பிரீமியம் ஸ்டோரி

இராம்குமார் சிங்காரம்

ஒருமுறை அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி (ஜே.எஃப்.கே), ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கானவெரல் ஸ்பேஸ் ஃபோர்ஸ் ஸ்டேஷனுக்கு (Cape Canaveral Space Force Station) சென்றிருந்தார். மனிதனை நிலவுக்கு அனுப்பும் பணியில் அந்த நிலையம் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.

இராம்குமார் சிங்காரம்
இராம்குமார் சிங்காரம்

அங்கே தரை துடைத்துக்கொண்டிருந்த ஒரு கடைநிலை ஊழியரிடம், “நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார் ஜே.எஃப்.கே. அதற்கு அந்த ஊழியர், “நான் தரை துடைத்துக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லாமல், “மனிதனை நிலவுக்கு அனுப்பும் வேலையைச் செய்கிறேன்” என்றார் பெருமிதத்துடன்.

சக்சஸ் ஃபார்முலா!

உங்கள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அவர்கள் என்ன பொருள் தயாரிக்கிறார்கள் என்று தெரியும். ஆனால், அந்தப் பொருள் மனிதர்களின் வாழ்க்கையில் என்ன விதமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று தெரிந்திருக்குமா?

உதாரணமாக, சட்டை தயாரிக்கும் வேலையைச் செய்யும் ஊழியர்கள், “பிறரது வாழ்க்கையைத் தரம் உயர்த்திக் காண்பிக்கும் பணியில் நான் ஈடுபட்டிருக்கிறேன்” என்று பெருமிதமாகச் சொல்லலாமே..? இரு சக்கர வாகனம் விற்கும் ஊழியர்கள், “பிறரது வாழ்க்கையில் வருமானத்தை உயர்த்தவும், அவர்களது வாழ்க்கையின் தரத்தை மேம்படச் செய்வதற்கும் உதவும் வேலையைச் செய்கிறேன்” என்று கூறலாமே..?

இப்படி தமது பொருள்களைப் பயன்படுத்தும் மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படுகிற மாற்றங்களை மனதில் கொண்டு அந்த வேலைகளை ஊழியர்கள் செய்கிறபோது அவர்களிடம் அதுவரை இல்லாத ஒரு பெருமிதம் பிறக்கும். அந்தப் பெருமிதம் இன்னும் உற்சாகமாகவும், பொறுப்புணர்வுடனும் வேலை செய்யத் தூண்டும்.

இதைத்தான் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் ஊழியர் களிடம் சொல்லித் தந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வைத்து, லாபத்தைப் பெருக்குகிறார்கள். இந்த சக்சஸ் ஃபார்முலாவை நாமும் ஏன் பின்பற்றி ஜெயிக்கக் கூடாது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு