பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வாசகர் மேடை: பேய்த்தனமா யோசிக்கிறாங்க!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

? சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி.சிவா ஸ்டைலில் அந்தப் படத்திற்கு ஒரு டைட்டில் சொல்லுங்களேன்!

வேங்கையன்

சௌமியா, தேவனாங்குறிச்சி

குபேர குசேலா...

கே.லக்‌ஷ்மணன், திருநெல்வேலி

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

வியூகம்

C.P.Senthil Kumar

வராது கறுப்பு

இளையநிலா

கருஞ்சிறுத்தை

Jerry.D.Darvey

சாணக்கியன்

Pachai Perumal.A

வெற்றி

Dhayalan Sandra Shekar

இன்றைய தேதியில் எந்த சூப்பர்ஹீரோ இந்தியாவிற்குத் தேவை, ஏன்?

வகைதொகையில்லாம வங்கிக்கடன் வாங்கிட்டு, வெளிநாட்டுக்குத் தப்பிச்சுப் போய் ஜாலி பண்ணிக்கிட்டு இருக்கிற மல்லையா, நிரவ் மோடி மாதிரியான ஆட்களை அலேக்கா தூக்கிட்டு வர்றதுக்கான திறமையைக் கொண்டிருக்கிற ‘பேட்மேன்’தான் என்னோட சாய்ஸ்..!

கே.லக்‌ஷ்மணன், திருநெல்வேலி-11

ஹெர்குலிஸ். சரிந்து கிடக்கும் பொருளாதாரத்தை நெட்டுக்குத்தாகத் தூக்கி நிறுத்த அவரின் வலிமை தேவைப்படுகிறது.

Pethusamy

வாசகர் மேடை: பேய்த்தனமா யோசிக்கிறாங்க!

அலாவுதின் பூதம்... அது மட்டும் நம்ம மத்திய நிதி அமைச்சருக்குக் கிடைச்சா ரிசர்வ் பாங்க்கைப் பிடிச்சுத் தொங்க வேண்டியதில்லை. இந்தியாவும் எங்கேயோ போயிடும்!

bommaiya

விஜயகாந்த். ‘சந்திராயன் 2’ விக்ரம் லேண்டருக்கே போய் பச்சை ஒயரையும் சிகப்பு ஒயரையும் கனெக்ட் பண்ணி வெற்றியடைய வெச்சிடுவாரு.

manipmp

பேட்மேன் - தற்போது அதிகப்படியான ஜோக்கர்கள் இங்கு உள்ளனர்.

RavisankarBose

சோட்டாபீம் - இந்த ஏழைத்தாயின் மகனிடம் இருந்து இந்தியாவைக் காப்பாத்த!

venkime1

மோடியே சூப்பர் ஹீரோதான். அவரால்தான் நாலுபேர் நாலு விஷயங்களைக் கத்துக்கறாங்க. என்ன ஒரு நடிப்புத்திறமை..!

saravankavi

அண்ணன் சீமானே ஒரு சூப்பர் ஹீரோதான் அவரைவிடவா ஒரு சூப்பர் ஹீரோ வேண்டும்?

bharathi.neeru

? உங்கள் நண்பர் செய்யும் அட்ராசிட்டிகளில் உங்களால் பொறுத்துக்கொள்ளவே முடியாதது எது?

“ ஏய்... பாத்து ரொம்ப நாளாச்சு... ஒரு காபி சாப்பிடலாம் வா”ன்னு பக்கத்திலே ஒரு ஹோட்டலுக்குப் பாசமாய்க் கூட்டிப் போவார்கள். பால் அல்வா, மசால் தோசைன்னு வெட்டிவிட்டு, பில் கொண்டு வரும் நேரம், கை கழுவப் போய் அரைமணி நேரம் கழித்து வந்து “ஏய்... நீ ஏன் காசு கொடுத்தே?” என்பார்கள்.

சாந்தினி நடராஜன், மதுரை

பத்து நாள்கள் ஆனாலும் அவன் நமக்கு போன் செய்ய மாட்டான். ஆனால் நாம மனசு கேட்காமல் போன் செய்யும்போது கேட்பான் பாருங்க, `ஏன்டா எனக்கு போனே பண்ணல’ன்னு. உச்சக்கட்ட அட்ராசிட்டி!

vaira.bala.12

மொக்கைப் பதிவைப் போட்டுவிட்டு ‘நீயெல்லாம் ஃபிரெண்டா, ஒரு லைக் கிடையாதா’ன்னு உசுர வாங்குவான்.

Adhirai Yusuf

அவுட் கோயிங் ஃப்ரீன்னு தெரிஞ்சும் இன்னும் மிஸ்டுகால்தான் கொடுக்குறான்.

mgr007

தண்ணியடிக்க மாட்டான். ஆனாலும் அவனை பாருக்குக் கூட்டிட்டுப் போயிடக்கூடாது. சைடிஷ்ஷை மேய்ஞ்சு பில்லைத் தாளிக்க வெச்சிடுவான்.

bommaiya

‘மச்சான், பக்கத்துலதான்டா போறேன் இப்ப வந்துடுவேன்’னு சொல்லிட்டு பைக் வாங்கிட்டுப் போவான், டேங்க் காலி பண்ணிட்டுதான் பைக்க தருவான்.

altaappu

சினிமாவுக்கு டிக்கெட் எடுத்திட்டு இன்டர்வெலில் ஆகும் செலவை நம்ம தலையில் கட்டுவது.

manipmp

ஹா, ஸ, ஜூ ஆரம்பிக்கிற மாதிரி குழந்தைக்கு ஒரு தமிழ்ப்பேர் சொல்லுன்னு நச்சுவது.

manipmp

வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ் ஒரே நேரத்தில் 10 முதல் 15 வைப்பது...

AmbrosePravin

எப்பவும் எங்க வீட்ல ரொம்ப நல்ல பையன்ங்கற பேர் வாங்குறது!

RavisankarBose

? தமிழ் சினிமாவில் பேய்ப்பட சீசன் திரும்பத் தொடங்கியிருக்கிறது. இதுவரை இல்லாத ஒரு வித்தியாச பேய்ப்பட ஒன்லைன் ப்ளீஸ்!

பேயால கொல்லப்படறவங்க பேயாகி, கொன்ன பேய்க்குச் சொந்தக்காரங்களைக் கொல்றது.

கோதை

சார் போஸ்ட்... ஏங்க என்னவோ போஸ்ட் வந்துருக்கு என்று கணவனை அழைத்தபடியே கவரைப் பிரித்தவளுக்கு, கணவன் விபத்தில் பலியானதற்கான இன்ஷூரன்ஸ் வந்திருந்தது.

வீர துறந்தறா

ஒரு தியேட்டர்க்குள்ள 37 பேர் ஒரு பேய்ப் படம் பாக்குறாங்க. படத்துக்குள்ள வர்ற ஒரு பேய், பாக்குறவங்க கண்ணுக்கு மட்டும் அவங்க பக்கத்துல உள்ளவங்களாட்டம் தெரியுது. எண்டு கார்டு போட்டவுடன் ஒரே நேரத்துல ஸ்கிரீன கிழிச்சுட்டு ஒரு பேய் வரவும், கதவு சாத்தவும் சரியா இருக்கு. ஜூம் பண்ணி வெளியே கேமரா வந்தா அங்க ஒரு தியேட்டர் இடிஞ்சு கிடக்கு.

vinothkannan.ravichandiran

வாசகர் மேடை: பேய்த்தனமா யோசிக்கிறாங்க!

அந்தப் பாழடைந்த அரண்மனையின் கதவுகள் திறக்கப்பட்டபோது உலகின் கடைசிப் பேய் அரண்டு போனது...

bommaiya

ஒருத்தனைப் பழிவாங்க, பேய் ஆள்மாறாட்டம் செய்து பழிவாங்குது.

manipmp

காஞ்சனா 10 படம் வெளிவருவதைத் தடுக்கப் பேய்கள் எடுக்கும் முயற்சிதான் கரு.

vikneshmadurai

மொக்கையா பேய்ப் படம் எடுக்கும் இயக்குநரை பயங்கரமாய்க் கொல்லும் பேய்.

ansares786

பழிவாங்க நினைக்காத பேய்.

mE_MOmuS

தன்னுடைய பேய்க்கதையைச் சொல்லி தயாரிப்பாளரைத் திருப்திபடுத்தி விடைபெற்றவுடன், அவசரம் அவசரமாக உள்நுழைந்து, ‘ஸாரி சார், டிராபிக்ல லேட்டாகிடுச்சு. கதையைச் சொல்லட்டுமா?” என்று அதே இயக்குநர் மீண்டும் கேட்டதும், உறைந்துபோனார் தயாரிப்பாளர்.

raja.navaneetham

தினமும் உப்புமா சாப்பிட்டே விரக்தியில் செத்துப்போன ஒருவன் பேயாக மாறி ரவை நிறுவனங்களுக்கு எதிராகப் போராடி அத்தனை ரவை நிறுவனங்களையும்மூடவைக்கிறான்.

gazaliththuvam

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வரும் பேய் அத்துறையில் இருக்கும் தீயவர்களை அழித்து சினிமாவில் டாப் ஹீரோயினாக வருவதுதான் கதை.

வி.தேவசகாயம்

? உள்ளாட்சித் தேர்தல் தேதி சொல்லாமல் இழுத்தடிக்கிறது அ.தி.மு.க அரசு. அவர்களை சமாதானப்படுத்தி, தேர்தலை நடத்த வைக்க ஒரு ஜாலி காரணம் சொல்லுங்களேன்!

‘உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தினால், பொதுத்தேர்தலைப் பொறுமையாக நடத்துவோம்’னு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடலாம்.

சுந்தரபாண்டியன், தூத்துக்குடி.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

பேசாம உள்ளாட்சித் தேர்தல் என்ற பெயரை ‘புள்ளிங்கோவ்’ என்று மாற்றினால் என்ன..?

balu.marappan.9

2000 ரூபாய் செல்லாதுன்னு அறிவிக்கப் போறாங்கன்னு சொல்லிட்டா, அதைச் செலவு செய்ய உடனே தேர்தல் நடத்துவார்கள்.

ravikumar.krishnasamy

‘கம்பராமாயணத்தைச் சேக்கிழார்தான் இயற்றினார்’ என்று இலக்கிய வரலாற்றையே மாற்றுகிறோம். அப்போதாவது...

Adhirai Yusuf

‘தேர்தல் நடத்துங்க. இல்லைன்னா உங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படும்’னு சொன்னால் போதும்.

altaappu

‘தேர்தல் மட்டும்தான் நடக்கும். வாக்கு எண்ணிக்கை நடக்காது’ன்னு சொல்லி சம்மதிக்க வைக்கலாம்.

Pethusamy

ஒரே ஒரு சான்ஸ்தான்... ‘தி.மு.க போட்டியிடாது, இது உறுதி’ன்னு ஸ்டாலினே சமாதானப் படுத்தணும்!

KrishnaratnamVC

பூத்தில் நாமதான் இருப்போம்னு ஊக்கமாய்ச் சொல்லி உள்ளாட்சித் தேர்தலை நடத்தச் சொல்லலாம்.

manipmp

கூவத்தூர் மாதிரி, இன்னொரு இன்பச்சுற்றுலாவுக்கு ஏற்பாடு பண்ணலாம்!

Maduraikkaar

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: பேய்த்தனமா யோசிக்கிறாங்க!

? பயோப்பிக்குகளின் காலமிது. தமிழில் யாருடைய பயோபிக்கை எடுக்கலாம்? அதில் யாரை நடிக்கவைக்கலாம்?

? நம் அரசியல்வாதிகளில் இனி யாருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம், ஏன்?

? இது குழந்தைகள் தின மாதம். சிறு வயதில் உங்களுக்கு அதிகம் பிடித்து, தற்போது மிஸ் பண்ணும் விஷயம் என்ன?

? தீவிர அரசியலில் இருக்கும் சீமான், மீண்டும் சினிமா இயக்க வந்தால்... அவருக்கு ஒருவரியில் ஒரு கதை சொல்லுங்களேன்!

? நீங்கள் தேர்தல் ஆணையர் ஆனால் அதிரடியாக என்ன உத்தரவு போடுவீர்கள்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி :வாசகர் மேடை,ஆனந்த விகடன்,757, அண்ணா சாலை, சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com