சினிமா
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே

சிவ கார்த்திகேயன்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவ கார்த்திகேயன்

கஷ்டத்துலதான் உண்மையான நட்பைத் தெரிந்துகொள்ள முடியும்.

twitter.com/ItsJokker

எப்படி சின்ன வயசுல பின்னாடி இருக்கிற விடைக்கு ஏத்த மாதிரி கணக்கைக் கொண்டு வருவமோ,

அதே மாதிரி பிரச்னைக்கு காரணமே கணவர்ங்கிற மாதிரி சண்டையைக் கொண்டு வர்றதுதான் மனைவியோட புத்திசாலித்தனம்..!

twitter.com/lakschumi

இந்தப் பசங்களுக்கு பீரியட்ஸ்னா மாத்திரை வாங்கித் தர்ரது, இல்ல, பேட் வாங்கி தர்ரது ஒண்ணும் பெரிய புரிதல் தந்துடாது. பயங்கர க்ராம்ஸ் இருக்கப்பதான் நொய் நொய்யுன்னு எதாவது சொல்லறது, இல்ல, இதைச் சமைச்சுத் தா அதைச் செய்யுன்னு கடுப்பேத்தாம இருக்கறதவிட என்ன அனுசரணையா இருந்துட முடியும்.

வலைபாயுதே

twitter.com/MdIbrahimSiraj

பரியேறும் பெருமாளுக்கோ மேற்குத் தொடர்ச்சி மலைக்கோ தேசிய விருது கிடைக்காததில் வியப்பேதும் இல்லை...

ஏன்னா, ரெண்டும் அவிங்க அடிமடில கைவச்ச படம்...

twitter.com/Karthika_talkz

கஷ்டத்துலதான் உண்மையான நட்பைத் தெரிந்துகொள்ள முடியும்.

ஏன்னா, அந்த நாய்தான் விழுந்து விழுந்து சிரிக்கும்.

twitter.com/Thaadikkaran

நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் - ரஜினிகாந்த்!

எப்போ வருவேன்னு எனக்கே தெரியாது - சிம்பு..!

twitter.com/sundartsp

இந்தியனில் வயசான கமலுக்கு நிறைய மேக்கப் தேவைப்பட்டுச்சு இந்தியன் 2-ல் இளைய கமலுக்கு நிறைய வேணும்.

வலைபாயுதே

twitter.com/ItsJokker

`ப்ரியா’க்கள் என்றால் பேக்ஐடிகள் என்றும் `கார்த்திக்’குகள் என்றால் ப்ளேபாய்கள் என்றும் கண்டுபிடித்தது 90ஸ் கிட்ஸின் சாதனைகளில் ஒன்று..!

twitter.com/RahimGazzali

இனி காஷ்மீரில் சூட்டிங் நடத்தலாம்! - மோடி

இப்பவும் ராணுவம் அதைத்தானே நடத்திட்டிருக்கு?!

twitter.com/oorkkavalaan

OK என்கிற பெரிய வார்த்தையில் வெறும் K யை மட்டும் type பண்ணுபவர்கள் நாட்டை வல்லரசாக்கும் அவசரத்தில் இருப்பவர்கள் போலும்...

twitter.com/Thaadikkaran

வைகோவுடன் selfie எடுக்க ₹100! # சிவகுமாருடன் selfie எடுத்தால் போன் இலவசம்..!

வலைபாயுதே

twitter.com/manuvirothi

மீண்டும் சொல்கிறேன்,

ஓர் அரசுக்கு மிருகபலத்தைக் கொடுத்துவிட்டு அதனிடம் மனிதத்தன்மையை எதிர்பார்க்காதீர்!

twitter.com/gips_twitz

ஆள் கிடைக்காததால் பிச்சைக்காரர்களை அழைத்து வந்து கூட்டம் நடத்திய தமிழிசை - செய்தி

யாருக்குத் தெரியும், ஜிஎஸ்டிக்கு முன்னாடி தொழிலதிபரா இருந்தவங்களா இருக்கும்!

twitter.com/iam_Saranallu

சரித்திரத்த திருப்பிப் பார்த்தா

அது நமக்குக் கத்துக் கொடுக்குறது

ஒண்ணே ஒண்ணுதான்..

நம்ம வாழணும்’னா நேரா நேரத்துக்கு சாப்பிடணும்!

facebook.com

Saravanakarthikeyan

Chinna durai

ரஜினி தன் அரசியல் அறிவை விருத்தி செய்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது. இல்லையெனில் “எந்தக் காஷ்மீர்?” என்றுதான் கேட்டிருப்பார்.

வலைபாயுதே

facebook.com/Mano Red

இந்த ஒருதுளி அன்புன்னு சொல்றியே... அத மொத்தமா ஒரு கரண்டில புடிச்சு மேல ஊத்து, ஆறுதலா இருக்கா பாப்போம்.

facebook.com/Karthik

மழையோடு சேர்ந்து சோம்பலும் கூடவே வந்துவிடுகிறது.

நிஜமாகவே மழையை ரசித்தல் என்பது, குளிருக்கு இழுத்துப் போர்த்தி உறங்குதல்தான்.

twitter.com/ItsJokker

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் - முதல்வர் பழனிசாமி

சைக்கிளை எப்போயா விடுவே? வாடகை கொடுக்கும்போது விடுவேன்.

வாடகை எப்போயா குடுப்பே?

சைக்கிளை விடும்போது குடுப்பேன்.

வலைபாயுதே

twitter.com/RahimGazzali

அன்புமணியின் வாதிடும் திறமை, தமிழகத்தில் எந்தத் தலைவருக்கும் இல்லை! - டாக்டர் ராமதாஸ்

அதான் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பார்த்தோமே!

twitter.com/mufthimohamed1

ஒரு கிலோ ஆப்பிள் எவ்வளவு...?

180 ரூபாய்..

அதான் காஷ்மீர இணைச்சாச்சுல பின்ன எதுக்கு 180 ஓவா கேக்குற என் சிப்சு..

gips_twitz

எந்தப் பொண்ண கேட்டாலும் மழையில நனையிறது ரொம்பப் பிடிக்கும்னு சொல்லுறாங்க

காலையில இருந்து மழை பெய்யுது ரோட்டுல ஒரு பொண்ணைக் கூட காணல!

வலைபாயுதே

twitter.com/MJ_twets

சிலைகளுக்கு மட்டும் செல்ஃபி எடுக்கும் போது உயிர் வந்தா செவுள் மேல ஒண்ணு வெச்சிடும்!