Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

ஜில்... ஜில்... கூல்... கூல்!

வலைபாயுதே

ஜில்... ஜில்... கூல்... கூல்!

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

twitter.com/Dr Ravikumar M P

69% இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வராமல் 10% இட ஒதுக்கீடு தரலாம் என்பது அறைக்கு பாதிப்பு ஏற்படாமல் அடித்தளத்தை இடித்துக்கொள்ளலாம் என்பதைப் போன்றது.

facebook.com/Bhaskar Sakthi

உனக்கு ஏன் கிரிக்கெட் பிடிக்கிறது என்று நண்பர் கேட்டார். என் பதில் ``உலகத்திலேயே கூலிங் கிளாஸ் போட்டுட்டு விளையாடற ஆட்டம் வேற என்ன இருக்கு?”

வலைபாயுதே

twitter.com/shivaas_twitz

இந்த NZ Vs IND மேட்ச்சோட ஹைலைட்ஸ் பார்க்கிறதெல்லாம், நம்ம கல்யாண வீடியோவை நாமளே திரும்பப் போட்டுப் பார்க்குற மாதிரி கொடுமையான விஷயம்.

twitter.com/nandhu_twitts

வந்த வழியே திரும்பிச் செல்பவர்கள். ஹெல்மெட் போடாமல் வந்திருப்பார்கள்..!

twitter.com/Kozhiyaar

‘கடந்து செல்லுங்கள்’ என்பது ‘பழகிக் கொள்ளுங்கள்’ என்பதன் நாகரிக வெளிப்பாடுதான்!

twitter.com/ItsJokker

6 மணிக்கு முன்பே முழிப்பு வந்து விட்டால் அது விடுமுறை நாள்கள் எனவும், 8 மணி வரை தூக்கம் வந்தால் அது வாரநாள்கள் எனவும் அறிக..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வலைபாயுதே

twitter.com/amuduarattai

கறி வாங்கும் எல்லோருக்கும் கொழுப்பும் எலும்புமாகத் தரும் மட்டன் கடைக்காரர்கள், கடைசியாக, யாருக்குத்தான் அந்த நல்ல கறியைத் தருவார்களோ?!

facebook.com/mathukkur.ramalingam

புறநானூறு கேட்டுக் கைதட்டிப் பாராட்டி விட்டு சட்டைப்பையைப் பார்த்தால் இருந்த நானூறும் காணவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

twitter.com/Jino_Offl

நம்மள வீட்ல அதிகமா போட்டுக் கொடுக்கிறது:

1. செல்போன்

2. உயிர் நண்பன்

twitter.com/sultan_Twitz

இன்னா ரன்அவுட் செய்தாரை ஒருத்தர் அவர் தானே திரும்பவும் ரன்அவுட் ஆகி விடல்... ~ தோழர் குப்தில்

வலைபாயுதே

twitter.com/yugarajesh2

தமிழ்நாட்டில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் கொண்டு வர வேண்டும்-தனியரசு

#சட்டசபையில் ‘தண்ணீ’ பிரச்னை பற்றிப் பேசுங்கள்னு சொன்னதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டார் போல..!

twitter.com/Giri47436512

தலையில் பேன் பார்க்கும்போது அம்மாவிடம் குட்டு வாங்காத மகள்களே கிடையாது...

தனியாய் ஒரு வேலை செய்யும்போது அப்பாவிடம் திட்டு வாங்காத மகன்களே கிடையாது...

twitter.com/Deepika_offl

அம்புட்டு நியூசிலாந்து பிளேயர்ஸையும் ஐபிஎல் ஏலத்துல RCB க்கு எடுக்குறோம். அப்புறம் தரோம் உங்களுக்கு சாவுக்கு மேல பெரிய தண்டனை

வலைபாயுதே

twitter.com/devpromoth

பக்கிங்ஹாமுக்குக் கேட்கட்டும்...அயர்லாந்துக்காரன் கேப்டன்சியில், ஒரு கறுப்பினத்தவன் ஓவர் போட்டு ‘ராயல்’ இங்கிலாந்து வென்றுள்ளது...

twitter.com/oorkkavalaan

நமக்குப் பிடிச்ச மாதிரி ஒரு நாள் லைஃப் மாறும்...

அப்ப ஒன்னு நமக்கு தலையில `நர’ தள்ளியிருக்கும்...

இல்ல வாயில `நொர’ தள்ளியிருக்கும்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

twitter.com/bhavanya9512

சாமி வந்தாலும் பெண்களுக்குத்தான் வருது...பேய் பிடித்தாலும் பெண்களுக்கே பிடிக்குது...

இதென்ன கான்செப்ட்டு?

twitter.com/nelsonvijay08

பா.ஜ.க - காங் - இடதுசாரிகள் மூவரும் தமிழகத்தில் இணையும் ஒரே ஆச்சர்யப் புள்ளி, உயர்சாதியினருக்கான பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதில் மட்டுமே.

வலைபாயுதே

twitter.com/udaya_Jisnu

“சூர்யாவின் பேச்சு வன்முறையைத் தூண்டுகிறது” - எச். ராஜா.

# ராஜா பேசினாப்லனா, அப்படியே மனசு லேசாகி, ஆனந்தக்கண்ணீர் வந்திடும்...

Facebook.com/Narayani subramaniam

மீன்பிடித் தடைக்காலம் முடியும்வரை பேசிக்கொள்வதில்லையென்று முடி வெடுத்தோம். உன் கடல் மேற்கு, என் கடல் கிழக்கு என்பது நினைவிலில்லை. சண்டையிட்டு நாம் பிரிந்தபோது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது திசைமானி. இன்று கல்லறையில் நடுங்கி தெற்கு மட்டும் காட்டுகிறது.

வலைபாயுதே

facebook.com.dextermorgan9192

‘whatsapp வா எரும’

அவங்க நம்பர் இவருக்கிட்ட இருக்காம்..

Facebook.com/Shalin Maria Lawrence

‘கும்பளாங்கி நைட்ஸ்’ படத்துக்கு எல்லாம் விமர்சனம் எழுதக்கூடாது சார்...பாத்து முடிச்சிட்டு அப்படியே முகத்துல ஒரு சின்ன புன்னகையோட ஒரு கிளாஸ் காபி எடுத்துட்டு மொட்டமாடி போய் அந்த காபி வாசத்தோட அண்ணாந்து வானத்த பாத்து அப்படியே லயிச்சுப் போகணும்.

சிலதை எல்லாம் ரசனையோடு நிறுத்திக்கணும். அதைப் பத்திப் பாடம் எடுக்கக்கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism