Published:Updated:

'அக்காவுக்கு வந்த ப்ரோபசல்... வித்தியாசமாக படம் எடுத்த தங்கை!' - வைரலான அமெரிக்க காதல் எபிசோடு

Love
Love

ஒரு காதல் புரொபோசல் புகைப்படம், இணையத்தில் வைரலாகிவருகிறது.

காதல், ஓர் அழகான கவிதை. காதலிப்பதற்கு இருக்கும் தைரியத்தைவிட காதலைச் சொல்வதற்கு இன்னும் அதிக தைரியம் வேண்டும். காதல் ஏற்றுக்கொள்ளப்படுமா... நிராகரிக்கப்படுமா? என்ற பயம் ‘பப்ளிக் எக்ஸாம்’ எழுதப் போகும் கடைசி பென்ச் மாணவனுக்கு இருக்கும் பதற்றத்தைவிட அதிகமானது. வினாத்தாள் போலத்தான் காதலி தெரிவாள். நன்கு தெரிந்த பதில்கள் பரீட்சை அறையில் மறந்துபோவது போல் காதலியின் முகத்தைக் கண்டதும் சொல்லவந்த வார்த்தைகள் காற்றில் மறைந்துபோகும். இதையெல்லாம் தாண்டி காதலைச் சொல்லி, அந்தக் காதல் ஏற்றுக்கொள்ளப்படும்போது கிடைக்கும் ஆனந்தம், சொல்லில் அடங்காதவை. அந்தத் தருணங்கள் எல்லாம் இளமையின் பசுமையான நினைவுகள்.

Love letter
Love letter

எல்லோரும் ஒரே மாதிரி காதலைச் சொல்வது கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஃபேஸ்புக்கில் ஒரு காதல் கதை வைரலானது. Edi Okoro என்பவர், தனது காதலியிடம் காதலைச் சொல்ல தயாராகிவிட்டார். காதலிக்குப் பரிசளிக்க வைர மோதிரமும் வாங்கியாகிவிட்டது. காதலைச் சொல்வதற்கு ஒரு சரியான தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தன் காதலி Cally-யிடம் காதல் சொல்வதற்காக மோதிரத்தைக் கொண்டுசெல்கிறார். அவர் நினைத்த அந்தத் தருணம் அமையாததால், மோதிரத்துடன் ஒரு புகைப்படம் எடுக்கிறார். இப்படியாக ஒரு மிகப்பெரிய ஆல்பத்தையே உருவாக்கிவிட்டார். “எல்லோரும் காதலைச் சொல்ல ஏதாவது திட்டமிடுவார்கள். நான் அப்படியில்லை தனித்துவமானவன்!” என்று கூறி, இணையவாசிகளைக் கவர்ந்தார்.

அப்படியான ஒரு காதல் புரொபோசல்தான் மீண்டும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. ஓர் அழகான மாலை வேளையில் படம்பிடிக்கப்பட்ட ஒரு காதல் புரொபோசல்தான் அது. இதன் பின்னணிக் கதை சற்று சுவாரஸ்யமானது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரூ-ரேச்சல் இருவரும் நீண்டநாள் நண்பர்கள். ஆண்ட்ரூவுக்கு ரேச்சல் மீது காதல் இருந்துள்ளது. ரேச்சலிடம் தனது காதலைத் தெரிவித்து, திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவுசெய்துள்ளார்.

'அக்காவுக்கு வந்த ப்ரோபசல்... வித்தியாசமாக படம் எடுத்த தங்கை!' - வைரலான அமெரிக்க காதல் எபிசோடு

அதை ரேச்சலின் சகோதரியான தெரசாவிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது தெரசா, 'நான் புதர் போல் மறைந்துகொண்டு, உன் புரொபோசலைப் படம் எடுக்கிறேன்' என விளையாட்டாகக் கூறினார். 'ஆகா, இந்த ஐடியா நல்லாயிருக்கே... அப்டியே அப்ளை பண்ணிடலாம்'னு ரெண்டு பேரும் பேசி முடிவுசெய்தனர்.

இதற்காக நிறைய ஐடியாக்களை யோசித்தார்கள். எதுவும் செட்டாகவில்லை. இறுதியில், ராணுவத்தினர் புதர்போல் வேடமிட்டுச் செல்வதுபோல் ரெடியானார். அந்த அழகான மாலை வேளை வந்தது. ஆண்ட்ரூ, தனது காதலை ரேச்சலிடம் கூறினார். அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார். அந்தத் தருணத்தை தெரசா கேமராவில் க்ளிக் செய்துவிட்டார். அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட, லைக், கமென்ட், ஷேர் என இணையவாசிகள் தெறிக்கவிட்டனர்.

'அக்காவுக்கு வந்த ப்ரோபசல்... வித்தியாசமாக படம் எடுத்த தங்கை!' - வைரலான அமெரிக்க காதல் எபிசோடு

இதுகுறித்துப் பேசிய தெரசா, “நான் அந்த அழகான தருணத்தைத் தவறவிடாமல் க்ளிக் செய்யக் காத்திருந்தேன். ஆண்ட்ரூவுக்கு நான் மறைந்திருப்பது தெரியும். ஒரு கவிதை வாசித்து, தனது காதலை ஆண்ட்ரூ கூறினார். ஆனாலும் அவர் பதற்றமாக இருந்தார். பாக்கெட்டில் இருந்து மோதிரத்தை அவரால் வேகமாக எடுக்க முடியவில்லை. ஒரு வழியாக எடுத்துவிட்டார். ''ரேச்சல், என்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா...'' என்றார். அவளும் ''ஆமாம்'' என்று பதிலளித்தாள். ''நான் அந்தத் தருணத்தை படம் பிடித்துவிட்டேன். நான் எனது தோற்றத்தை அவள் முன் காட்டினேன். அவளுக்கு குழப்பமாக இருந்தது. எனது கண்கள் கலங்கியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு