Published:Updated:

வலைபாயுதே

vikram
பிரீமியம் ஸ்டோரி
vikram

ஃபேஸ்புக்கைத் திறந்தாலே யாராவது ஒரு கிழவனார், காதலியைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டி ருக்கிறார்.

வலைபாயுதே

ஃபேஸ்புக்கைத் திறந்தாலே யாராவது ஒரு கிழவனார், காதலியைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டி ருக்கிறார்.

Published:Updated:
vikram
பிரீமியம் ஸ்டோரி
vikram

facebook.com/Vigneswari Suresh

ஃபேஸ்புக்கைத் திறந்தாலே யாராவது ஒரு கிழவனார், காதலியைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டி ருக்கிறார்.

twitter.com/SKP KARUNA

இந்தியப் பிரதமர், சீன அதிபரின் மாமல்லபுரச் சந்திப்புக்கு, சீன அதிபரை வரவேற்றும், இந்தியப் பிரதமரைத் திரும்பிப் போகச் சொல்லியும் ட்வீட் போடறதுலே என்ன லாஜிக்? போயிட்டா யாருடன் சீன அதிபர் பேச்சுவார்த்தை நடத்துவார்? அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடனா?

#உங்களுக்குஎங்கே மொட்டை போட்டாங்க

ileana
ileana

twitter.com/சப்பாணி

இந்த நகைக்கடைக்காரங்க பில்போடும்போது கால்குலேட்டரில் எல்லா கீயையும் யூஸ் பண்ணுறாங்க.

twitter.com/ஜோக்கர்

சிம்பு டு ஃபேன்ஸ்

எதுக்குக் கவலைப்படுறே?! அடுத்தவாரம் வெளிநாடு போறேன், வர்றப்ப நாலஞ்சு ஸ்டில் விடுவேன். இன்னும் 2, 3 படம் புக் பண்ணப்போறேன். எல்லாம் உனக்குத்தான்.

ஏன் படம் ரிலீஸ் ஆகலைன்னு நீயும் கேட்கக்கூடாது. இன்னும் நீ என் ஃபேனாதான் இருக்கியான்னு நானும் கேட்கமாட்டேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

twitter.com/Pandidurai

என்னுடைய புத்தகம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கையில் இருக்கும் என்று நினைக்கிறேன், நான் எண்ணிய திட்டங்களை அவர் அங்கே நிறைவேற்றிவருகிறார் - சீமான்.

எங்களைத் தமிழ் படிக்கச் சொல்லிட்டு தெலுங்குல புக்கு எழுதிருக்கீங்களா, சொல்லுங்க நீங்க வந்தேறிதானே!

Pooja Hegde
Pooja Hegde

facebook.com/Meenamma Kayal

திரும்பிச் செல்வதற்கு வீடும், வீட்டில் உங்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு சிலரும் இருந்தால் மட்டுமே அது பண்டிகை. இல்லையென்றால் விடுமுறைநாள்.

facebook.com/ரமேஷ் வைத்யா

‘ஆஹாஹா... மிகுந்த குறும்போடு கூடிய நகைச்சுவையாக உள்ளது’

என்பதன் சுருக்கம்தான், ‘யோவ்’ போலிருக்கிறது.

twitter.com/Zen Selvaa

மணிரத்னம், ரேவதி ஆகியோர்மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கு ரத்து.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது என்பது வழக்கு தொடுத்தவர்களுக்கே தெரியும். தெரிந்திருந்தும் வழக்கு தொடுக்கிறார்கள் என்றால், தண்டனை பெற்றுத் தருவதற்காக அல்ல, எதிர்ப்ப வர்களை எச்சரிப்பதற்காக - மிரட்டு வதற்காகத்தான்.

twitter.com/mohanram.ko

நான்கு நாள்கள் விடுமுறை முடிந்து, அலுவலகம் கிளம்பும்போது ‘இன்னைக்கு போகாம விட்டுடலாமா’ன்னு நம்ம மனசுக்குள் இருந்து ஒரு சிம்பு எட்டிப் பார்க்கிறார்.

twitter.com/அபிவீரன் akkutwitz

தமிழகத்தில் பகுத்தறிவு தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது!

- ஹெச்.ராஜா #

மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் அகத்தியர்னு சொல்றதுதான் பகுத்தறிவா ராசா?

twitter.com/ஜால்ரா காக்கா

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார் RK. சுரேஷ்

ஊர்ல சூரி காமெடி புடிக்கலைன்னு சதீஸ் காமெடி பார்த்தானாம் ஒருத்தன்.

facebook.com/Umanath Selvan

கிண்டி - மாமல்லபுரம் சாலையில் இந்த உக்கிர வெயிலில் ஒரு நொடிகூட நிற்காத கார்களுக்காக வரவேற்கக் காத்திருக்கும் பிஞ்சுக்குழந்தைகளை நினைக்கும்போது அடி வயிறு பற்றிக்கொண்டு எரிகிறது.

vikram
vikram

twitter.com/GreeseDabba2

இன்றைய தேதியில், மொபைலைப் பார்த்துக்கொண்டே யார் மேலும் மோதாமல் நடப்பதை, வேலைக்கு மனு அளிக்கும்போது ஒவ்வொருவரும் தங்கள் ரெஸ்யூமில் ஒரு கூடுதல் தகுதியாகவே குறிப்பிடலாம்.

twitter.com/Vicky_stirring

சலூனில் நமக்கு முன்னர் முடிவெட்டி ட்ரிம் செய்து முடித்தவுடன் இறங்கப் போறார் என நினைக்கும்போது க்ரீம் போடுங்க என்கிறப்ப வரும் பாருங்க ஒரு கடுப்பு...

நமக்குள் தூங்கிட்டு இருக்கும் மிருகம் எழுந்து க்ரீம் போட்டு என்ன சாதிக்கப் போற எனக் கேட்கும் அளவுக்கு.

twitter.com//Annaiinpillai

காலையில் 6 மணிக்கு முன்னாடி எழுந்து படிச்ச கடைசித் தலைமுறை 90ஸ் கிட்ஸாகத்தான் இருக்கும்..!

twitter.com/prakashT

பக்குவம் என்பது யாதெனில், விலக்கிய பாத்திரங்களை பத்திரமாய் அடுக்கி வைப்பதில் இருக்கு என்கிறார் நவீன கணவர் ஒருவர்.