Published:Updated:

வலைபாயுதே

Priya Bhavani Shankar
பிரீமியம் ஸ்டோரி
Priya Bhavani Shankar

ட்விட்டர் வந்து கத்துக்கிட்ட விஷயம், ட்விட்டர் வரலைனா நிம்மதியா இருக்கலாம்கிறதுதான்.

வலைபாயுதே

ட்விட்டர் வந்து கத்துக்கிட்ட விஷயம், ட்விட்டர் வரலைனா நிம்மதியா இருக்கலாம்கிறதுதான்.

Published:Updated:
Priya Bhavani Shankar
பிரீமியம் ஸ்டோரி
Priya Bhavani Shankar

twitter.com/_Inshira_

ட்விட்டர் வந்து கத்துக்கிட்ட விஷயம், ட்விட்டர் வரலைனா நிம்மதியா இருக்கலாம்கிறதுதான்.

twitter.com/HAJAMYDEENNKS

கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதால் என் பொறுப்புகள் அதிகமாகியிருக்கிறது - எடப்பாடி #ஸ்டெதஸ்கோப் போடணும்னு நினைச்சுட்டாரோ!

Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar

twitter.com/Thaadikkaran

ஒவ்வொரு பண்டிகைக்குத் துணி எடுக்கப் போகும்போதும், ‘எனக்குப் புதுத் துணி ஒண்ணு இருக்கு, நான் அதைப் போட்டுக்குறேன்’ என்ற ரெடிமேடு பதிலை வைத்திருப்பார் அப்பா..!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

twitter.com/mohanramko

படுத்துக்கிட்டே டிவி பார்க்கும்போது நல்லா வரும் தூக்கம், எழுந்து போய் டிவியை ஆஃப் பண்ணினதும் போயிடுவதெல்லாம் என்ன டிசைனோ.

twitter.com/GreeseDabba2

பெண்கள் அப்படி ஒன்றும் கணவனைப் பேச விடாமல் தான் மட்டும் பேசிக் கொண்டே இருப்பதில்லை. என்ன, கணவன் பேசும்போது மிக்ஸியில் சட்னி அரைப்பார்கள், அவ்வளவுதான்.

Nivetha Pethuraj
Nivetha Pethuraj

twitter.com/Ramesh46025635

குளிர்ந்த நீரில் குளிக்கும் முன் “ஒன்...டூ...த்ரி” சொல்லிக்கொண்டால் நீயும் என் தோழனே...!

twitter.com/Its_SK4

அழகான மனைவி, அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே.

துரைக்கு ரெண்டு பொண்டாட்டி கேட்குதோ.

twitter.com/Vicky_stirring

வெயில் காலத்தில் பாதசாரிகளுக்குத் தண்ணீர்ப் பந்தல், மோர்ப் பந்தல்னு வைக்கிறாங்க. மழைக்காலத்தில டீ, காபி, பூஸ்ட் பந்தல் வைக்கலாமே. ஐடியா இல்லாத பசங்க..!

Pranitha Subhash
Pranitha Subhash

facebook.com/gkarlmax

டாக் பழனிசாமி, டர் பன்னீர் செல்வம்னு பட்டத்தையும் சமமா பகிர்ந்து கொடுத்துடுங்க. அப்புறம் அதுக்கும் சண்ட வந்துடப்போகுது பாவத்த!

facebook.com/vadivel.murugan.796

அமெரிக்கால அந்த ரெட்டக்கோபுரத்த ப்ளைட்ட வெச்சு இடிச்ச கேசு தீர்ப்பாயிருச்சாடா?

தெரியலணே.

என்னான்னு பாரு, அண்ணன் அடுத்த மேடைல அதுக்கும் சரண்டராகுறேன்.

facebook.com/iMuthuram

பைக் ஓட்டும்போது ஒரு பெருத்த பட்டாம்பூச்சி ‘நத்’துனு நெத்தில அடிச்சதுல கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. வேறு வழியில்லாம அந்த வார்த்தைய சொல்ல வேண்டியதாப் போச்சு. கிட்டத்தட்ட இது தினமும் நடக்கும்.

பட்டாம்பூச்சிகளையே நம்மால எந்நேரமும் லயிச்சு ரசித்துக்கொண்டே இருக்க முடிவதில்லை. இவனுங்க எப்டி டெய்லி கவித எழுதுறானுங்க?

Baahubali
Baahubali

facebook.com/santhosh.narayanan.319

வடிவேலுவின் வசனங்களிலிருந்து இன்ஸ்ஃபயராகி எழுதப்பட்ட நவீனக்கவிதை.

உயிர்ச்சாறு உறிஞ்சிய

காகிதக் கசக்கலில்

எண்ணெய்ப் படிமங்கள்

அற்று வீசியெறிந்த பருப்பு வடை

காற்றில் எழுதிச்செல்கிறது

மாஸ்டரின் வாழ்வியலை.