Published:Updated:

CM குமார் கூட்டணி வித் குருவில்லா... 2021 பதக்க வேட்டைகளும், காப்பி கொள்கைகளும்! #Satire

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
CM குமார் கூட்டணி வித் குருவில்லா
CM குமார் கூட்டணி வித் குருவில்லா

பொறுப்பு துறப்பு : இது ஒரு நகைச்சுவைப் பதிவு. இதில் இடம்பெறும் பெயர்கள், கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. நம் சிரிப்பு சுரப்பிகளுக்கு உற்சாகம் ஊட்டும் முயற்சியே அன்றி யாரையும் புண்படுத்தும் நோக்கம் நமக்கில்லை!

நந்தனம் நாச்சியப்ப நாகம்மாள் கல்லூரி மைதானம். வானம் முழுவதும் ட்ரோன்கள். சிறுவர்கள் குறுக்கும் மறுக்குமாக ஓடிகொண்டு ட்ரோன்களை கையிலிருந்த ரிமோட்களால் இயக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை பாசத்தோடு பார்த்தபடி, சிலபல இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்களைக் கொடுத்தபடி உட்கார்ந்திருந்தார் அந்த எளிமையான மனிதர். அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது... அவர்தான் தமிழகத்தின் அப்டேட் நாயகன் CM குமார்.

“சார் நீங்களா?” ஆச்சர்யத்துடன் அங்கே வந்தார் சிங்கம் தவா. தன் காலை ஊன்றி தானே எழுந்து “ஆமாங்க” என்றபடி, தவாவுக்கு உடனடியாக அந்த நட்ட நடு மைதானத்திலேயே கடாயை பற்றவைத்து பிரியாணி கிண்டித் தந்தார் CM குமார். அதை சிறுவர்கள் படம் பிடித்து சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து #வலபிரியாணி என்கிற பெயரில் ஹேஷ்டேக் அட்ராசிட்டிகளை ஆரம்பித்தார்கள்.

சுவையான பிரியாணியை சுவைத்தபடி தவா கேட்டார்... “என்ன சார்... இப்பல்லாம் ஆளையே காணோம்... எந்த அப்டேட்டும் இல்லை... நான் வேற 'சிண்ணாத்த' ஷூட்டிங்ல பிஸி ஆகிட்டேன். சரி அப்டேட் கேட்டா மட்டும் தரவா போறீங்க... தேர்தல் வரப் போகுதே... யாருக்கு சப்போர்ட் பண்ணப் போறீங்க சார்?”

“நான் அரசியல் பேஸ் மாட்டேன்... எந்த கட்சிக்கும் ஆதரவு இல்ல... எந்த பிரச்னையும் வரக்கூடாதுன்னுதானே ஃபேனையெல்லாம் போட்டு உடைச்சேன்... என்கிட்ட போய் இப்பிடி கேக்கிறீங்களே?”

CM குமார் கூட்டணி வித் குருவில்லா
CM குமார் கூட்டணி வித் குருவில்லா

“இல்ல சார்... உங்க நண்பர் குருவில்லா கட்சி ஆரம்பிக்கப் போறதா அரசல் புரசலா பேச்சு அடிபடுது... அவரோட தப்பா திரை மறைவுல எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாப்ல. கொடி முதற்கொண்டு எல்லாம் ரெடி... நீங்க என்னடான்னா...”

“அப்டியா? அப்போ நானும் ஏதாச்சும் பண்ணனுமே... பேசாம ‘கட்சி தொடங்க தப்பன் இல்லை... பொலிவியா நாட்டில் வெப்பன் இல்லை...’ ன்னு ஆரம்பிச்சு ஒரு பாட்டு வெச்சுடலாமா? நீங்களே டைரக்ட் பண்ணுங்க!”

“வேணாம் சார்... அதெல்லாம் பழைய ட்ரெண்டு.. கலாம்ஹாசன் கட்சி ஆரம்பிச்சு பேட்டை பக்கம் போற வர்றவங்களுக்கெல்லாம் நாப்பது அம்பதுன்னு அள்ளி அள்ளிக் கொடுக்கிறாரு. பேசாம நீங்களும் ஒரு கட்சி ஆரம்பிச்சு அவரோட ‘ஓரம்’ ஆபீஸ் வாசல்ல ரெண்டு எட்டு நடந்தீங்கன்னா உங்களுக்கும் ஒரு நாப்பது சீட்டு தந்துட மாட்டாரு?”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“சூப்பர் ஐடியால்ல? ஆனா மன்றம் வந்த தென்றல்தான் இப்போ இல்லையே... ஆளு தேவையாச்சே என்ன பண்ணலாம்..?” என்று யோசனையில் மூழ்கினார் CM குமார்.

CM குமார் கூட்டணி வித் குருவில்லா
CM குமார் கூட்டணி வித் குருவில்லா

“பிரியாணி நீங்க கிண்டிடுவீங்க. சப்ளைக்கு உங்க 'சிண்ணாத்த' யூனிட்டை கூப்பிட்டுறலாம். ஆளுங்களுக்குத்தான் என்ன பண்றதுன்னு...'' என சிஎம் குமார் இழுக்க,

''பேசாம குருவில்லா கூட கூட்டணி அமைச்சுட்டா என்ன சார்... உங்களுக்கு ஒரு 117.. அவருக்கு ஒரு 117.”

“செம்ம ஐடியா தவாஜி. இப்பவே கால் பண்றேன்...” என்று குருவில்லாவை வாட்ஸ்அப் வீடியோ காலில் அழைத்தார் CM குமார்.

“ஹாய் என் நீண்டகால நண்பா...” என வீடியோ காலில் வணக்கம் வைத்தார் குருவில்லா. பேக்கிரவுண்டில் 'ஐடி ரெய்டு... ஐடி ரெய்டு' பாடல் சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்தது.

“வணக்கம் நண்பா... நீங்க ஒரு கட்சி...” என்று CM குமார் ஆரம்பிக்கவுமே “ஸ்ப்ளிட் ஏசி செய்யும் எந்தக் காரியங்களுக்கும் நான் பொறுப்பாக மாட்டேன்” என்று குருவில்லா உஷாரானார். போனை CM குமாரிடம் இருந்து பிடுங்கி சிங்கம் ஐடியாவை விவரிக்கவும், குருவில்லாவுக்கும் ஐடியா பிடித்துப் போனது.

“நண்பா இருங்க... முதல்ல பனையூர் பசி பரமானந்தத்துக்கு ஒரு தகவல் சொல்லிட்டு, நம்ம பாய்ஸை எல்லாம் லைன்ல எடுக்குறேன்... நிறைய புதுப்புது ஐடியா தருவாங்க... ஒருஜினலா திங்க் பண்ணுவாங்க...” என்றபடி கான்ஃபரன்ஸ் காலில் தட்லி மற்றும் முறுக்கினதோசையை அழைத்தார் குருவில்லா.

“இந்த தேர்தல் முழுக்கவே காப்பிதான் கான்செப்ட். 'காப்பி அடிப்பாங்க... அதனால கட்சி கொள்கையை சொல்ல மாட்டேன்'னு ஒருத்தர் சொல்றார். ஒருத்தரோட வாக்குறுதியை ஒருத்தர் காப்பி அடிச்சு நடைமுறைப்படுத்துறார்... இந்த தேர்தல் காப்பியோ காப்பி. அதனால தட்லியும், முறுக்கினதோசையும் நம்ம பக்கம் இருக்கிறது கூடுதல் பலம் நமக்கு” என்றபடி துள்ளிக் குதித்தார் சிங்கம் தவா. ட்ரோன்கள் வானத்தில் வாழ்த்துப்பாடின.

CM குமார் கூட்டணி வித் குருவில்லா
CM குமார் கூட்டணி வித் குருவில்லா

“தட்லி, தோசை, காப்பி... நாரத கான சபா கேன்டீன் மெனுகார்டு மாதிரி இருக்குல்ல...” என குருவில்லா நாக்கை கன்னத்தில் வைத்து சுழற்றி சிரித்தார்.

“என்ன வாக்குறுதிகள் கொடுக்கலாம்?” CM குமார் யோசனையில் மூழ்கினார்.

“இலவச மிக்சி கிரைண்டர் கொடுக்கலாம்னா அதை பண்ணமுடியாதபடி முறுக்கினதோசை பண்ணிட்டாரு” என்று ஆதங்கப்பட்டார் குருவில்லா.

“பேசாம வீட்டுக்கு வீடு ஒரு மணிரத்னம் பட டிவிடி கொடுக்கலாமா?” என்று தட்லி புதுமையாக ஒரு ஐடியா சொல்ல, “அப்புறம் உங்க கதை ஊருக்கே தெரிஞ்சிடும்” என்று சிங்கம் கடுப்பாக அந்த ஐடியாவும் கைவிடப்பட்டது.

“பிரசாரத்துக்கு தயாராகணும் சார். ஆடியோ ரிலீசுக்கு ஸ்கிரிப்ட் எழுதுருவவருக்கு போனைப் போடட்டா?” என்று குருவில்லா ஸ்டேஜ் பர்ஃபாமென்ஸுக்கு ஆர்வமாக, CM குமார் தடுத்தார்.

“என் நெஞ்சில் குடியிருக்கும் குட்டி குட்டி வாக்காளர்களுக்கு...”ன்னு ஆரம்பிச்சு அவர் எதையாச்சும் தத்தக்க பித்தக்கன்னு எழுதித் தருவார்... குட்டி குட்டி வாக்காளர்களுக்கு ஓட்டு இல்ல சார். நான் ஷூட்டிங் போகணும்.. சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க...” என்றபடி தன் காலால் தானே எழுந்தார்.

தட்லி, தோசை, குருவில்லா, சிங்கம் நால்வரும் ஆச்சர்யமாக “எளிமை ஷூட்டிங்கா? அடடே... ஏதாச்சும் அப்டேட் சொல்லுங்க சார்” என்றனர்.

“எளிமை ஷூட்டிங் இல்லை... துப்பாக்கி ஷூட்டிங் இருக்கு குருவில்லா... அது முடிஞ்சதும் சைக்கிள்லயே சிங்கப்பூர் பயணம்'' என்றபடி தனது சைக்கிளில் ஏறி அமர்ந்தவர் குருவில்லாவுக்கு 'Game Starts' எனப் பன்ச் வைத்தபடியே வீடியோ காலை முடித்தார்.

குருவில்லா ஸ்பிளிட் ஏசியை அணைத்தார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு