Published:Updated:

'சார்பட்டா' முதல் 'தர்பார்' வரை - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பலே 'பர்த் டே' அவதாரங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

’'ஆடி என்றால் ஆண்டவருக்கு மட்டும் திருவிழா அல்ல, புதுச்சேரியை ஆண்டவருக்கும் திருவிழாதான்'', '' 'சார்பட்டா'வின் ரங்கன் வாத்தியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’' போன்ற வாசகங்களுடன் முதல்வர் ரங்கசாமிக்காக வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் புதுச்சேரியின் வீதிகளை ஆக்கிரமித்திருக்கின்றன.

புதுச்சேரியில் மது வகைகள் மற்றும் அழகிய வீதிகளுக்கு இணையாக பேசப்படும் ஒரு விஷயம் முதல்வர் ரங்கசாமிக்கு அவரது தொண்டர்களால் வைக்கப்படும் பிறந்தநாள் பேனர்கள். ரங்கசாமியின் மீதான அன்பை வித்தியாசமாக தெரிவிக்கிறேன் என்று அடைமொழிகளில் ஆரம்பித்து, மனதுக்கு பிடித்த நடிகர்களை போலவே ரங்கசாமியை மார்ஃபிங் செய்து லட்சக்கணக்கில் செலவு செய்து நகர் முழுவதும் பேனர்களாக வைப்பார்கள்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

''ஆடி என்றால் ஆண்டவருக்கு மட்டும் திருவிழா அல்ல, புதுச்சேரியை ஆண்டவருக்கும் திருவிழாதான்'','' புதுச்சேரி அரசியலின் பாகுபலியே'', '' 'சார்பட்டா'வின் ரங்கன் (ரங்கசாமி) வாத்தியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்'’ போன்ற வாசகங்களுடன் முதல்வர் ரங்கசாமிக்காக வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் புதுச்சேரியின் வீதிகளை ஆக்கிரமித்திருக்கின்றன.

ஒபாமாவுடன் ரங்கசாமி இருப்பதை போன்றும், காக்கி சீருடையில் 'தர்பார்' ரஜினியாகவும் பரிணமித்து நிற்கும் ரங்கசாமி, 'சார்பட்டா' திரைப்படத்தில் ஆரியா போன்று ரங்கசாமி பாக்சிங் கிளவுசுடன் வைக்கப்பட்டுள்ள பேனர்களை எல்லாம் பார்த்து பொதுமக்கள் சிரித்தபடியும், ரசித்தபடியும் செல்கின்றனர். காமராஜர் மற்றும் நடிகர் சிவாஜி கணேசனுடன் ரங்கசாமி அமர்ந்திருப்பது, மதிய உணவு திட்டத்தில் காமராஜருடன் அமர்ந்து ஒன்றாக உணவருந்துவது போன்ற காட்சிகள் பேனர்களில் அதிகம் இடம்பெற்றிருக்கிறது. 'அண்ணாத்த' ரஜினியாகவும், 'சர்கார்' விஜயாகவும், கிருஷ்ணராகவும் தொண்டர்களுக்கு உபதேசம் செய்வதை போலவும், மல்யுத்த வீரராக மாறி எதிரிகளை பந்தாடுவதாகவும் தொண்டர்களின் கற்பனை ஓட்டத்தில் ரங்கசாமி பல்வேறு கதாபாத்திரங்களில் புதுச்சேரி முழுக்க வீற்றிருக்கிறார்.

'சார்பட்டா' முதல் 'தர்பார்' வரை -  புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பலே 'பர்த் டே' அவதாரங்கள்!

புதுச்சேரியில் பேனர் தடைச் சட்டம் அமலில் இருந்தாலும் ஆகஸ்டு 4-ம் தேதி ரங்கசாமியின் பிறந்தநாளுக்கு மட்டும் விதிவிலக்கு. அனைத்து சிக்னல்கள், புதுச்சேரியின் நுழைவு வாயில்கள் தோரணங்களை கட்டி விழாக்கோலம் பூண்டு இருக்கிறது. இப்படி வித்தியாசமாக பேனர் வைக்கிறேன் என்று சிலர் காமெடி செய்துவிடுவதும் உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவை ரங்கசாமியின் கவனத்துக்கு சென்றாலும், ''அன்பை எப்படி தெரிவித்தால் என்ன?'’ எனக்கூறி அவர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இப்படி தன்னை பல கோணங்களில் சித்தரித்து வைக்கும் பேனர் காட்சிகளை ரங்கசாமியும் உள்ளுக்குள் ரசிக்கிறார்.

புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சிக் கவிழ்ப்பு முதல் ரங்கசாமி பதவியேற்பு வரை! - பா.ஜ.க-வின் ரோல் என்ன?

தன் பிறந்தநாளுக்கு முன் இரவு நேரத்தில் ரகசியமாக வேறு ஒரு காரில் யாருக்கும் தெரியாமல் தொண்டர்கள், ஆதரவாளர்கள் வைத்திருக்கும் பேனர்களை ரசித்து பார்த்தபடி ரங்கசாமி செல்வது வழக்கமாம். இந்த முறை புதுச்சேரி சாமியின் பிறந்தநாள் ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவையும் தாண்டி மிகப்பிரமாண்டமாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு