Published:Updated:

இ-பாஸ் 'ரிஜெக்டட்' பல்பு... பி.பியை ஏற்றிவிட்ட ஈ.பி பில்... லாக்டெளன் அலப்பறைஸ்!

இ-பாஸ்
இ-பாஸ்

குணமாகிவந்த வாயோடு, 'வைரஸ் டச் பண்ணிட்டுப்போச்சு. டிச் பண்ணல!' என்றெல்லாம் காமெடி பண்ணிக் கதறவிட்டார். சைடுகேப்பில் ஈ.பி பில் தமிழனின் பி.பியை ஏற்றிவிட்டுப்போனது.

இ-பாஸ் அலப்பறைஸ்:

ஆன்லைனில் 'எப்படிப் போறே... ஏன் போறே... எதுக்குப் போறே... எப்ப வருவே?' என்று `புலி' பட விழாவில் பேசிய டி.ஆர் போல எக்கச்சக்க கேள்விகளை அரசாங்கம் கேட்டாலும் சின்ஸியராய் பதில் சொல்லி 'ரிஜெக்டட்' பல்பு வாங்குகிறான் தமிழன்.

டிராவல் எஜென்ட்டை வைத்து புக் பண்ணினால்கூட 'ராம்நாட் டு கரூர் கிடைக்கல. அதுக்குப் பதில் கரூர் டு ராம்நாட் டிராவல் புக் பண்ணிட்டேன் சார்! போங்க பார்த்துக்கலாம்!

போலீஸ் நிறுத்திக் கேட்டா, அஞ்சாவது படிக்கிறேன்னு விரல் சூப்பிட்டே சொல்லுங்க!' என்று அவர் புது ரூட்டு சொல்ல... `தில்லுவாலே புச்சுடேனுச்சா... ஓ' என்று ஒப்பாரி வைத்து அழுகிறான்.

அரசின் அலப்பறைஸ்:

'இது லட்சுமணக்கோடு... தாண்டப்படாது. நீங்கள் வெளியே போனால் கொரோனா உங்கள் வீட்டுக்குள் வரும்... ஆரோக்கிய சேது செயலியை மறக்காமல் பயன்படுத்துங்கள்' என்று மோடி பேசியதும் சிலிர்ப்பாயிருந்தது அவனுக்கு!

அவர் முதலில் அவனைக் கைதட்ட வைத்தார். பிறகு விளக்கேற்ற வைத்தார். இந்தியாவோடு சேர்ந்து டிங் டிங் டிகாணாவாகி அவனை மெய் சிலிர்க்க வைத்தார். ஆனால், அவன் வீட்டுவாசலில் கார்ப்பரேஷன்காரர் தகரஷீட் வைத்து அடைத்துவிட்டுப் போனபிறகும் மோடி சொன்ன ஆரோக்கிய சேது செயலியில் 'நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்' என்று காட்டியபோதுதான் கொஞ்சம் கடுப்பானான்.

'ஒன்றிணைவோம் வா!' என ஸ்டாலின் அங்கிட்டு கூப்பிட... 'வீட்டிலேயே இரு!' என எடப்பாடி இங்கிட்டுக் கத்த... 'செத்த அனத்தாம இருங்கய்யா!' என்றான் தமிழன்.

இ-பாஸ்
இ-பாஸ்

'கொரோனா வைரஸ்லாம் நாய்ங்க மாதிரி நாமெல்லாம் வடிவேலு மாதிரி. நம்மைக் கடிச்சா அதுதான் செத்துப்போகும்!' என்று சொன்ன சயின்டிஸ்ட் செல்லூர் ராஜுவுக்கும் தொற்று வந்தது. குணமாகிவந்த வாயோடு, 'வைரஸ் டச் பண்ணிட்டுப்போச்சு. டிச் பண்ணல!' என்றெல்லாம் காமெடி பண்ணிக் கதறவிட்டார். சைடுகேப்பில் ஈ.பி பில் தமிழனின் பி.பியை ஏற்றிவிட்டுப்போனது.

இன்றுவரை சமூகப் பரவல் தமிழகத்தில் இல்லை என்கிறார் எடப்பாடி. ஆனால் தமிழகம் தான் சமூகப் பரவலுக்குள் உள்ளது என்கிறது கொரோனா. இதனால் கபசுரக்குடிநீரை மூன்று வேளையும் குடித்து அல்சர் வந்து இஞ்சி தின்ற குரங்காகிப்போனான் தமிழன்!

- இந்த முழுநாடே கொரோனாவோடு போராடிக் கொண்டிருக்கும்போது ஊரடங்கு நாள்களில் தமிழன் செய்த, அட்ராசிட்டிகளுக்கு அளவே இல்லை... கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பார்ப்போமா? > ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2CsW6gw > கொரோனா - தமிழனின் டைரி குறிப்புகள் https://bit.ly/2CsW6gw

சிறப்புச் சலுகை:

விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிப்பதுடன், 15 ஆண்டுகால பொக்கிங்களிலும் வலம் வரலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு