Published:Updated:

வாசகர் மேடை: க்ளைமாக்ஸ் மாறிப்போச்சு!

Sellur K. Raju
பிரீமியம் ஸ்டோரி
Sellur K. Raju

வாசகர் மேடை

வாசகர் மேடை: க்ளைமாக்ஸ் மாறிப்போச்சு!

வாசகர் மேடை

Published:Updated:
Sellur K. Raju
பிரீமியம் ஸ்டோரி
Sellur K. Raju

? திருவள்ளுவர் இப்போது வந்து, இந்தியாவின் அரசியல், சமூக நிலைமையைப் பார்த்தால் என்ன புதுக்குறள் எழுதுவார்? ஏன்?

பிரபலங்கள் யாராயினும் நாகாக்க காவாக்கால்

கேவலப்படுவர் மீம்ஸ் பட்டு.

க.வில்லவன் கோதை, சென்னை

ஊழல் செய்தாரை வெறுத்து அவர்நாண

வாக்களிக்காது தோற்கச் செய்க.

சாய் அமர்த்தியா, மயிலாடுதுறை

மோப்பக் குழையும் அனிச்சம் தேர்தலில்

நோட்டாவால் குழையும் லோட்டஸ்.

கே.லக்‌ஷ்மணன், திருநெல்வேலி-11,

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மந்திரி நாடி அவர்பி.ஏ நாடி அவர்கேட்கும் தொகைதேடி வாய்ப்பச் செயல்.

Pethusamy

வாசகர் மேடை
வாசகர் மேடை

செயற்கரிய செய்வர் பெரியார் சிறியர்

வாட்ஸப்பில் வதந்தி பரப்புவர்.

RavikumarMGR

கூட்டணி மறப்பது நன்றன்று நன்றல்லது

ஜெயித்த பிறகு மறப்பது.

manipmp

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகன் கேம்பஸில் தேர்வானதுகேட்ட தாய்.

manipmp

தோன்றின் வாரிசாகத் தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

`உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

பவர்பேங்க் தருவதாம் நட்பு.

amuduarattai

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆதிமனிதனுக்கு அனைத்தையும் குறளென

அளித்தும்சாதிமதமாய்ச் சாற்றுவது சலிப்பு.

A.ஆசிக் ஜாரிஃப், ஆனைமலை.

பூசுக காவியைப் பூசிமொழுகுக பூசாவிடின்அட்மினாய் ஏசுக

தேசத்துரோகியாய்.

சந்தோஷ், சென்னை

? தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளைக் கடந்திருக்கும் கமல், மத்திய அரசிடம் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற்றிருக்கும் ரஜினி - இருவரையும் பற்றிக் கவித்துவமாக ஒரே வரியில் சொல்லுங்கள்.

ரஜினி ஹாசன் தமிழ் சினிமாவின் பெருமை மட்டுமல்ல. நல்ல நட்பின் இலக்கணம்.

thangaraja85

தமிழ்த் திரையுலகின் ட்வின் டவர்ஸ்... இனி, தமிழக அரசியலின் ட்வின் ‘பவர்ஸ்.’

கே.லக்‌ஷ்மணன், திருநெல்வேலி

கமல் _ ஆறிலிருந்து அறுபது வரை!

ரஜினி _ தலைவன் இருக்கின்றான்!

Raja90881339

? சீரியல்களில் ‘இவருக்குப் பதில் இவர்’ என்று வருவதைப்போல் உங்கள் வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு அமைந்தால் எப்படி இருக்கும்?

பொண்டாட்டிக்கு பதில் வேறு பொண்டாட்டி விஷயமா என் பொண்டாட்டிகிட்ட பேசினேன். ‘வர்றவ, என்னைவிட மோசமா வந்தா என்னாகும்? ஏதோ, பாத்து செய்யுங்க’னுட்டாங்க!

vc.krishnarathnam

Sellur K. Raju
Sellur K. Raju

முதன்முறையாக நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது, பணத்தை எதிர்பார்த்து, என்னைத் தேர்வு செய்யாமல் விட்ட அந்த அதிகாரிக்குப் பதில் வேறு யாராவது வந்திருந்தால், வேலையில்லாமல் காத்திருந்த நான்கு வருடங்கள் மிச்சமாகியிருக்கும்..!

laks.veni

நாசமாப்போன லவ்வைப் பண்ணித் தொலைத்து, நைட் முழுவதும் என்னைத் தூங்க விடாமல் டார்ச்சர் கொடுத்து, ஐடியா கேட்கும் என் நண்பனாக மாறி, அவனுக்கு நான் டார்ச்சர் கொடுக்க வேண்டும்.

Neravy Gajendiran

துணிக்கடையில் S size சட்டை அதிகம் பார்க்கும்போது XL size S size உடல் மாற்றினால் நன்றாய் இருக்கும்.

manipmp

எடப்பாடிக்கு பதிலாக செல்லூர் முதல்வராக இருந்தால் எங்களைப் போன்ற மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கன்டன்ட் கிடைக்கும்.

Vicky_stirring

வேற ஒரு நல்ல கமென்ட் எடுத்து இவருக்குப் பதில் இவர்னு என் பெயரை இந்த வாரமாவது பத்திரிகையில போடுங்க!

kaviprasath1029

பிள்ளைங்களுக்கு ஹோம் ஒர்க் சொல்லித் தர்றதுக்குள்ள என் சம்சாரத்துக்கு நாக்கு நுரை தள்ளிடுது... அந்த ரெண்டு மணி நேரத்துக்கு மட்டும் கிளாஸ் மிஸ்ஸை மாத்தி விட்டா, நிம்மதியா போகும்..!

KLAKSHM

? பா.ஜ.க வெற்றிகளுக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும் அமித்ஷாவுக்கு விருது தருவது என்றால் என்ன விருது தரலாம்?

‘காவி’யத் தலைவன்...

நா.இரவீந்திரன், திருப்பூர்.

தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, பரதக் கலைஞர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு முகபாவங்களைக் காட்டி, வாக்காளர்களைக் கவரும் அந்தத் திறமைக்காக ‘பரத’ ரத்னா விருது கொடுக்கலாம்...!

laks.veni

எதிர்க்கட்சி அந்தஸ்துக்குக்கூட காங்கிரஸை போதுமான தகுதி பெறச்செய்யாமல் தடுத்தமைக்காக... ‘காங்கை வென்றான்’ விருது..!

parama.paramaguru.3

‘நீ இந்தியாவுக்கே ரஜினி. ஆனா தமிழ்நாட்டுக்கு நீ எப்போதும் கஜினி’ விருது.

bommaiya

வாழ்நாள் புரட்டாளர் விருது.

umakrishh

பி.ஜே.பி-யின் புள்ளிங்கோ விருது.

balasubramni

‘கப்பு முக்கியம் பிகிலே’ விருது!

pbukrish

? எந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் ‘இப்படி இருந்தால் நல்லா இருக்கும்’ என்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறது?

‘பூவே பூச்சூடவா’ படத்தின் இறுதியில் நதியா காலிங் பெல்லை அடித்திருக்கலாம்.

எஸ்.பத்மினி அருணாசலம், சென்னை

‘ரெமோ’ படத்தில் கீர்த்தி சுரேஷை சிவகார்த்திகேயன் கொத்திட்டுப் போயிடுவாரு... கீர்த்தி சுரேஷுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை, நர்ஸ் வேடத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் மேல் காதல் வயப்பட்டு, அவர் வரவுக்காகக் காத்திருப்பதுபோல் முடித்திருந்தால் செம ஜாலியான முடிவாக இருந்திருக்கும்..!

கே.லக்‌ஷ்மணன், திருநெல்வேலி

‘இதயம்’ படத்தில் முரளியிடம் நாயகி ஹீரா தன் காதலை வெளிப்படுத்துவதாகக் கூறிவிட்டு, தனக்கு ஆறு மாதம் சிகிச்சை எப்போது முடியுமென்ற ஆவலில் முரளி ரயிலில் சந்தோஷமாகக் கிளம்புவதுபோல முடித்திருக்கலாம்!

ramkumar.kumar.92317

பாபா படம். ரஜினி திரும்பி ஊருக்குள்ள வராம சாமியார்கள் கூடவே இமயமலைக்குப் போயிருக்கலாம்.

RedManoRed

‘தளபதி’ க்ளைமாக்ஸில் வித்யா அர்விந்த் சுவாமியோடு போகாமல் ரஜினியோடு இருப்பதாகச் சொல்ல, ஷோபனாவும் அப்படிச் சொல்லி ரயிலை விட்டு இறங்கியிருந்தால் அலப்பறையாக இருந்திருக்கும்.

riyaz.ahmed.581

வாசகர் மேடை: க்ளைமாக்ஸ் மாறிப்போச்சு!

‘அஞ்சலி’ படத்தின் அந்தக் குழந்தையை உயிருடன் இருப்பதாகக் காண்பித்தால் நன்றாக இருக்கும்.

nivya.bala

‘யாருக்கு யாரோ’ பட க்ளைமேக்ஸ்ல சாம் ஆண்டர்சன் லவ் பண்ணின பொண்ணு விட்டுட்டுப் போயிடும். ஆனா சாம் ஆண்டர்சன லவ் பண்ணின பொண்ணு அவர ‘முன்னேற்ற’ப் பாதைல அழைச்சிட்டுப் போறேன்னு கார சுத்தி வர மாதிரி படம் முடிஞ்சிருக்கும். அந்த இடத்துல ராசாத்தி ஏ ஆச ராசாத்தி பாட்டுக்குத் தோளை ஆட்டி அந்த ‘ஹிஸ்ட்டாரிக்கல்’ டான்ஸ போட்டிருந்தா செமயா இருந்திருக்கும்.

manisuji12

காஞ்சனா 1 பட க்ளைமாக்ஸில் ராகவா லாரன்ஸ் பேய் இனத்தை மொத்தமாக அழித்து விட்டதாகக் காட்டியிருந்தால் பார்ட் 2, 3 எல்லாம் வந்திருக்காது!

riyaz.ahmed.581

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிம்பு கடைசியாகப் படம் இயக்கிக் கொண்டிருப்பார். க்ளைமாக்ஸில் ஹீரோ ஷூட்டிங் வராதது மாதிரி காட்டியிருந்தா இப்ப டிரெண்ட் ஆகியிருக்கும்.

HariprabuGuru

புலி படத்துல விஜய் ஜெயிச்சதும், TRன் ‘அன்பு புலி, அசூரபுலி, வம்புப்புலி...’ வசனத்தை டி.ஆர் வந்து பேசுறபோல போட்டிருக்கலாம்.

ஹர்ஷாபா

அற்புதம்... அதிசயம்...

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை
வாசகர் மேடை

? உங்களுடைய இளவயது வெர்ஷனை இப்போ சந்திக்க முடிந்தால், அவருக்கு என்ன அட்வைஸ் சொல்வீர்கள்?

? உங்கள் வட்டார வழக்கில் இருக்கும் ரகளையான ஒரு சொல்லை அர்த்தத்தோடு சொல்லுங்களேன்?

? 80ஸ் ஹீரோயின், இப்போ இருக்கும் ஹீரோயின் ரெண்டு வித்தியாசம் சொல்லுங்க!

? சசிகலா சிறையை விட்டு வெளியில் வந்தால் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?

? உங்கள் நட்புவட்டத்தில் இருக்கும் 'அப்டேட்டே ஆகாத' நண்பர் செய்யும் அட்டூழியங்களை சொல்லுங்களேன்!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை,

ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப: vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism