Published:Updated:

``என்னுடைய பயோபிக்கில் விஜய்சேதுபதிதான் ஹீரோ!'' -`மக்க கலங்க வைக்கும்' செல்லூர் ராஜு!

தெர்மாகோல் மிதக்க விடும் விஜய் சேதுபதி
தெர்மாகோல் மிதக்க விடும் விஜய் சேதுபதி ( கார்த்திகேயன் மேடி )

பேட்டிக்கு அமர்ந்தவரிடம், "ரொம்ப சீரியஸான கேள்விகள்'னு நினைச்சிறாதீங்க சார்... என்று நாம் முடிப்பதற்குள், ''என்ன வேணும்னாலும் கேளுங்க தம்பி! நோ பிராப்ளம் என நம்முடைய பிராப்ளத்தை சால்வ் செய்து கேள்விகளை எதிர்கொண்டார்.

செல்லூர் ராஜு... தமிழக மக்கள் மனங்களில்`தெர்மாகோல்' போட்டு அமர்ந்திருக்கும் மாமனிதர். எப்பேர்பட்ட துன்பத்தையும் சுவடு தெரியாமல் துடைத்துவிடுவதில் அவருடைய ஸ்டேட்மென்டுகளை அடித்துக்கொள்ள முடியாது. சீரியஸான பல தருணங்களில் விஞ்ஞானபூர்வமாகவும் மெய்ஞானபூர்வமாகவும் கருத்துகளைச் சொல்லி, வெறுமையாக இருக்கும் அரசியல் சூழலை கலகலப்பாக்கும் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் ஒரு ஜாலிக்காகவே ஒரு பேட்டி எடுத்தால் எப்படி இருக்கும்? பதில் தேடி, நீங்கள் தடுமாற வேண்டாம். செல்லூர் ராஜுவின் ஜாலி பேட்டி ரெடி!

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ
க.சதீஷ்குமார்

பேட்டி என்றதும், ''நான் கொஞ்சம் பிஸி, இப்போ முடியாது'' என முதலில் செல்லமாக முரண்டு பிடித்தார் செல்லூரார். உங்களுடைய பேட்டிக்காக விகடன் வியூவர்ஸ் வெய்ட்டிங் சார்... எனப் பதிலுக்கு நாமும் முரண்டுபிடிக்க... கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு வரச் சொல்லி `கிரீன் சிக்னல்' கொடுத்தார். 8 மணிக்கு மேல் வந்தால் பேட்டி கிடையாது என்று அவர் நமக்குக் கொடுத்திருந்த அலர்ட், அன்று இரவு நமது தூக்கத்தைக் கெடுத்தது. லேசாக கண் அசந்தபோதுகூட கலர் கலரான தெர்மாகோல்கள் கனவை அலங்கரித்தன.

அவர் பேட்டிக்காகத் தவமே இருக்கலாம் தப்பே கிடையாது! 7 மணிக்கே அவர் வீட்டில் ஆஜரானோம். அப்போதுதான் 'வாக்கிங்' முடித்துவிட்டுத் திரும்பியிருந்த செல்லூர் ராஜு செல்போனை சைலன்ட் மோடில் போட்டுவிட்டார்போல! பல முறை அழைத்தும் பதில் இல்லை.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ
க.சதீஷ்குமார்

கேட்டின் முன்பு காவலுக்கு இருந்த போலீஸுக்கும் நம்மை வரச் சொல்லியிருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதனால் அவர் நம்மை உள்ளே அனுமதிக்கவில்லை. உத்தரவு வராமல் உள்ளே விடமாட்டேன் என்று அவர் முஷ்டி முறுக்கியது சரிதான்! ஆனால், நாம் வந்திருப்பதையும் அவரிடம் போய் சொல்ல மாட்டேன் என்று அடம்பிடித்ததுதான் சத்திய சோதனை.

சோதனை என்ன... அவருடைய பேட்டிக்காக எவ்வளவு பெரிய வேதனையையும் தாங்கிக்கொள்ளலாம் என்றது மைண்ட் வாய்ஸ். சற்று நேரத்தில் செல்போன் ஒளிர்ந்தது... உள்ளே வாங்க என்று உற்சாகமாகச் சொன்னார் செல்லூர் ராஜு. உள்ளே சென்றோம். ஹால் நிறைய சாமி படங்கள்... எப்படி வேணுமோ அப்படி செட் பண்ணிக்கோங்க என்றபடி ஓடிவந்தார் அவரின் உதவியாளர். பின்பக்கம் அம்மா போட்டோ இருக்கணும் அதை மறந்துறாதீங்க என்று கண்டிஷன் போட்டார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ
க.சதீஷ்குமார்

'ஹ்ம்ம் எல்லாம் ரெடி! ஐயா வந்துட்டார்'னு வந்த சத்தம் அடங்குவதற்குள்ளாக வந்து நின்றார் செல்லூர் ராஜு; வந்ததும் செருப்பைக் கழற்றிவிட்டு சாமி கும்பிட்டார். ஜெயலலிதா படத்தைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டார். சட்டசபைக்கு புறப்பட வேண்டிய பரபரப்பில் பேட்டிக்கு அமர்ந்தவரிடம், "ரொம்ப சீரியஸான கேள்விகள்'னு நினைச்சிறாதீங்க சார்... என்று நாம் முடிப்பதற்குள், ''என்ன வேணும்னாலும் கேளுங்க தம்பி! நோ பிராப்ளம்'' என நம்முடைய பிராப்ளத்தை சால்வ் செய்து கேள்விகளை எதிர்கொண்டார்.

''பிரபலமான அரசியல்வாதிகளுடைய வாழ்க்கை படமாக்கப்படுவது இப்போது அதிகரித்து வருகிறது. நீங்களோ உலகமே உற்றுநோக்கும் பிரபலம். உங்கள் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் அதில் யார் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும்?'' என்று கேட்டதும், ''நம்ம வாழ்க்கையெல்லாம் யார் தம்பி படமா எடுக்கப்போறாங்க?'' என்று தன்னடக்கத்தோடும் அபரிதமான வெட்கத்தோடும் சிரித்தார்.

''யாராவது எடுத்தால் உங்கள் சாய்ஸ் யார்?'' என்று கேட்டதும், ''விஜய் சேதுபதி'' என்று கன்னம் சிவக்க தன் டிரேட்மார்க் சிரிப்போடு சொல்லிவிட்டார்.

இதுமட்டுமல்ல உங்களுக்குப் ரொம்பப் பிடித்த ஹீரோயின் யார்? எடப்பாடி பழனிசாமிக்கு நிறைய பட்டம் தருகிறீர்கள்; மு.க.ஸ்டாலினுக்கு என்ன பட்டம் தருவீர்கள்? நீங்கள் தேர்தல் கமிஷனாக இருந்தால் டி.டி.வி தினகரனுக்கு என்ன சின்னம் ஒதுக்குவீர்கள்? மதுரையை சிட்னியாக மாற்றுவதுபோல, சென்னையை என்னவாக மாற்றலாம்? யாகம் பண்ணா எப்படி சார் மழை வரும்? இப்படிப் பல கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லியிருக்கிறார். அவருடைய முழுமையான பேட்டியைக் காண... கீழே உள்ள லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு