Published:Updated:

``துல்கர் எனும் அரக்கன், நிவின் எனும் பூதம்.. மலையாள சினிமாவும், மதம்பிடித்த ரசிகர்களும்!"

Fahad Fazil

`உங்களைப் பொறுத்தவரை, மலையாள சினிமாவில் வரும் எல்லாப் படமும் கலைப் படம்தான். மலையாள சினிமாவைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால், மனித வெடிகுண்டாய் மாறுவதற்குக்கூட தயங்கக் கூடாது.’

``துல்கர் எனும் அரக்கன், நிவின் எனும் பூதம்.. மலையாள சினிமாவும், மதம்பிடித்த ரசிகர்களும்!"

`உங்களைப் பொறுத்தவரை, மலையாள சினிமாவில் வரும் எல்லாப் படமும் கலைப் படம்தான். மலையாள சினிமாவைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால், மனித வெடிகுண்டாய் மாறுவதற்குக்கூட தயங்கக் கூடாது.’

Published:Updated:
Fahad Fazil

என்னதான் உலக சினிமா, உலக இலக்கியம் போன்றவை சமூக வலைதள சந்துகளில் செமத்தியாக சேல்ஸ் ஆனாலும், மலையாள சினிமாவுக்கு இருக்கின்ற மவுசு என்றும் குறைந்ததே இல்லா, குறையப்போவதும் இல்லா! ஆக, மவுசு கூடிக்கொண்டேபோகும் மலையாள சினிமாவில் நாமும் கொடிக்கட்டிப் பறக்க, நாம் மலையாள சினிமா கன்னியாக மாற வேண்டும். எப்படி மாறுவது, இதோ இப்படித்தான்!

எலைட் பேக்கேஜ் :

அதிகம் மெனக்கெட வேண்டாத பேக்கேஜ் இது. பஹத், துல்கர், நிவின்பாலி ஆகியோரின் புதுப்படங்கள் சம்பந்தமான அலர்ட்ஸ் வந்தவுடன் விளையாட்டை ஆரம்பித்தல் வேண்டும். அவர்களின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர், ஃபேன்மேட், பழம்பொறி, புட்டு - கடலை... என எல்லாவற்றையும் கம்ப்யூட்டரே கடுப்பாகும் அளவுக்கு ஷேர் செய்ய வேண்டும். முக்கியமாக, `சேட்டன்ஸ் ராக்ஸ்', `அடிபொலி' எனக் கேப்ஷனில் கதக்களி ஆட வேண்டும்.

பஹத் படமாக இருந்தால், அவர் கண்களை மட்டும் க்ளோஸப் க்ளிக் எடுத்து, கவர் போட்டோவாக வைக்க வேண்டும். அதற்குக் கேப்ஷனாக, `இந்தக் கண்கள்' எனப் போட்டாலே போதும். அந்தக் கண்களுக்கு ஓராயிரம் அர்த்தம் இருக்கிறதெனப் பார்ப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். நீங்கள் பெண்ணாக இருந்தால், `How to marry this Guy' என உருக வேண்டும். `என்னடா இது' என எண்ண வேண்டாம்; இப்போதெல்லாம் சில ஆண்களே இந்தக் கேப்ஷனைப் போட்டு ஷேர் செய்கிறார்கள்.

How to Marry this Guy?!
How to Marry this Guy?!

அந்தப் படம் எந்த ஜானரில் இருந்தாலும் பரவாயில்லை. கண்களை மூடிக்கொண்டு `வாட் எ ஃபீல் குட் மூவி. என் மனசை வெள்ளாவி வெச்சு வெளுத்து, துவைச்சு, காய வெச்சு, க்ளிப் மாட்டி விட்ருச்சு' என எழுதிவிட்டு, முடிவுரையாக மூன்று ஹார்டின் ஸ்மைலிகளையும், முடிந்தால் சில கிஸ்ஸிங் ஸ்மைலிகளையும் போட வேண்டும். வாரத்துக்கு மூன்று நாள்கள், பஹத், நிவின் மற்றும் துல்கரின் பழைய பட போஸ்டரையோ, பாடல்களையோ தூசித்தட்டி ஸ்டேட்டஸ் தட்ட வேண்டியது மிகமிக அவசியம்!

ஹார்ட்கோர் பேக்கேஜ் :

இதற்குக் கொஞ்சம் உழைப்பு தேவை! முந்தைய பேக்கேஜில் இருக்கும் பஹத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, புதிதாக விநாயகன், பார்வதி, சௌபின் சபீர் மற்றும் ரீமா கலிங்கலை ஆட்டத்தில் சேர்க்க வேண்டும். அவர்களின் பிறந்தநாள், படம் வெளியாகும் நாள், ஃபாரீன் போகும் நாள், பக்கோடா சாப்பிடும் நாள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக்கொண்டு, அந்நாளில் போட்டோவுடன் கூடிய ஒரு பக்க ஸ்டேட்டஸ் எழுத வேண்டும்.

Dulquer Salmaan
Dulquer Salmaan

அந்த போட்டோ கறுப்பு - வெள்ளை மோடில் இருப்பது மிகவும் அவசியம். மானே, தேனே, பொன்மானேபோல் ராட்சசன், அரக்கன், அசுரன், ரத்தக் காட்டேரி, மலையாள மோகினி போன்ற வார்த்தைகளை இடையிடையே போட்டுக்கொள்ளுங்கள். அப்போதுதான் படிக்கும்போது வெறியாய் இருக்கும்.

கூகுளின் உதவியுடன் அந்த வார்த்தைகளை மலையாளத்தில் மொழிப்பெயர்த்துப் போடுவதென்றால், சிறப்போ சிறப்பு! எப்போது நாம் செய்வது யாருக்கும் புரியவில்லையோ, அப்போதுதான் நாம் பிரபலமாகிக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எத்தனை முறை `கம்மட்டிப்பாடம்' விநாயகன் மற்றும் `சார்லி' பார்வதியின் புகைப்படங்களை பதிவேற்றுகிறீர்களோ, அத்தனை வேகத்தில் இந்தப் பேக்கேஜ் முடியும். முக்கியமான விஷயம், பார்வதியை பார்வ'தீ' என எழுதிப் பழுகுங்கள்.

பார்வதி - பார்வை தீ
பார்வதி - பார்வை தீ

`கம்மட்டிபாடம்' படத்தில் வருகிற `பர பர', `புழு புலிகள்', `சார்லி'யில் வரும் `சுந்தரி பெண்ணே', `என்னு நின்டே மொய்தீன்' படத்தின் `முக்கத்தே பெண்ணே' போன்ற பாடல்களைத் துண்டு துண்டாய் வெட்டி, வாட்ஸ்அப்பில் கொஞ்சம், ஃபேஸ்புக்கில் கொஞ்சம், இன்ஸ்டாவில் கொஞ்சம் எனத் தூவி விட வேண்டும். படத்தைப் பற்றி என்ன எழுதினாலும் கடைசியாக, `பேசாம கேரளா போயிடலாம் போல. என்னமா படம் எடுக்கிறாங்க சேட்டன்ஸ்' என்ற ஒரு வரியை மறக்காமல் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஹார்ட்கோர் 2.0 பேக்கேஜ் :

முந்தைய பேக்கேஜில் இருக்கும் அத்தனை டாஸ்க்கையும் இதிலும் செய்துமுடிக்க வேண்டும். இந்தப் பேக்கேஜின் சிறப்பம்சமே, இதில் இயக்குநர் பக்கம் ரவுண்டு அடிக்கபோகிறோம் என்பதுதான். திலீஷ் போத்தன், ராஜீவ் ரவி, லிஜோ ஜோஸ் போன்றோரின் திரைப்படங்களைப் பற்றி முந்நூறு வார்த்தைகளுக்கு மிகுதியாய் கட்டுரை வரைய வேண்டும்.

கேரள காட்சி மொழி
கேரள காட்சி மொழி

உங்களைப் பொறுத்தவரை, மலையாள சினிமாவில் வரும் எல்லாப் படமும் கலைப் படம்தான். மலையாள சினிமாவைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால், மனித வெடிகுண்டாய் மாறுவதற்குக்கூட தயங்கக் கூடாது. `மல்லுஸ் ரசனையே உயர்ந்த ரசனைதான். தமிழ் சினிமாதான் அவங்களைக் கமர்ஷியல் படம் எடுக்கச் சொல்லி கழுத்தை நெரிக்குது'. இந்த வசனத்தை 21 நாள்களுக்கு தினமும் ஒருமுறை கட்டன் சாயா குடித்துவிட்டு தினம் 21 முறை உங்களுக்குள்ளேயே சொல்லிக்கொள்ளுங்கள்.

வின்டேஜ் பேக்கேஜ் :

இது ஒரு ரிட்டையர்மன்ட் ப்ளான். நாற்பது, ஐம்பது வயது கடந்தவர்களுக்கானது. ஹார்ட்கோர் பேக்கேஜ்களை போரிங்காகக் கருதும் சில இளைஞர்களும் இந்த வின்டேஜ் பேக்கேஜைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அது உங்கள் விருப்பம்! இதன் மெயின் மெட்டீரியல்கள் மோகன்லால், மம்மூட்டி, திலகன் மற்றும் நெடுமுடி வேணு. மம்மூட்டியை மம்முக்கா என்றும், மோகன்லாலை லாலேட்டன் என்றும் அழைத்துப் பழகுங்கள்.

மம்முக்காவும் லாலேட்டனும்
மம்முக்காவும் லாலேட்டனும்

மலையாள சினிமா இப்போ வானுயர உயர்ந்து நிற்க, அந்தக் காலத்து இயக்குநர்கள்தான் ஆதாரத் தூண்கள் என்பதைக் கொள்கையாக மனதில்கொள்ள வேண்டும். பத்மராஜன், பரதன், லோகி, பாசில், சிபிமலயில் என 70'கள், 80'களின் இயக்குநர்களைப் பற்றி விக்கிபீடியாவில் தேடிப் படித்துக்கொள்ளுங்கள். மதன் கௌரி வீடியோ போட்டிருந்தாலும் பார்த்துக்கொள்ளுங்கள்.

இவர்களின் படங்கள் யூடியூப்லேயே இலவசமாகக் கிடைக்கிறது. அதனால், அமேசான், நெட்பிளிக்ஸ் எனச் செலவுசெய்யத் தேவையில்லை. படத்தைப் பற்றி எழுதத் துவங்கும்போது முதல் வரியே `இந்தப் படத்தை திருவனந்தபுரம் கைராலி / நாகர்கோவில் சக்கரவர்த்தி தியேட்டரில் பார்த்த ஞாபகம்', `அப்போதைய காலகட்டத்தில் சென்னையில் மலையாளப் படங்கள் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால், இந்தப் பட போஸ்டர் எனக்கு ஒரு நம்பிக்கையையும், ஈர்ப்பையும் ஒருசேரத் தந்தது' என நாஸ்டால்ஜியாவாக ஆரம்பிக்க வேண்டும்.

கடலினக்கரே போனோரே
கடலினக்கரே போனோரே

நீங்கள் யூடியூபில்தான் பார்த்தீர்கள் என யாரும் கண்டுபிடிக்கப்போவதில்லை. இது ஒன்லி 40+களுக்கானது, இளைஞர்கள் இவ்வழியைப் பின்பற்றி பல்பு வாங்கவேண்டாம். மாதம் இரண்டு படங்கள் பார்த்து, இரண்டு பதிவுகள் போட்டாலே போதும். ஏனென்றால், நீங்கள் எவ்வளவு எழுதினாலும், சக மலையாள சினிமா கன்னிகள் யாரும் உங்கள் பதிவைப் படிக்கப்போவதில்லை. லாலேட்டன் லுக்குக்கும், மம்மூக்கா முகத்துக்கும் லைக் போட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள். நீங்கள் எழுதிய பதிவைப் படித்து முடிக்கவே பத்து நிமிடம் ஆகும். ஆனால், நீங்கள் பதிவு செய்த பத்து நொடியில் 25 லைக்ஸ் வந்திருக்கும். அதை வைத்து நீங்கள் புரிந்துகொள்ளலாம். பேக்கேஜைப் பின்பற்றினால் மைலேஜ் உண்டு. அதன்பின் உங்கள் இஷ்டம்!