Published:Updated:

வலைபாயுதே

Andrea
பிரீமியம் ஸ்டோரி
Andrea

வீட்டுல உள்ளவங்களுக்கு போன் வந்துச்சுன்னா சந்தோஷப்படுறே முதல் ஆள் குழந்தைகளாத்தான் இருக்கும்.

வலைபாயுதே

வீட்டுல உள்ளவங்களுக்கு போன் வந்துச்சுன்னா சந்தோஷப்படுறே முதல் ஆள் குழந்தைகளாத்தான் இருக்கும்.

Published:Updated:
Andrea
பிரீமியம் ஸ்டோரி
Andrea

twitter.com/Thaadikkaran

வீட்டுல உள்ளவங்களுக்கு போன் வந்துச்சுன்னா சந்தோஷப்படுறே முதல் ஆள் குழந்தைகளாத்தான் இருக்கும். ஏன்னா, அவ்ளோ நேரம் தேடிட்டு இருந்த மொபைலை அப்போ கண்டு பிடிச்சிருப்பாங்க..!

twitter.com/GreeseDabba2

மறைக்க முற்படும் வழுக்கைகள், வழக்கத்தைவிடக் கூடுதல் பொலிவுடன் பளபளக்கின்றன.

வலைபாயுதே

twitter.com/Yavanika_krish

புரிதல்கொண்ட ஒரு தோழமையைத் தேர்ந்தெடுப்பதும் தக்கவைத்துக் கொள்வதும் காதலிப்பதைப் போலெல்லாம் அவ்வளவு சுலபமில்லை.

twitter.com/VG100000

குழந்தைகள் பெரியவர்களாகி விட்டார்கள் என்பதை, சில சமயம் சந்தோஷமாகவும், பல சமயம் காயங்களாகவும் புரியவைக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

twitter.com/K2_b_

பல்லாயிரம் ஆண்டுக்காலப் பரிணாம வளர்ச்சி, தொழில்நுட்ப, தொலைத் தொடர்புப் புரட்சி, ஆயிரமாயிரம் மதம், தத்துவங்கள், ராணுவங்கள், மேதாவிகள் வாழும் உலகில் சக மனிதன் உணவில்லாமல் வாழும் சூழல் இருப்பதைப்போல் துயர் தரும் செய்தி ஒன்று இருக்காது. ஒரு இனமாய் நம் படுதோல்வியைப் பறைசாற்றுவதுதான் இது.

twitter.com/TalksssTweet

நிஜமாவே ஜெயலலிதாம்மா பாவம். இவ்ளோ அறிவாளிங்களை வச்சி இத்தனை வருஷம் போராடியிருக்காங்க. எவ்ளோ நாள் தனியா சிரிச்சிருப்பாங்க, எவ்ளோ நாள் தனியா போய் அழுதிருப்பாங்க.... சோ சேடு!

வலைபாயுதே

https://twitter.com/MJ_twets

விழுங்க முடியாத தூக்க

மாத்திரை இந்த நிலவு.

twitter.com/Suyanalavaathi

கடிகாரத்தை 10 நிமிஷம் கூட வைத்துவிட்டு, வேகமா செயல்படுவோம் என்று நினைப்பதெல்லாம் நவீன மூட நம்பிக்கை!

twitter.com/ItsJokker

ஒரே நாடு, ஒரே ரேஷன் - வடநாட்டவர்கள் இங்க குடியேற சிறப்பான திட்டம்.

TNPSC-ல தமிழ் மொழித்தாள் நீக்கம் - வடநாட்டவர்கள் நம்மவர்களின் அரசு வேலையைத் தட்டிப் பறிக்க ஏற்படுத்திய திட்டம்.

சிம்பிள், நீ எனக்கு ஓட்டு போட வேண்டாம். எனக்கு ஓட்டு போடுறவன குடிவச்சு உன் மொத்த உரிமையையும் தட்டிப்பறிப்பேன்.

வலைபாயுதே

twitter.com/ChainTweter

வெகு சிலருக்கு எரைசர்...

சிலருக்கு ரப்பர்...

பலருக்கு லப்பர்...

facebook.com/muthuborntowin

2025

யோவ் என்னய்யா... கட்டிய 10 நாள்ல கட்டடம் விழுந்துடுச்சு.

இன்ஜினீயர் : எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

twitter.com/RahimGazzali

அனைவருக்கும் தேநீர் கொடுங்கள் - மார்க்ஸ்

எங்களுக்கு டீ பிடிக்காது. சரக்கு கொடுங்க - குடி மகன்கள்.

இந்தாளுக்கு உப்புமாவைக் கொடுங்க - மனைவி

அனைவருக்கும் மிக்சர் கொடுங்க - தமிழக அரசு.

எல்லோருக்கும் அல்வா கொடுங்க - மத்திய அரசு.

வலைபாயுதே

twitter.com/Annaiinpillai

இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ச.ம.க ஆதரவு - சரத்குமார்# உங்களுக்கு ஓட்டு சென்னையிலதானே இருக்கு..?!

twitter.com/sultan_Twitz

தூத்துக்குடித் துப்பாக்கிச் சூடு நடந்தது முதலமைச்சருக்குத் தெரியாது,

நீட் சட்ட மசோதா திருப்பி அனுப்பியது சட்ட அமைச்சருக்குத் தெரியாது,

ஆவின் கலப்பட ஊழல் பால்வளத்துறை அமைச்சருக்குத் தெரியாது,

கல்லூரிப் பாடத்தில் பகவத் கீதை சேர்த்தது உயர்கல்வித்துறை அமைச்சருக்குத் தெரியாது.

வலைபாயுதே

twitter.com/nagajothin

மொத்தம் 76 கோடி ஓட்டுகள் பிக்பாஸில் போடப்பட்டுள்ளது.

அன்புமணி ராமதாஸ் : சோதிக்காதிங்கடா..

twitter.com/

AmJHjN2SeYLskDU/

லோன் வேணுமான்னு போன் பண்ணிக் கேட்ட மாதிரி திரும்பக் கட்டலைன்னா போன் பண்ணித்தான கேட்கணும்..! அதென்ன நேர்ல வந்து கேட்கிறது?!

facebook.com/iam.suriyaraj

என் அம்மாவுக்கு முகினாவும், என் ஃபிரெண்ட்ஸுக்கு சாண்டியாவும் தெரியுற நான், என் மனைவிக்கு மட்டும் கவினா தெரியுறது என்ன டிசைன்னு புரியலை...

வலைபாயுதே

twitter.com/AlaTwitz

தற்போதைய இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கு முகலாயர்களும் ஆங்கிலேயர்களுமே காரணம் - யோகி. இந்தத் தடவை நேருவுக்கு லீவு விட்ருக்காங்க.

twitter.com/manuvirothi

ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாயைத் தாண்டுகிறது. பிரதமர் நேரு அவர்களே, கட்டுப்படுத்தாமல் என்ன செய்கிறீர்?

twitter.com/JamesStanly

மதுரை மாநாட்டில் கட்சிப்பெயரை அறிவிக்கிறார் ரஜினி... கீழடியில் கிடைத்த செப்புத்தகட்டில் தகவல்.

twitter.com/sultan_Twitz

இந்தியாவுக்குள் ஊடுருவ 500 தீவிரவாதிகள் தயார் நிலையில் உள்ளனர் - ராணுவத் தளபதி பிபின் ராவத் #ரைட்டு பெட்ரோல்,டீசல்,கேஸ் சிலிண்டர் ரேட்டை ஏத்தப்போறாங்கபோல..?!