Published:Updated:

அஜித்துக்கு எப்படி சாவி கிடைக்குது... விஜய் இப்படியா புரட்சி பண்றது? - பைக் ரைடு பரிதாபங்கள்

தமிழ் சினிமாவும் பைக்கும்
தமிழ் சினிமாவும் பைக்கும்

பைக் என்ற பேச்சை எடுத்த பின், தலயை உள்ளே சேர்க்காமல் இருந்தால் எப்படி? அவருக்கு மட்டும் எப்படி, அவர் எடுத்து ஓட்ட வேண்டும் என்பதற்காகவே, சாவியோடு பைக்கை நிப்பாட்டிவிட்டுச் செல்கிறார்கள் எனத் தெரியவில்லை.

தற்போதைய தமிழ் சினிமா ஹீரோக்கள் எல்லாம் காதல் பிரச்னை முதல் கடன் பிரச்னை வரை எந்தப் பிரச்னை என்றாலும் கடனை, உடனை வாங்கி பெட்ரோல் அடித்துவிட்டு, பைக் ரைட் எனக் கிளம்பிவிடுகிறார்கள். இவர்கள் ஏன் இப்படி `ஆ... ஊ...ன்னா பைக் ரைடுன்னு கிளம்பிடுறாங்க' என ஆழ்ந்து சிந்தித்ததில்...

தமிழ் சினிமாவும் பைக்கும்
தமிழ் சினிமாவும் பைக்கும்

சர்வம் தாளமயம் :

சர்வம் தாளமயம்
சர்வம் தாளமயம்

சர்வமும் தாளமயம் என்பதால், படத்தில் நாயகன் சென்ற பைக் ரைடும் தாளத்தை மையமாக வைத்துதான். `புகழ்பெற்ற வித்வானிடம்தான் நான் மிருதங்கம் கற்றுக்கொள்வேன், இல்லையெனில் ராசா வண்டியை விட்ருவேன்' என விட்டதுதான் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத இந்த மிகப்பெரிய ரைடு. நாயகனின் நண்பர்கள், `நாடோடிகள்' சசிக்குமாரைவிட தாராள மனம் கொண்டவர்களாக பைக், பணம் என அள்ளிக்கொடுத்து, பாவ் பஜ்ஜி சாப்பிட காசும் கொடுத்து அணுப்பி வைக்க, பல்வேறு இடங்களுக்குச் சென்று பல்வேறு இசைகளைக் கற்று, தாறுமாறாக ட்யூனாகி க்ளைமாக்ஸில் வித்தையை இறக்கியிருப்பார் நாயகன்.

தேவ் :

தேவ்
தேவ்

அட்வென்ச்சர் செய்வதற்கென்றே அளவெடுத்து தைத்த பீஸ், `தேவ்'. எல்லோரும் `காதலியைப் பார்க்க என்ன கலர் சொக்காய் போட்டுப்போகலாம்' என சிந்தித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், `என்ன பிராண்ட் பைக்ல போகலாம்' என சீட்டு குலுக்கிப்போட்ட மல்டி மில்லியனர் இந்த தேவ். மும்பையிலிருந்து சென்னை வரை, நாயகிக்கு `ரேபிடோ' பணி செய்தபோதும், 200 லிட்டர் பெட்ரோல் அடித்தபோதும், ஈகோ எனும் இலுமினாட்டி சதி அவர்கள் காதலில் வெறும் அரை லிட்டர் பெட்ரோலை ஊற்றி கொளுத்திப்போட்டது. அதற்குப் பின், அந்த டோரா பொம்மையை டபுள்ஸ் கூட்டிக்கொண்டு இமயமலையில் ஏறியதெல்லாம், என்னத்த சொல்ல..!

இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் :

இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்
இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்

`கொய்யாக்காய் ஏன் உருண்டையாக இல்லை' என சுண்டைக்காய் காரணங்களுக்கெல்லாம் `சுர்ர்'ரென கோவம் கொப்பளிக்கிறது இஸ்பேட் ராஜாவுக்கு. அவருக்கு இந்த வீணாப்போன விதி, முதல் ரவுண்டிலேயே ரம்மியடித்து, காதலில் கும்மியடித்தால் சும்மாவா இருப்பார்? அதனால்தான், கடுப்பாகி கிளம்பிவிட்டார் இமயமலைக்கு. `நான் கோவித்துக்கொண்டு இமயமலைக்குத்தான் சென்றேன்' என எல்லோரையும் நம்ப வைக்க, திபெத் அமைதிக் கொடிகளை கலர் கலராக வாங்கி, கண்ணாடிகளில் குறுக்க, மறுக்க கட்டிவிட்டதுதான் ஹைலைட்! ஏ... சாயாளி...

அச்சம் என்பது மடமையடா :

அச்சம் என்பது மடமையடா
அச்சம் என்பது மடமையடா

முன்னது `சாயாளி...' என்றால், இது `ராசாளி'! இந்தப் படத்தின் ரஜினிகாந்த் முரளிதரன், (எல்லோரும் மூணு செகண்ட் எக்ஸ்ட்ராவாக அந்தப் பெயரை உற்றுப்பார்த்துவிட்டு அடுத்த வரிக்குச் செல்லவும் ) புல்லட்டில் ரைடு கிளம்பிய பிறகுதான், தமிழ் சினிமாவில் பலபேர் தங்கள் வண்டியை வாட்டர் வாஷுக்கு விட்டார்கள். சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு கேரளா வழியாகச் சென்று புதுப்புரட்சி படைத்திருப்பார்கள். அதில் கடுப்பானதாலோ என்னவோ, அந்த அரைபாடி லாரி ஒரு ஏத்து ஏத்தும் பாருங்க... பாவத்த! சரி இவர் எதற்கு பைக் ரைடு கிளம்பினார் என்றால், அவருக்கு நெடுநாள் ஆசை அவ்வளவுதான். `சோக்காளி' பாடலில் பைக்கை வாங்கி, முதல் சர்வீஸையும் முடித்துவிட்டு, `ராசாளி' பாடலில் ஜிவ்வென பறந்துவிடுவார்.

இதர பைக்கர்கள் :

இதர பைக்கர்கள்
இதர பைக்கர்கள்

பைக் என்ற பேச்சை எடுத்த பின், தலயை உள்ளே சேர்க்காமல் இருந்தால் எப்படி? அவருக்கு மட்டும் எப்படி, அவர் எடுத்து ஓட்ட வேண்டும் என்பதற்காகவே, சாவியோடு பைக்கை நிப்பாட்டி விட்டுச் செல்கிறார்கள் எனத் தெரியவில்லை. அவருடைய சொந்த பைக்கை ஓட்டியதைவிட, சேஸிங் செய்ய அடுத்தவர் பைக்கை எடுத்து ஓட்டியதுதான் அதிகம்.

அடுத்ததாகத் தளபதி! அவர் சென்ற ரைடு எல்லாம் வித்தியாசமானது, விசித்திரமானது. ``கப்பை அப்புறமா கொடு, அதுவரைக்கும் எனக்கு கம்பெனி கொடு" எனச் சொல்லிவிட்டுச் சென்ற பைக் ரைடெல்லாம் காலகாலத்துக்கும் பைக்கர்களின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது. ``இந்தாப்போறேன் சொசைட்டிக்கு" என ஆளும்கட்சி மீட்டிங்கில் வைத்தே ஒருவிரல் புரட்சி செய்ய, கும்பலாகக் கிளம்பியதெல்லாம் அளும்பல் சாரே..!

அடுத்த கட்டுரைக்கு