீஸர் மட்டும் விட்டுட்டு சைலன்டா இருந்தா ஸ்கெட்ச் போட்டு ஆளைத் தூக்கிருவோம். லவ் படம் எடுக்குறதெல்லாம் லிவருக்கும் ஹார்ட்டுக்கும் நல்லதுதான். அதுக்காக வாய்ஸ் ஓவர்லயே, ‘ஒரு மெல்லிசான கோடு... கோடு மேல ரோடு... இதை நான் சொல்லியே ஆகணும்... ஐ அம் ஃபால் இன் லவ் வித் யூ!’னு பேசிக்கிட்டே இருந்தா கண்டிப்பா ‘வீ வில் பேன் யூ!’ன்னு உங்க வீட்டு முன்னாடி நின்னு கோரஸா தர்ணா பண்ணிட்டு வருவோம். ஸ்கிரிப்ட்டே இல்லாமப் படம் புடிக்கப் போறதெல்லாம் ஓகே சார். அதுக்காக படத்தை எப்படியாச்சும் முடிச்சே ஆகணும்னு சம்பந்தமே இல்லாம, ஹீரோவே ஒரு போலீஸ்தான்னு அதிர்ச்சி க்ளைமாக்ஸ் வெச்சி எங்களை தியேட்டர்ல செஞ்சீங்கன்னா அமுதனையும் இளமாறனையும் விட்டுத் தூக்கிருவோம், பீ கேர்ஃபுல்!