twitter.com/RahimGazzali
‘- துணை முதல்வரின் பெயருக்கு விளக்கம் அளித்த செல்லூர் ராஜு, அப்போ, ஈ.பி.எஸ்ஸுக்கு ‘ஈ என்றால் ஈ என்று இளிப்பது, பி என்றால் பர்பி தேடியது, எஸ் என்றால் சசிகலா காலில் விழுந்தது’ என்று விளக்கம் சொல்வாரோ?!
twitter.com/motheen_farook
லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவம் கொள்ளையர்கள் பயன்படுத்திய முகமூடிகள் வாங்கப்பட்ட கடை கண்டுபிடிப்பு - செய்தி. இந்நேரம் முகமூடி விற்ற கடைக்கு சீல் வைத்து கடை ஓனரைக் கைது செய்திருப்பாங்கல்ல..?!

https://twitter.com/JamesStanly
ரொம்பதூரம் போய்ட்டியா ராம்...
இப்பதா பெருங்களத்தூர் தாண்டுறேன் ஜானு... #பண்டிகை தினப் பரிதாபங்கள்.
twitter.com/itzkarthik_v
ரயில்வேயைத் தனியார்மயமாக்கினால், பெரிய அளவில் பயன் தரும். - பிரேமலதா விஜயகாந்த்.
அவங்களுக்கும் தீபாவளி போனஸ் வேணும்ல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALStwitter.com/ iParisal
மத்திய அரசை மனசுல வெச்சுக்கிட்டு, எந்தக் கொள்ளை நடந்தாலும் ‘வடமாநிலத்தவர் கைவரிசை’ன்னு சொல்றது கொஞ்சங்கூட நல்லால்ல.
facebook.com/vadivel. urugan.796
தளபதி 64... சுப்பையா பாண்டியன் on the board...
யாரு நண்பா, புரியல...
புரொடக்ஷன் டிபார்ட்மென்ட் நண்பா.மெஸ்ல ஊத்தாப்பம் சுடுறவரு...

twitter.com/Thaadikkaran
இந்நேரம் மணிரத்னத்தோட ஜாதகத்தை ஆராய்ச்சி பண்ணி ‘ரோஜா’ படம் எடுக்கும்போது தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்துச்சுன்னு கதை ரெடி பண்ணிருப்பாங்கதானடா..!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

twitter.com/ItsJokker
`கொடுமை’ என்பது யாதெனில், நாலு இடத்துக்குப் போகப் பயன்படும்னு கார் வாங்கி, கடைசியில கார் வாங்கிட்டோமேன்னு, `நாலு இடத்துக்குப் போயிட்டு வர்றது’தான்..!
twitter.com/saysatheesh
ஒரு காபி சாப்பிடக்கூட அன்னபூர்ணா செல்லும் சமூகத்தையும், அன்னபூர்ணா சென்றால் ஒரு காபி மட்டுமே சாப்பிட முடிகிற ஒரு சமூகத்தையும் சமமாகக் கொண்டது கோவை.
twitter.com/manipmp
மடியில பவர் பேங்க் இருந்தால் வழியில பயம் இருக்காது.

twitter.com/mohanramko
ரத்த தானம் செய்ய மக்கள் பெருமளவில் முன்வர வேண்டும் - முதலமைச்சர்
ஏன்யா அண்ணாமலை, அதுக்காகத்தான் ஏர்போர்ட்ல இருந்து மாமல்லபுரம் வரை பேனர் வைக்க அனுமதி கேட்டயா?
twitter.com/Zenselvaa
சீன அதிபரை, மீனம்பாக்கத்துல இருந்து மகாபலிபுரத்துக்கு ஹெலி காப்டர்ல கூட்டிட்டுப் போறதுக்கு ஏன் சாலை நெடுக வரவேற்புப் பதாகைகள்..?

twitter.com/shivaas_twitz
ஆபீஸ் மீட்டிங்கில், நமக்கு சம்பந்தம் இல்லாத டாபிக் ஓடும்போது செய்வது:
-யாரோட டிரஸ் நல்லாருக்குன்னு பார்ப்பது.
-எத்தனை பேர் கண்ணாடி போட்டுருக்காங்கன்னு எண்ணுவது.
-அந்த ஹாலில் எத்தனை லைட்னு எண்ணுவது.
-நோட்டில் நமது ஓவியத் திறமையைக் காட்டுவது.
-கடைசியாக, தாடைக்கு முட்டுக் கொடுத்துத் தூங்குவது.

facebook.com/Abdul Hameed Sheik Mohamed
ஒரு வருஷத்துக்குள்ள ‘96’ ஏன் 50 வருஷம் பழைய படமா இருக்கு?
twitter.com/teakkadai1
முத்துச்சாமிங்கிற பேர்ல இந்திய டீம்லகூட ஒரு வீரர் ஆடமுடியாது. தென்னாப்பிரிக்க டீம்ல விளையாடுறார்.

facebook.com/மேகவண்ணன் புதியதடம்
ஒரு நல்ல சினிமா என்பது படம் முடிந்த பிறகும் நம் சிந்தனைகளை ஆக்கிரமிப்பது, பதற்றத்தில் வைத்திருப்பது, நம்மை வழக்கம்போல் இயங்கவிடாமல் ஒரு தொந்தரவு செய்வது, உச்சமாக, திரையைக் கிழித்துக்கொண்டு கதைக்குள் போய் ஏதாவது செய்துவிட முடியாதா என ஆற்றாமையில் உழலச்செய்வது.

facebook.com/Vinayaga Murugan
டெல்லி வந்துள்ளேன். எங்கு திரும்பினாலும் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள். சிக்னல்களில், மசூதிகள் வாசலில், சாலையோரமாக, செங்கோட்டை வெளியே என்று எங்கு பார்த்தாலும் பிச்சைக்காரர்கள்தான். தலைநகரில் இவ்வளவு பேர் பிச்சை எடுக்கிறார்களா என்று திகைப்பாக இருக்கிறது. ஆச்சர்யம் அத்தனை பேரும் சொல்லிவைத்ததுபோல இந்தியில் பிச்சை எடுக்கிறார்கள். பாதிப்பேர் கைரிக்ஷா இழுக்கிறார்கள். தமிழ்நாட்டில் கைரிக்ஷாவை ஒழித்து முப்பது வருடங்களாகிவிட்டன. டெல்லியில் ஓடும் ஒரு அரசுப்பேருந்து கூடப் புதுசாக இல்லை. என்னத்தைச் சொல்றது? திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒறவே.