? மழைக்கவிதைகள் நிறைய வந்துவிட்டன. ஒருவரியில் வெயில் கலாய்க்கவிதை ஒன்று சொல்லுங்களேன்!
ஹாட்டுக்கு இல்ல ராங்கு ரைட்டு.
சந்தோஷ் சென்னை
மழைக்கான யாகங்கள் கண்டு,
மனதில் பொறாமையால்,
மனிதர்களைத் தண்டிக்கிறதோ, மண்டைகாய அடிக்கும் வெயில்?!
Girija Manaalan
நான் நாலு நாள் வராட்டா
போட்டுக்கத் துணி இருக்காது...
வெயிலுடா!
அ.ரியாஸ்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தேடி வெயில் தினம் தின்று
பல வியர்வைத் துளி நாற்றக்கதைகள் பேசி
வாடி சோர்ந்து மிக உழன்று
ஏசியில் பதுங்கிடுவேன் என்று நினைத்தாயோ?
Devarajan kanchipuram
வாரம் ஏழு நாளும் எங்களை
வறுத்தெடுக்கிறாயே!
ஞாயிறே,
உனக்கு ஞாயிறே கிடையாதா?
D.SELLATHURAI. சென்னை
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS? இப்போதிருக்கும் தமிழக அரசியல்வாதிகளின் வீடுகளில், ஆயிரம் ஆண்டுகள் கழித்து அகழாய்வு செய்தால் என்னவெல்லாம் கிடைக்கும்?
ஆன்ட்டி இண்டியன்ஸ் பெயர் பட்டியல்.
பாலசுப்ரமணி
எஸ்.வி.சேகர் வீட்டில் 2000 ரூபாய் சிப்.
ஆதவன்
குனிந்தமேனிக்கு இருக்கும் எலும்புக்கூடுகள் கிடைக்கும்.
ராஜி
கமல் வீட்டில் விதவிதமான டிக்ஸனரிகள் கிடைக்கலாம்..!
மயக்குநன்
ஆயிரமாண்டுகள் கழித்து டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வீட்டில் அகழாய்வு செய்யும் போது கடைசிவரை மலராத தாமரை மொட்டுகள் பல கிடைக்கும்.
முகில்செல்வகுமார்

ஓ.பி.எஸ் - தியானம் செய்யும் ஜமுக்காளம்.
டி.டி.வி.தினகரன் - 20 ரூபாய் நோட்டுகள்.
சசிகலா - ஷாப்பிங் பேக்.
ஜி.கே.வாசன் - துருப்பிடித்த சைக்கிள்.
ராமதாஸ் - பாபா படப் பெட்டி.
ஜெ. கண்ணன் சென்னை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஈபிஎஸ், ஓபிஎஸ் வீடுகளில் ஆவிகளுடன் பேச உதவும் ‘ஓயிஜா போர்டு’ கிடைக்கலாம்...
(அம்மாவின் ஆன்மா வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்யறதால, எப்படியும் பேசியிருப்பாங்களே..!)
laks veni
எடப்பாடியார் வீட்டில்:
‘சேக்கிழார் உரையுடன் கம்பராமாயணம்’ என்ற அரிதான புத்தகம்.
D.SELLATHURAI. சென்னை
? #wanderlust போன்ற எக்கச்சக்க ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் பிரபலம். இதில் உங்களைக் கடுப்பேற்றும் ஹேஷ்டேக் எது? ஏன்?
#flashnews-னு சொல்லி யாரோ போட்ட Fake News-ஐ Check பண்ணாம அப்படியே Forward பண்ற இம்சை.
Jerry.D.Darvey
கவிதை எழுதும் பலர் கவிதைக்கு இடையில் வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கொடுக்கும் ஹேஷ்டேக்குகள்.
சின்னகொம்பன்
#FridayFeelings
டேய் எங்களுக்கெல்லாம் சனிக்கிழமை ஆபீஸ் இருக்குடா, அதுக்குள்ள ஃபீலிங்ஸாம்! கடுப்பேத்தாதீங்கடா!
பா. பிரபாகரன்
#MovieReview
ஒரு படத்தைப் பார்க்கலாமா, வேணாமான்னு ஆர்வமா போய்ப் பார்த்தா, ஆளாளுக்கு ஒரு விமர்சனம் சொல்லி நம்மைக் குழப்பி, படம் பார்க்கிற ஆசையையே போக வெச்சிடறாங்க பிரதர்..!
கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி
#chowkidar.
பேருக்கு முன்னாடி சேர்த்துக்கிட்டு மூன்று மாசத்துக்கு மட்டும் செக்யூரிட்டி வேஷம் போட்டு நடித்தவர்கள் ஆனதால்.
சரவணன்
#1yearofmokkapadam மொக்க படம், வந்து 1 வருஷம் ஆனா என்ன 9 வருஷம் ஆனா என்ன..?
PrabuG
#Giveaway ன்னு ஒரு ஹேஷ் டேக். அது எதுக்குன்னே புரியல. ஒரு வேளை மானம், மரியாதை எல்லாத்தையும் கொடுக்குறதுக்கோ?
எம். விக்னேஷ் மதுரை
?காங்கிரஸ் மீண்டும் புத்தெழுச்சி பெற உங்கள் ஐடியாக்கள் ப்ளீஸ்?
‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மாதிரி, ராகுல் தனது மனக்குமுறல்களைக் கொட்டும் ‘மனதின் குமுறல்’ என்ற நிகழ்ச்சியை, கண்ணீரும், கம்பலையுமாக நடத்தி, மக்களின் அனுதாபத்தைச் சம்பாதித்து, கட்சியைப் புத்தெழுச்சி பெற வைக்கலாம்..!
Laks veni

பூத்ல நாமதான் இருப்போம்னு உற்சாகப்படுத்தலாம்...
மூவன்வேந்தன்
தற்போதைய திரையுலகப் பிரபலங்களைக் கட்சியில் சேர்த்து அவர்களது ஆர்மியைக் கொண்டு கட்சியைப் புதுப்பிக்கலாம்.
மா.ச.பாரத்குமார்
அமித்ஷாபோலத் தோற்றமுடைய நடிகர் சந்தானபாரதியை காங்கிரஸில் சேர்க்கலாம்.
Jeevagan Mahendhiran
ஒன்றுமே செய்யவேண்டாம்.கட்சியைக் கலைக்காமல் காப்பாற்றி வைத்திருந்தால் போதும்... பா.ஜ.க-வே எப்படியும் ஆட்சி வாய்ப்பைத் தரும்.
புகழ்
இரண்டாம் கட்டத் தலைவர்கள், ‘காங்கிரஸ் இனி அவ்ளோதான்’ என்ற ரீதியில், பேட்டி என்ற பெயரில் உளறுவதை நிறுத்தி ஆக்கபூர்வமாக, நம்பிக்கையோடு செயல்பட வேண்டும்.
கே.எம். ஃபாரூக். சென்னை
? உங்கள் வாழ்க்கையோடு நீங்கள் பொருத்திப்பார்த்துக்கொள்ளும் காமெடி டயலாக் எது? (வடிவேலு ஏற்கெனவே உலக அளவுல டிரெண்ட் ஆயிட்டதால அவர் வசனங்கள் வேண்டாமே!)
No comments simply waste
M Rajesh
என் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா.
பாலசுப்ரமணி
உசுப்பேத்தறவன்கிட்ட உம்முனும், கடுப்பேத்தறவன்கிட்ட கம்முனும் இருந்தா, வாழ்க்கை ஜம்முனு போகும்..! (காமெடியா நடிகர் விஜய் சொன்ன சீரியஸ் டயலாக் இது)
கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி
நான் : நேத்துதானே ஒரு பிரச்னைய முடிச்சி வச்சேன், இது என்னது புதுப் பிரச்னை?
மை மைண்ட் வாய்ஸ் : அந்த ஒண்ணுதாண்னே இது...
பொம்மையா முருகன்

புளியோதரை நடுவுல முட்டையை வெச்சிட்டா பிரியாணி ஆகிடுமா?
பூநசி.மேதாவி சென்னை
இன்னும் மூணு வருஷத்துக்கு வாழ்க்கையில நீ நாய் படாதபாடு படுவ!
அப்புறம்?
அப்புறம் அதுவே பழகிடும்.
வெ.பெத்துசாமி
டேய் மாதவா, எத்தன சிக்கல் வந்தாலும் பிரிச்சு மேஞ்சிடறயேடா, எப்பிட்றா உன்னால இதெல்லாம் முடியுது, என்னமோ போடா!
அ.ரியாஸ்
இதெல்லாம் நிஜம்மா... இதை நான் அனுபவிக்கிறதா வேண்டாமான்னே தெரியலையே!
amudu
ஆம்பூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்குத்தான் கிடைக்கும்னா அதை யாராலயும் மாத்த முடியாது!
Mani Pmp
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? திருவள்ளுவர் இப்போது வந்து, இந்தியாவின் அரசியல், சமூக நிலைமையைப் பார்த்தால் என்ன புதுக்குறள் எழுதுவார்? ஏன்?
? பா.ஜ.க. வெற்றிகளுக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும் அமித்ஷாவுக்கு விருது தருவது என்றால் என்ன விருது தரலாம்?
? எந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் ‘இப்படி இருந்தால் நல்லா இருக்கும்’ என்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறது?
? தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளைக் கடந்திருக்கும் கமல், மத்திய அரசிடம் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற்றிருக்கும் ரஜினி - இருவரையும் பற்றிக் கவித்துவமாக ஒரே வரியில் சொல்லுங்கள்.
? சீரியல்களில் ‘இவருக்குப் பதில் இவர்’ என்று வருவதைப்போல் உங்கள் வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு அமைந்தால் எப்படி இருக்கும்?
உங்கள் பதில்களை
அனுப்ப வேண்டிய முகவரி :வாசகர் மேடை,
ஆனந்த விகடன்,757, அண்ணா சாலை, சென்னை 600 002.
ஈமெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com