Published:Updated:

வாசகர் மேடை: நாற்காலி கனவுகள்!

Stalin
பிரீமியம் ஸ்டோரி
News
Stalin

? இளம் வயதில் ஒரே ஒரு படத்தில் நடித்த ஸ்டாலின் இப்போது ஒரு படத்தில் நடித்தால், அந்தப் படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும்?

நாற்காலி கனவுகள்

த.ராஜவேல், தேனி

66 வயதினிலே

எம்.செல்லையா, சாத்தூர்

அப்பா சேர்த்த கூட்டம்

G. சத்தியமூர்த்தி, கும்பகோணம்

தம்பி... டீ இன்னும் வரல

கண்ணன், சென்னை

முதல்வன்-2

இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி

தளபதி s/o கலைஞர்

Sathia Moorthi

கனவே கலையாதே

சுகுமார் காட்பாடி

“The Vaccum is Filed, When it is Cried’’

இன்சொல் கீச்சன்

சூரிய வம்சம் 2.0

H.Umar Farook

தவமாய் தவமிருந்து

ராஜ்மோகன்

? பெண்களின் மனதைக் கடலுடன் ஒப்பிடுவது வழக்கம். ஆண்களின் மனதை எதனுடன் ஒப்பிடலாம், ஏன்?

கார்ப்பரேஷன் தண்ணீர்க் குழாய்

குமுதாசலம் , சேலம்

கல் மைசூர்ப்பாகு... லேசில் உடையாது.

ப்ரஸன்னா வெங்கடேஷ், Navi Mumbai

ஆண்களின் மனசு அண்டார்ட்டிகா மாதிரி.

மொத்தமும் வெள்ளைதாங்க!

செ. செந்தில்குமார்

பஞ்சுமிட்டாய்... ரொம்பப் பெருசா தெரியும்.சீக்கிரம் மடக்கி ஒரே வாயில் போட்டுக் கதையை முடிச்சிடுவாங்களே, அதனால்.

புகழ்

பென்டிரைவ்... தேவையில்லைனாலும் இடம் இருக்குன்னு சிலவற்றை அழிக்காம வச்சிருப்பாங்க.

Williamson

யூபிஎஸ்... குடும்ப விளக்கு அணையாமல் பாதுகாப்பதால்..!

laks Veni

வாசகர் மேடை: நாற்காலி கனவுகள்!

? யூடியூப் சினிமா விமர்சனங்களில் உங்களை எரிச்சலூட்டும் விஷயம் எது?

5000 படம் எடுத்த அபூர்வ டைரக்டர் ரேஞ்சுக்கு எல்லாப் படங்களையும் பத்திப் பேசறதுதான்.

Sowmya Red

படத்தில் அவர்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் எல்லாம் மற்றவர்களுக்கும் பிடிக்காது என்ற இளக்காரத் தொனியில் பேசுவது.

Mano Red

நாம தனியாப்போகவே 150 ரூபா செலவாகுமேன்னு யோசிப்போம். நிச்சயம் குடும்பத்தோடு போங்கன்னு பில்டப் குடுப்பாங்க.ஒருவேளை நாம தர்ற டிக்கெட் காசுல 10% கமிஷன் போகுதோ என்னவோ?

C P Senthil Kumar

ஜவ்வுப் படத்தை ‘ஜவ்வு’ன்னு ஷார்ப்பா சொல்லாம, இழுஇழுன்னு ஜவ்வா இழுத்தடிச்சுச் சொல்றது..!

Laks Veni

எந்த ஊருக்குப் போறதுன்னே தெரியாம எல்லா பஸ்ஸையும் வேடிக்கை பார்த்துக்கிட்டே நிப்பாய்ங்களே, அந்த மாதிரி ஒரு உடல் மொழி!

Ravikumar Mgr

கிளிஷே, டைரக்டோரியல் டச், ட்ராவல், ஒன் லைன் ஸ்டோரி போன்ற வார்த்தைகளை சம்பந்தம் இல்லாத இடங்களில் உபயோகிப்பது.

Enos Ibrahim

சினிமா விமர்சனம் போய் இப்போ டிரெய்லர் ரிவ்யூ, டீஸர் ரிவ்யூ, போஸ்டர் ரிவ்யூன்னு போய்ட்டே இருக்கு. அடுத்து பட பூஜைக்கு ரிவ்யூ பண்ணுவாங்கனு நினைச்சாத்தான் கடுப்பா இருக்கு.

amu

இவங்க பேச்சைக் கேட்பதற்கு அந்தப் படத்தையே பார்த்துடலாம் என்று நினைக்க வைப்பது.

அ.ரியாஸ்

3.57 நிமிடத் திரைவிமர்சனத்துல 1.30 நிமிட நேரம் விளம்பரமாம் (இதுக்கு டிவி சீரியலே தேவலப்பா).

வெங்கடேஷ்

? நீங்கள் ஒருநாள் விஞ்ஞானியானால் உங்கள் புதிய கண்டுபிடிப்பு என்னவாக இருக்கும்?

ஓசோன் மண்டல ஓட்டையை அடைக்கும் கருவி!(வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு)

Neravy Gajendiran

Pon Radhakrishnan
Pon Radhakrishnan

சொந்தக்காரங்க மண்டையில் ஒரு லைட் நம்ம கண்ணுக்கு மட்டும் தெரியணும். நிஜமாகவே மனசார நல்லது சொன்னா பச்சை லைட் எரியணும். டகால்டி விட்டா சிகப்பு லைட் எரியணும். அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சா மண்டையில் தட்டணும்.

Indu Mathi

ஹெல்மெட் போடாமல் டூவீலரில் போகும்போது டிராஃபிக் போலீசார் செக் செய்ய நிற்பதை 200 மீட்டர் முன்னமே ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும் கருவியைக் கண்டுபிடிப்பேன்.

Ashokan Palanisamy

இட்லியின் விலை ஒரு லட்சமா என்ற ஆராய்ச்சி.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

படத்தின் டிரெய்லரை ஸ்கேன் செய்தால் அது எந்தப் படத்தின் காப்பி என்பதைக் கண்டறியும் கருவியை உருவாக்குவேன்.

பாலசுப்ரமணி

வீட்டம்மணி வெச்சிருக்கிறது சாம்பாரா ரசமான்னு டக்குன்னு கண்டுபிடிக்கிற ஒரு மெஷின கண்டுபிடிப்பேன்.

பொம்மையா முருகன்

தமிழகத்தில் தாமரையை மலர வைக்க புதுசா உரம் ஒண்ணு கண்டுபிடிக்கணும் பாஸ்.

கே.லக்‌ஷ்மணன், திருநெல்வேலி

மூணே நிமிடத்தில் முடி வளர்ப்பது எப்படி?

வீ. வெங்கடேசன், தர்மபுரி

? ரோகித் சர்மா ஒரே டெஸ்ட்டில் இரண்டு சதம் அடித்ததைப் பார்த்ததும் கேப்டன் கோலியின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்?

பிள்ளைப்பூச்சிக்குக் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன நினைச்சா பார்த்தேன்?

த.ராஜவேல், தேனி

வாசகர் மேடை: நாற்காலி கனவுகள்!

அடிச்ச பந்துல எல்லாம் என் முகம் தெரிஞ்சிருக்குமோ...

எம். சேவியர் பால், கோயம்புத்தூர்

தம்பி, நீ என்னதான் double, triple செஞ்சுரி அடிச்சாலும் நான் இருக்குற வரைக்கும் Vice Captain தான்.

altappu

“இப்போதைக்கு, எதுக்கும் பாராட்டி வைப்போம்.. இவன் கேப்டனாகி, நாம பிளேயராக ஆடும்போது பயன்படும்!”

வி.சி. கிருஷ்ணரத்னம்

நாமளே ஓப்பனிங் இறங்கியிருக்கலாமோ?

Bharath Chandran

இப்படியே போச்சுன்னா

RCB-க்கு மட்டும்தான் நாட்டாமை பண்ணணும்போல. ஒரு மனசாட்சியே இல்லாம அடிக்குறானே!

செ. பாலமுருகன்

2 சதம் அடிச்சிட்டு இனி 20 டெஸ்ட்டுல சொதப்புவானே!

Msd இதயவன்

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை
வாசகர் மேடை

? மழைக்கவிதைகள் நிறைய வந்துவிட்டன. ஒருவரியில் வெயில் கலாய்க்கவிதை ஒன்று சொல்லுங்களேன்!

? இப்போதிருக்கும் தமிழக அரசியல்வாதிகளின் வீடுகளில், ஆயிரம் ஆண்டுகள் கழித்து அகழாய்வு செய்தால் என்னவெல்லாம் கிடைக்கும்?

? #wanderlust போன்ற எக்கச்சக்க ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் பிரபலம். இதில் உங்களைக் கடுப்பேற்றும் ஹேஷ்டேக் எது? ஏன்?

? உங்கள் வாழ்க்கையோடு நீங்கள் பொருத்திப்பார்த்துக்கொள்ளும் காமெடி டயலாக் எது? (வடிவேலு ஏற்கெனவே உலக அளவுல டிரெண்ட் ஆயிட்டதால அவர் வசனங்கள் வேண்டாமே!)

? காங்கிரஸ் மீண்டும் புத்தெழுச்சி பெற உங்கள் ஐடியாக்கள் ப்ளீஸ்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை,

ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப: vasagarmedai@vikatan.com