Published:Updated:

`தயங்கினஜி'யின் போயஸ் கார்டன், கலாம்ஹாசனின் குழப்ப குல்ஃபி, பின்னே அந்த 'சிண்ணாத்த' ஷூட்டிங்!

'சிண்ணாத்த' ஷூட்டிங்!

மாடியின் விசாலமான ஹாலின் நடுவிலே ஒரு மேடை. அதில் உட்கார்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார் தயங்கினஜி. அருகில் தமிழருவி மூர்த்தியும், அர்ஜுன மணியனும் உட்கார்ந்திருந்தார்கள்.

`தயங்கினஜி'யின் போயஸ் கார்டன், கலாம்ஹாசனின் குழப்ப குல்ஃபி, பின்னே அந்த 'சிண்ணாத்த' ஷூட்டிங்!

மாடியின் விசாலமான ஹாலின் நடுவிலே ஒரு மேடை. அதில் உட்கார்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார் தயங்கினஜி. அருகில் தமிழருவி மூர்த்தியும், அர்ஜுன மணியனும் உட்கார்ந்திருந்தார்கள்.

Published:Updated:
'சிண்ணாத்த' ஷூட்டிங்!

போயஸ் கார்டனில் ஒரு வெள்ளை வீடு. பின்னிரவு நேரம். தொலைதூர நாய்களின் ஊளையைத் தவிர வேறு சத்தமில்லை.

கேட்டின் வெளிப்பக்கம் ஒரு பெரிய பூட்டுப் போடப்பட்டிருக்கிறது. அதில் “பூட்டை ஆட்டி வேதனைக்குள்ளாக்க வேண்டாம்” என்ற போர்டு தடுமாறித் தொங்குகிறது. முக்காடு போட்டபடி ஒரு உருவம் கேட்டுக்கு அருகில் வந்து கேட்டை மெதுவாகத் தட்டுகிறது.

‘பட் பட்’ உள்ளிருந்து ஒரு சின்ன ஓட்டை வழியாக வெளியே பார்த்த செக்யூரிட்டி “பாஸ்வேர்டு?” என்று கேட்டார். உருவம் “இப்போ இல்லன்னா எப்பவும் இல்ல...” என்றது.

அலுத்துக் கொண்ட செக்யூரிட்டி “யோவ் இது பழைய பாஸ்வேர்டுயா... அதல்லாம் இப்போ விட்டாச்சு... கிளம்பு கிளம்பு!” என்று ஓட்டையை சாத்த முயலவும், உருவம் முக்காட்டை விலக்கி, “என்னை நன்றாக உற்றுப் பார்..!” என்றது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உற்றுப்பார்த்த செக்யூரிட்டியால் உருவத்தை அடையாளம் காண முடிந்தது. “சிங்கம் சார் நீங்களா?” என்று பதைபதைத்து கதவை அகலத் திறக்கவும், 'சிண்ணாத்த' இயக்குநர் சிங்கம், முக்காடும் முதுகுமாக உள்ளே நுழைந்தார். உள்ளே ஏற்கெனவே குத்தவைத்து காத்திருந்த உதவி இயக்குநர்கள் எழுந்திருக்க, அனைவருமாக மாடிக்கு விரைந்து சென்றனர்.

மாடியின் விசாலமான ஹாலின் நடுவிலே ஒரு மேடை. அதில் உட்கார்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார் தயங்கினஜி. அருகில் தமிழருவி மூர்த்தியும், அர்ஜுன மணியனும் உட்கார்ந்திருந்தார்கள்.

'சிண்ணாத்த' ஷூட்டிங்!
'சிண்ணாத்த' ஷூட்டிங்!

பவ்யமாக உள்ளே நுழைந்த சிங்கம் தியானத்தைக் கலைக்க மனம் வராமல், அவராக வாய் திறந்து பேசட்டும் என்று அமைதியாக ஒதுங்கி நின்றார். அசிஸ்டென்ட், “சார்... அவரா வரட்டும்னு காத்திருந்தவன் நிலைமை எல்லாம் என்னாச்சுன்னு தெரியும்ல?” என்று மெதுவாக காதைக் கடிக்கவும், உஷாரான சிங்கம், முன்ஜாக்கிரதையாக டெலிகிராமில் டவுன்லோட் பண்ணி வைத்திருந்த 'விவேகம்' க்ளைமேக்ஸ் பாடலை மொபைலில் ப்ளே செய்ய, அந்தப் ‘படீர் தடீர்’ சத்தத்தில் திடுக்கிட்ட தயங்கினஜி, தூக்கத்திலிருந்து எழுந்தார்.

“வாங்க ஷக்கோதரா... வாங்க... உக்காருங்க...” வட்டமாக அனைவரும் நிலத்தில் உட்கார, கையோடு கொண்டு வந்திருந்த ஒரு பாக்கெட் ஆன்மிக பக்கோடாவை உடைத்து அசிஸ்டென்ட் டைரக்டர் ஒருவர் தட்டில் போட்டு நடுவில் தள்ளவும், உரையாடல் ஆரம்பமானது.

“சார்... மார்ச் 8 அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது” என சிங்கம் இழுத்தார்.

“நிச்சயமா... ஆனா என்ன சாக்கு சொல்றதுன்னுதான் யோசிச்சுட்டிருக்கேன்...” வெள்ளைத் தாடியைச் சொறிந்தார்.

“ஷூட்டிங் கட் பண்ணுறதுக்குத்தான் சாக்கு சொல்லுவாங்க. ஆனா, ஷூட்டிங் போறதுக்கு சாக்கு தேடுற முதல் ஆளுக நாமதான்ல?”

“இந்திய தேசிய வரலாற்றிலேயே இதேபோன்றதொரு அரிதானதும் ஆச்சர்யமானதுமான தருணம்...” என்று மணியருவி தமிழன் ஆரம்பிக்கவும், தயங்கினஜி அவரை அமைதியாக்கிவிட்டு “மீதி வேலைல்லாம் ஒகேதானே?” என்று கேட்டார்.

“ஆமா சார். அசிஸ்டன்ட்டுங்க ராப்பகலா உக்காந்து ஸ்கிரிப்ட் டயலாக்னு எல்லாம் எழுதிட்டாங்க...”

“எதுக்கு ஷிங்கம் மறுபடி.... அதெல்லாம் முதல்லயே எழுதியாச்சே...”

'சிண்ணாத்த' ஷூட்டிங்!
'சிண்ணாத்த' ஷூட்டிங்!

“இல்ல சார்... நீங்க அரசியலுக்கு வருவீங்கன்னு நம்பி, ‘கண்ணா நான் ஒரு தொகுதில நின்னா, 234 தொகுதிலையும் ஜெயிச்ச மாதிரி...’ டைப்புல படம் பூரா நாப்பத்திமூணு பன்ச் டயலாக் வெச்சுட்டேன். அதையெல்லாம் தூக்கிட்டு இப்போ, ‘அஷோகா ரோட் காரன் சொல்றான்... சிண்ணாத்த செய்றான்...’ மாதிரி சாஃப்டான டயலாக்கா மாத்த வேணாமா...”

“ஹாஹ் ஹாஹ் ஹா...” என்று வெடிச்சிரிப்பு சிரித்த தயங்கினஜி, “நான் என்னங்க, சாதாரண நடிகன்... நீங்க எழுதி தர்றதை பேசப் போறேன்... என்னோட சொந்தக் கருத்தையா சொல்றேன்?”

“சார்... அது பிரஸ் மீட்ல நீங்க பண்ணறது... இது சினிமா...”

“சரி சரி... அருவித்தமிழ், மணியன்.. நீங்க சொல்லுங்க... நான் மறுபடி ஷூட்டிங் போயாகணும்... ஆனா ஆல்ரெடி கொரோனானு சொல்லித்தான் கட்சிய, கட்சிங்கற என்னோட சொத்தைக் கலைச்சுட்டேன்... இப்போ கொரோனா இருக்கும்போது நான் ஷூட்டிங் போனா, ‘இப்போ மட்டும் இம்யூனிட்டி குறையலையா?’னு என்னோட கம்யூனிட்டிகாரனே கடிப்பான்... ஏதாச்சும் ஒரு சாக்கு ரெடி பண்ணியாகணும்!”

“உங்க நண்பர் கலாம்ஹாசன் மாதிரி ஏதாச்சும் பேசி குழப்பிடலாமே?”

“அதத்தான் ஆல்ரெடி ஒரு தடவை யூஸ் பண்ணிட்டோமே... ‘என்னுடைய அறிக்கை போல ஒரு அறிக்கை உலவுகிறது. அது என்னுடைய அறிக்கை இல்லை. ஆனால் அறிக்கையில் உள்ளதெல்லாம் உண்மை... ஆனால் என்னுடைய அறிக்கை என்பது பொய்... அது அறிக்கை என்பதே உண்மை’ன்னு குழப்பி குல்ஃபி சாப்பிட்டோமே!”

சிண்ணாத்த
சிண்ணாத்த

“ 'சிண்ணாத்த' ஷூட்டிங் வரச் சொல்லி ரசிகர்கள் எல்லாரும் சேர்ந்து போராட்டம் பண்ணுற மாதிரி ஏதாச்சும்...?” - இது அறிவுசார் மூர்த்தியின் ஐடியா.

“போராட்டம் போராட்டம்னா ஷூட்டிங் ஸ்பாட்டே காலியாகிடும்” என்ற கவலையில் அந்த ஐடியாவும் கைவிடப்பட்டது.

நேரம் கடந்துகொண்டிருந்தது. ஆன்மிக பகோடா காலியானது. ஐடியா வந்தபாடில்லை. பொழுது விடியத் தொடங்கிவிட்டது. சிங்கத்தின் வயிறு பசிக்க ஆரம்பித்தது. லேசுபாசாக ஜன்னலின் வழி எட்டிப் பார்த்த சிங்கத்தின் முகம் மலர்ந்தது.

“சார்... வெளியே ஒரு ஆயா விடியக் காலைலயே இட்லிக்கடை போட்டிருக்காங்க போல... நம்ம பையனை அனுப்பி ஆளுக்கு சூடா ரெண்டு இட்லி பார்சல் அள்ளிடவா?”

“சும்மா இருங்க ஷிங்கம்... அது அஷிங்கமா போயிடும். பெங்களூர்ல இருந்து பர்த்டேக்கு என்ன பார்க்க வந்த ஷக்கோதரி அவங்க. இன்னும் வீட்டுக்குப் போகாம அழுதுட்டிருக்காங்க. அதனாலதான் கேட்டை வெளியே பூட்டியே வெச்சிருக்கேன். அதை விட்டுட்டு நீங்க சொல்லுங்க... மத்த நடிகர்கள் எல்லாம் ரெடியா?”

“மீனா பொண்ணு ஆன் போர்டு சார்.. உங்க பெரியம்மாவா நடிக்கிறாங்க..”

“மீனாவும் இருக்காங்கல்ல?”

“ஆமா உங்க பாட்டியா நடிக்கிறாங்க. மத்த எல்லாரும் ரெடி சார்... நீங்க மட்டும்தான் பாக்கி. வந்துட்டா ஷூட்டிங் ஆரம்பிச்சுடலாம். முத ஷாட்ல ஒரு பொண்ணைப் பார்த்து ‘த பாரு... பொண்ணுன்னா எப்டி இருக்கணும் தெரியுமா’னு ஆரம்பிச்சு நீங்க சீரியஸா அட்வைஸ் பண்ண, அவளுக்கு உங்கமேல காதலாகிடுது. அப்புறம் அப்படியே டூயட்டு... அப்புறம் வில்லன் என்ட்ரி... அப்புறம் நீங்கதான் ஒரு பெரிய சொத்துக்கே ஒரே வாரிசுன்னு தெரிஞ்சு, அதை வில்லனுங்ககிட்ட இருந்து காப்பாத்தி, ஏழைகளுக்கு எழுதி வைச்சு... உங்களுக்கு தெரியாததா சார்... எல்லாம் வழக்கம் போலத்தான். ஷூட்டிங்தான் இழுத்துட்டே இருக்கு!”

சிண்ணாத்த
சிண்ணாத்த

“அருவிமணி சார்... உங்க கையிலதான் இருக்கு...”

“என் இத்தனை வருட தீவிர அரசியல் வாழ்க்கையில் என் கையில் கறைபடிய விட்டிலன்... கேடான எதையும் தொட்டிலன்...” அவரைப் பிடித்து சிங்கம் உலுக்கவும், சுய நினைவுக்கு வந்தவர், “என் அப்பழுக்கில்லாத அரசியலின்மீது ஆணையாகச் சொல்கிறேன். என் நண்பர் தயங்கினஜியின், 'சிண்ணாத்த' என்ற திரைக் காவியம் மட்டும் வராது போனால், இந்தத் தமிழ் சினிமாவை வேறு யாராலும் காப்பாற்ற முடியாது. இந்தியாவை எவராலும் கரையேற்ற முடியாது.”

தயங்கினஜி தனக்குள் ‘உங்களை மாதிரி ஆளுக என்கூட இருக்கும் வரை’ என்று தலையில் அடித்தபடி “பேசாம எல்லா ஷூட்டிங்கையும் வெளிநாட்டிலேயே வெச்சுட்டா என்ன? கொரோனா இல்லாத நாடா பார்த்து வெச்சுட்டா உருட்ட ஈசியா இருக்கும்ல!”

“சூப்பர் ஐடியா... ‘கொரோனா இல்லாத நாடுகள்’னு கூகுள் பண்ணு...” என்று சிங்கம் கட்டளையிட, அசிஸ் ஒருவர் கூகுள் பண்ணியதில் 'துவாலு', 'துங்கா', 'துக்கேலா'... என்று துக்ககரமான நாடுகளே வந்தன.

“இந்த நியூஸிலாந்து, ஸ்விட்சர்லாந்து மாதிரி கலர்ஃபுல்லான நாடா பாருய்யா” என்று தயங்கினஜி சொல்லவும், “ஏன் சார் இத்தனை பிரச்னைலயும் எங்கயாச்சும் கலர்ஃபுல் நாடு போய்த்தான் ஷூட்டிங் பண்ணனும்னு ஒத்தை கால்ல நிக்கிறீங்க, யார் சார் நீங்க?” என்று சிங்கம் சீரியஸ் ஆக... “அரே மித்ரோன்...” என்றபடி இவ்வளவு நேரம் அணிந்திருந்த தயங்கினஜி முகமூடியை கழற்றியபடி காட்சிதந்தார் அந்தப் பெரியவர்.

''யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.... நமக்குத்தேவை துட்டு!" என சத்தம்போட்டு சிரித்தார் அந்த வெண்தாடி சித்தர்!