Published:Updated:

வலைபாயுதே

சிம்பு
பிரீமியம் ஸ்டோரி
சிம்பு

பசு ஒரு புனித விலங்கு என்றுதான் சொல்லிவந்தார்கள்.

வலைபாயுதே

பசு ஒரு புனித விலங்கு என்றுதான் சொல்லிவந்தார்கள்.

Published:Updated:
சிம்பு
பிரீமியம் ஸ்டோரி
சிம்பு

facebook.com/Kumaresan Asak

பசு ஒரு புனித விலங்கு என்றுதான் சொல்லிவந்தார்கள். இல்லை, அது ஒரு புனிதத் தாவரம்! விலங்குகள் ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன, தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடுகின்றன. இது பள்ளிப் பாடம். “பசுக்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.” - இந்த அரிய அறிவியல் உண்மையை வெளியிட்டிருப்பவர், உத்தர்கண்ட் மாநில பா.ஜ.க அரசின் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்.

வலைபாயுதே

ஆகவே, ஆக்சிஜனை வெளியிடுவதால் பசு ஒரு தாவரமாகத்தானே இருக்க முடியும்? டேராடூன் நகரில் நடந்த ஒரு விழாவில் முதலமைச்சர் விண்டுரைத்த இதர பசு மகாத்மியங்கள்: “பசுவைத் தடவிக் கொடுத்து மசாஜ் செய்தால் சுவாசக் கோளாறுகள் நீங்கும்.” (பசுவுக்கா, தடவிக் கொடுப்பவருக்கா?) “பசுக்களின் அருகில் வாழ்ந்தால் காச நோய் குணமாகும்.” தேசிய கல்விக் கொள்கையின் கீழ் தயாராகும் பாடப் புத்தகங்களில் இதெல்லாம் இடம்பெறுமோ? நினைத்தாலே கெதக்கென்றிருக்கிறது. சொல்பவர் சாதாரண பள்ளி முதல்வரா என்ன, மாநில முதல்வராயிற்றே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

twitter.com/shivaas_twitz

முன்னெல்லாம் உருப்படாம தறுதலையா சுத்துனா கால்கட்டு போட்டுவிடச் சொல்லுவாங்க. இப்போ கைக்கட்டு போட்டு விடுறாங்க. #ரூட்டுதல

வலைபாயுதே

twitter.com/Raajavijeyan

கணவன் மனைவிக்குள் சண்டை வர பெரிசா ஒண்ணும் காரணங்கள் தேவையில்லை. குளிச்சுட்டு பெட்ரூம்ல போட்ட ஈரத்துண்டு போதும்...

twitter.com/manipmp

யோசிச்சு சொல்லுங்கன்னு சொன்னவுடன் மூளை யோசிப்பதை நிறுத்திவிடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

twitter.com/HAJAMYDEENNKS

இப்ப வரும் படங்களில் கதை இருக்குதோ இல்லையோ, யோகிபாபு இருக்கிறார்!

twitter.com/ItsJokker

எங்கள் ஆட்சியின் சாதனையைக் கூறி முடிக்கவே மூன்று மணி நேரம் தேவைப்படும் ~ எடப்பாடி பழனிசாமி.

யப்பா, இதை `உங்க ஆட்சி’ன்னு நீங்க சொன்னதே பெரிய சாதனைதானேப்பா?!

வலைபாயுதே

twitter.com/ItsJokker

`தொலைந்த பைக் சாவிக்கும் ஒரு ரிங்டோன் இருக்கக்கூடாதா’ என, தேடும்போது நினைக்கவைத்ததுதான் `மொபைலின்’ சாதனை..!

twitter.com/withkaran

கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி... இனி தமிழிசை கர்நாடகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி காவிரியில் தண்ணீர் வரவழைப்பார்...

வலைபாயுதே

twitter.com/ThePayon

ஒரு நண்பருடன் பேசுவதை நீண்டகாலம் தள்ளிப்போட்டுக்கொண்டு இருந்தால், கடைசியில் ஒரு உதவி கேட்க அவரை அழைக்க வேண்டியிருக்கும். உதவி தேவை என்றால் மட்டும் அழைக்கிறான் என அவர் நம்மைத் தவறாக நினைத்துக்கொள்ளலாம். அதற்காகத்தான் நான் என் நண்பர்களுக்கு அடிக்கடி போன் செய்து “வச்சிரவா?” என்பேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism