Published:Updated:

யூ டியூப் பார்த்து தயிர் சாதம் செய்றவன்தானே... ஆஹா... ஓஹோ... அதல சக்கா அப்டிபோடு! லாக் Town அலப்ஸ்

லாக் Town
லாக் Town

லாக் டெளன் நாள்களில் வீட்டுக்குள் நடக்கும் காமெடிகளுக்கும் பஞ்சாயத்துகளுக்கும் குறைவேயில்லை... அப்படி ஒரு நாள்... ஒரு வீட்டில்!

காலை 6 மணி

மனைவி: ஏம்ப்பா... அந்த அலாரத்தை ஆஃப் பண்ணேன். டெய்லி இந்த நேரத்துக்கு தூக்கத்த கலைக்குது.

கணவன்: ஹேய் கேர்ள்... நீ யோகா பண்றதுக்காக வெச்ச அலார்ம் அது.

மனைவி: இப்போ ஆஃப் பண்றியா இல்லையா மேன். பொண்ணு முழிச்சுக்கப் போறா...

கணவன்: ஆஃப் பண்ணியாச்சு. யூ கன்டின்யூ.

கணவன் மைண்ட்வாய்ஸ்: அப்புறம் ஏன் தினமும் அடிக்குதுனு அதுக்கும் தெரியாது, வச்சவளுக்கும் தெரியாது. ஆனா ஆஃப் பண்றதுக்கு மட்டும் மூணாவதா ஒரு ஆள் தேவை. சத்திய சோதனை!
Meme
Meme
காலை 7.30

கணவன்: இந்த வீட்டுல அலாரத்துக்கு அப்புறமா அலாரம் வைக்காமலேயே எழும்புற ஆளு நான்தான்.

க.மை.வா: வாழும் போதிதர்மர்டா நீ..!
காலை 8 மணி

கணவன்: ஏம்மா... டைம் ஆச்சு எழுந்திரு. மாமுலா வர்ற உன் ஃபிரெண்ட் காக்கா வந்து கத்திட்டு இருக்குது. அதுக்கு ஏதாச்சும் போடணும்ல. பாவம் வாயில்லா ஜீவன்.

மனைவி: அண்டங்காக்காவுக்கு பசிக்குதுனு சாதா காக்கா கேக்குதா? ரெண்டு பேரும் சண்ட போடாம இருங்க. தோசை சுடுறேன்.

கணவன்: அப்படி இல்ல. ஒருநாள் நான் ஆபீஸ் போன அப்புறம் அந்தக் காக்காகூடத்தான் நீ பேசிட்டு இருந்ததா பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க. அதனால சொன்னேன்.

மனைவி: ஓஹோ... இப்போ பக்கத்து வீட்டுல எல்லாம் பொறணி பேச ஆரம்பிச்சாச்சா?

கணவன்: பொறணி பேசப் போகல. தாயம் விளையாடும்போது இந்த மாதிரி சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய பேசிக்கிட்டோம்.

மனைவி: அடப்பாவி. இது எப்போ?

கணவன்: மதியம் நீங்க ரெண்டு பேரும் தூங்கினப் பிறகு...

மனைவி: அதனாலதான் பாத்திரம் எல்லாம் கழுவாம காய்ஞ்சு போய்க் கெடக்குதா?

கணவன்: தேய்ச்சு தேய்ச்சு இந்த ஒரு மாசத்துல என் மோதிரம் தேய்ஞ்சதுதான் மிச்சம்.

Meme
Meme

மனைவி: அப்போ இன்னைக்கு ப்ரேக்ஃபாஸ்ட் வேணாம்னு சொல்ற?

கணவன்: ஐயோ... அந்தக் காக்கா பாவம். தோசை வரும்னு காத்துக்கிட்டு இருக்கும். ஹி... ஹி...

மனைவி: அப்படி வா வழிக்கு...

கணவன்: அத விடு. நம்ம வீட்டு செடிகள் எல்லாம் உனக்கேத்த மாதிரியே இருக்கு.

மனைவி: என்ன சொல்ற?

கணவன்: காலைல 6 மணிக்கு ஊத்த வேண்டிய தண்ணிய 9 மணிக்கு ஊத்துற. அதுவர வாடாம இருக்கே... வைஷூ இங்க வா. உன் யு.கே.ஜி. மிஸ் ஆன்லைன்ல வந்துருப்பாங்க. போவோம்.

Meme
Meme
காலை 11 மணி

மனைவி: இந்த நெட் ஏன் இப்படி சுத்துது. டவுன்லோடு ஆகவே மாட்டேங்குது.

கணவன்: எது? அந்த 'பிக் பேங் தியரி' சீரிஸ் பார்க்கவா?

மனைவி: ஆமா...

கணவன்: அந்தப் பழைய ரெக்கார்டைஎவ்வளவுதான் தேய்ப்ப? மணி ஹெய்ஸ்ட், டார்க்னு புதுசு புதுசா பாரேன். நெட் இல்லனா விடு. டிவில அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் போட்ருக்கான். வாங்க குடும்பமா மார்வெல் மண்ணுல காலடி வைப்போம்.

மனைவி: எந்த மண்ணும் வேணாம். எனக்கு அந்த சீரிஸ்தான் வேணும்.

கணவன்: ம்க்கும்... சீரியல், சீரிஸ்னு பாத்து பாத்து என்கிட்ட நீ சீரியஸ் ஆனதுதான் மிச்சம்.

மனைவி: என்ன சொன்ன?

கணவன்: சும்மா எனக்குள்ள பேசிக்கிட்டிருக்கேன்மா...

மனைவி: ஓ... மைண்ட் வாய்ஸா? மனைவி வாய்ஸ் பத்தி தெரியும்ல!

கணவன்: இதோ பாத்தியா நீ சீரியஸ் ஆகுற. ஆனா நான் ஹியூமருக்காகச் சொன்னேன்.

மகள்: அப்பா எனக்கு ஷின்சான் போடுங்க. ஙே...

Meme
Meme
மதியம் 1.30

மனைவி: டைம்டேபிள்படி இன்னைக்கு லஞ்ச் நீதான். வைஷூவுக்கு மட்டும் காரமில்லாம செஞ்சுடு.

கணவன்: என்ன... இப்போ சொல்ற?

மனைவி: அதனால என்ன? யூடியூப் பாத்து தயிர் சாதம்தான செய்யப் போற.

கணவன்: நானாவது யூடியூப் பாத்து சமைக்கிறேன். நீ சமையல் புத்தகம் பாத்து சமைக்கிறவ தான. ஹா ஹா...

மனைவி: அத சாப்பிட்டுதான 50 கிலோ இருந்த நீ 80 கிலோ ஆன... ஹி... ஹி..டா.

கணவன்: இதுக்கு ஒரு எண்ட் கார்டு போடு முருகா... நீ எல்லாம் தெய்வமே இல்லை.

மனைவி: அது 'நீ அல்லால் தெய்வம் இல்லை'. பாடத் தெரியலைனா சும்மா இரு மேன்.

கணவன்: நான் சரியாத்தான் பாடுறேன். அதெல்லாம் உனக்குப் புரியாது.

மனைவி: ஓ... டிக் டாக்கா?

கணவன்: என்னயவா வெறுப்பேத்துற? இப்போ பாரு. வைஷூ, அம்மா 'புட்டபொம்மா' நல்லா பாடுவாங்கதான.

மகள்: அம்மா... அம்மா... புட்டபொம்மா பாடுங்க.

கணவன்: யோவ்வ்வ் சும்மா இருய்யா. அம்மா தூங்கிட்டேன் பாப்பா.

மாலை: 5

மனைவி: 'காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே!

கணவன்: என்னால டீ எல்லாம் போட முடியாது. வேணும்னா நீயே போட்டுக்கோடி.

மனைவி: நீ போடுற 'டீ'யும், 'டி'யும் சூப்பரா இருக்கும். அதனாலதான் கேக்குறேன்.

கணவன்: எப்படி ஐஸ் வெச்சாலும் இதுக்கு மேல என்னால முடியாது.

மனைவி: வேறெதுவும் தேவையில்லை டீ மட்டும் போதும். பிஸ்கட் தொட்டு சாப்பிடுவேன் என்னவானாலும்.

கணவன்: என்ன நினச்சுக்கிட்டு இருக்க நீ? 'வொர்க் ஃப்ரம் ஹோம்'னா வீட்டு வேலை மட்டும் செய்றது இல்ல. வீட்டுல இருந்து ஆபீஸ் வேலை செய்றது.

இரவு: 8

மனைவி: இத்தாலி டிஷ் புதுசா ட்ரை பண்ணிருக்கேன். சீக்கிரமா சாப்பிடு.

கணவன்: நீ ட்ரை பண்றதுக்கு நான்தான் கிடைச்சனா...

Meme
Meme

மனைவி: எது... உப்புமா ஃப்ரை வேணுமா?

கணவன்: நான் ஒண்ணும் சொல்லல. இன்னும் 10 நிமிஷத்துல ஒரு வீடியோ கான்ஃபரன்ஸ் கால் இருக்கு. என் போன்ல சார்ஜ் இல்ல. உன் போன் வேணும்.

மனைவி: நீ போன் கேப்பனு தெரியும். அதான் உன் மககிட்ட கொடுத்துருக்கேன். முடிஞ்சா வாங்கிக்கோ.

கணவன்: ஓ லார்ட்... இவங்க ரெண்டு பேரும் சமாளிக்க சக்தி கொடு... வைஷூ போன் கொஞ்சம் தர்றியா?

மகள்: பெப்பா பிக் பாக்கணும். நான் தர மாட்டேன்.

இரவு 10

கணவன்: ஒருநாளைக்கு 24 மணி நேரம் என்பது எத்தனை கொடுமையான விஷயம்.

மனைவி: இத நான் ஒருநாள் சொன்னப்போ நீ சொன்ன டயலாக் 'போகப் போக அதுவா பழகிடும்.'

கணவன்: நீதான் ஏற்கெனவே பழகிட்டீல்ல. அப்றம் ஏன் நான் பழகணும்.

மனைவி: என்ன மாதிரியான உலகத்துல நாம வாழ்ந்துட்டு இருக்கோம்னு இப்போ புரியுதுல.

Meme
Meme

கணவன்: சரி சரி... புலம்பாம சீக்கிரம் தூங்கு. குட்நைட்.

மனைவி: எது நான் புலம்புறேனா?

கணவன்: இன்னைக்கு நான் ஜெயிச்சிட்டேன். தூங்கு தூங்கு.

மனைவி: அதெல்லாம் விட்டுக் கொடுக்க முடியாது. நீ தூங்கு.

மகள்: அம்மா எனக்கு ரைம்ஸ் போட்டாதான் நான் தூங்குவேன்.

அடுத்த கட்டுரைக்கு