Published:Updated:

வாசகர் மேடை - முட்டுச் சந்தில் மூவர் கூடம்!

Sellur K. Raju
பிரீமியம் ஸ்டோரி
News
Sellur K. Raju

? இப்போதைய தமிழக அமைச்சர்களில் உங்கள் மனம் கவர்ந்தவர் யார்? ஏன்?

வடிவேலு, சந்தானம், சூரி எல்லோருமே கதாநாயகர்கள் ஆகிவிட்டார்கள். மூன்று ஹீரோக்களும் ஒரு படத்தில் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

23 புரோட்டா தின்ன ஆசையா

ரமேஷ்பாபு, தஞ்சாவூர்

முட்டுச் சந்தில் மூவர் கூடம்.

Shanmugasundaram-Tss

மூவொண்டர்கள்.

Laks Veni

வடிவேலு, சந்தானம், சூரி
வடிவேலு, சந்தானம், சூரி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜோக்காளிகள்

பெ.பச்சையப்பன், கம்பம்

அலிபாபாவும் மூணு காமெடியன்களும்

பூநசி.மேதாவி, சென்னை

தில்லுக்கு பாடிசோடாவும் பரோட்டாவும்

கு.ராஜசுவாதிப்ரியா, சென்னை

ஒரு நேசமணியும் இரு அப்ரன்டீசுகளும்

ஆதவன்

லஜக் மஜக் லொஜக்

mohanramko

நாங்களும் ஹீரோதான்டா

வெங்கடேஷ்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

? 90ஸ் கிட்ஸ் போல, 80ஸ் கிட்ஸ் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன ?

இன்னமும் இங்க் பேனாவுடன் திரியறது.

அஜித், சென்னை

பத்துப் படம் ரிலீஸ் ஆகுதுன்னா அதில் எட்டுப் படங்களாவது நூறு நாள்களைக் கடந்து ஓடும். பல படங்கள் 25-வது வாரம், 30-வது வாரம்னு நியூஸ் பேப்பர்ல பார்ப்பதெல்லாம் மனம் படர்ந்த நினைவுகள்.

mr. அல்லு

தாடி வைத்திருந்தாலே அது காதல் தோல்வியென நம்பியது.

கமலக்கண்ணன் இரா

டைப் ரைட்டிங், சார்ட் ஹேண்ட் ரைட்டிங் தெரிந்தால், அரசு வேலை கிடைத்துவிடும் என்று நம்பியது.

amudu

10-வது, 12-வது பொதுத் தேர்வுகளின் முடிவை ‘மாலை மலர்’ நாளிதழில் பார்த்துத் தெரிந்து கொண்ட அந்த நினைவுகளெல்லாம் பயமறிந்த காலம்.

Mr அல்லு

லேண்ட்லைன் போனில் கேர்ள்ஃப்ரெண்டுடன் பேசவேண்டி அழைத்து, அவள் அப்பன் போனை எடுத்து ‘யார்ரா நாயே நீ’ எனக் கேட்டதும் அலறி அடித்து போனை வைத்த டெரர் நிமிடங்கள்.

பர்வீன் யூனுஸ்

K. T. Rajenthra Bhalaji
K. T. Rajenthra Bhalaji

பள்ளி நண்பர்கள் கொடுக்கும் பொங்கல் வாழ்த்து அட்டை!

தஞ்சை ப்ரணா

மதியக்காட்சிக்கு தெருவோடு சினிமா தியேட்டருக்குக் கிளம்பும் பெண்கள்.

Pachai Perumal.A.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மைக் மோகனும், சில்க் ஸ்மிதாவும்.

மரு.கோபி ஏழுமலை

பெல்பாட்டம்ஸ், ஸ்டெப் கட்டிங்.

கே.எம். ஃபாரூக், சென்னை

வாசகர் மேடை
வாசகர் மேடை

ரேடியோவில் சிறுவர் சோலை. வானொலி அண்ணா, ‘குழந்தைகளே எப்போதும் சிரிச்சுகிட்டு இருக்கணும் சந்தோஷமா இருக்கணும்’ என்று சொல்வது இப்பவும் மறக்க முடியாத ஒன்று

நத்தம் எஸ். சுரேஷ்பாபு

80ஸ் கிட்ஸ்ன்னா காதலைச் சொல்ல காலம்காலமாகக் காத்திருப்பது - இதயம் முரளி போல.

H Umar Farook

இளையராஜா சாங்க ஹம்மிங் செய்து கொண்டிருப்பது...

அவ்வை. கே.சஞ்சீவிபாரதி

கோபி

? காதலுக்கு இதயம், தாஜ்மகால் என்று எத்தனையோ சின்னங்கள் இருக்கின்றன. காதல் தோல்விக்குச் சின்னம் உருவாக்குவது என்றால் எதைச் சின்னமாக்கலாம்?

CTRL + ALT + DEL கீகள்

எம். விக்னேஷ்

மூன்றாம் பிறை கிளைமாக்ஸ்ல கமல் தலையில் வைத்திருந்த `சட்டி’

karthika

டி. ராஜேந்தர் முகம்தான்! ஒரு மாச தாடியோட, கண்ணுல ஒரு சோகத்தோட காதல் தோல்விக்கு பத்துப் பொருத்தமும் மெத்துனு பொருந்துற மாதிரி இருக்கும்!

ட்விட்டர் MGR

இதயம் சின்னத்தைத் தலைகீழாகப் போட்டுவிடலாம். காதல் கவுந்துகிச்சுன்றதை சிம்பாலிக்கா காட்டலாம்!

செ. செந்தில்குமார்

பழைய 1000 ரூபாய் நோட்டை காதல் தோல்விச் சின்னமா அறிவிக்கலாம் !

இளையநிலா

ஒத்த செருப்பு

பாலசுப்ரமணி

? ‘உலகத்தின் கடைசி மனிதனின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது’ - காலங்காலமாக ஒற்றைவரி சிறுகதைக்குச் சொல்லப்படும் உதாரணம். எங்கே நீங்கள் ஒரு புதிய ஒற்றைவரி சிறுகதை சொல்லுங்களேன்!

எட்டாவது மாடி பால்கனி காற்று சுகத்தில், காதில் ஒரு கிசுகிசுப்பு... “இப்டிதானே என்னெ புடிச்சுத் தள்ளினே, ம்..?”

உஷாதேவி சென்னை

Jayakumar
Jayakumar

உலகின் கடைசி மனிதனின் வாட்ஸ் அப் மெஸேஜ் படிக்கப்பட்டு இரண்டு புளூ டிக்குகள் வந்தன...

SIVASUBRAMANIAN

சூரியன் வெகுவேகமாக பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

கே.எம். ஃபாரூக், சென்னை

ஆதாம் கடித்த கடைசி ஆப்பிளில் விதை இல்லை!

தேவராஜன் பெரியகாஞ்சிபுரம்

“நீங்க ஆர்டர் செஞ்ச கிட்னி கொண்டுவந்திருக்கேன்... ஆர்கன் டெலிவரி சார்” என்றது குரல்...

பொம்மையா முருகன்

நாளை மறுநாள் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா எனும் குஷியில் இருந்தவனிடம், டேய் உன் நீட் தேர்வு ஹால் டிக்கெட் செக் பண்றாங்கடா என்றது நண்பனின் வாட்ஸ் அப் மெசேஜ்!

ட்விட்டர் MGR

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்... செய்தி வாசித்தார்கள் கி.பி. 3030-ல்.

Pachai Perumal.A.

தமிழ் ஹோம்வொர்க் பண்ணாதவங்க ஸ்டாண்ட் அப்!

அ.ரியாஸ்

அவன் என் நெற்றியைக் குறிபார்த்து ட்ரிக்கரை அழுத்திய நேரத்தில் என் காலில் கொசு கடித்தது..!

மயக்குநன்

உலகம் முடிந்தது என்று சித்திர குப்தன் தன் கணக்குப் புத்தகத்தை மூடி வைத்தபோது புதிதாக ஒரு புத்தகம் மேசை மேல் வைக்கப்பட்டது!

balebalu

? இப்போதைய தமிழக அமைச்சர்களில் உங்கள் மனம் கவர்ந்தவர் யார்? ஏன்?

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தினமொரு திடுக்கிடும் அறிக்கை விட்டு பொதுமக்களை நகைச்சுவைக் கடலில் மிதக்க வைப்பார். ஹாஸ்ய உணர்வு கொண்ட ஒரே அ.தி.மு.க அமைச்சர்.

வெ.பெத்துசாமி

அமைச்சரா இருந்தும் இஸ்ரோ-வின் விஞ்ஞானிகளுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் செல்லூர் ராஜுதான்.

நாஞ்சில் நபீல்

ஜெயக்குமார். ஏன்னா, அவர் அமைச்சர் மட்டுமல்ல, பாடகர், பாக்ஸர் என்ற பல முகம் கொண்டவர்.

mohanram.ko

அறிவிக்கப்படா மின்வெட்டை அமல்படுத்தி, தமிழகம் இன்னமும் மின் மிகை மாநிலம்தான் என்று சமாளிக்கும் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி.

அதிரை புகாரி

முதலமைச்சர் பழனிசாமி... தவழ்ந்து தவழ்ந்து போகும் குழந்தைத்தனம் இருப்பதால்.

பாலசுப்ரமணி

ராஜூ பாய். உலக வரலாற்றில் இவர் நகைச்சுவைப் பேச்சுக்குத் தனி இடம் கிடைக்க வேண்டும். ஜெய் ராஜூ பாய்!

Sowmya Red

Sellur K. Raju
Sellur K. Raju

ஓபிஎஸ்! இத்தனை நாளா அரசியல்ல தியாகம்தான் முக்கியம்னு நினைச்ச எனக்கு... ‘தியானம்’தான் அதைவிட முக்கியம்னு துணை முதல்வர் பதவியைப் பெற்று நிரூபித்துக் காட்டியதற்காக..!

மயக்குநன்

போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஏசி இல்லாத பேருந்துப் பயணிகளை மகிழ்விக்க, பேருந்தில் காற்று வரப் பல ஓட்டைகள், மழைக்காலத்தில் மினி அருவி போன்றவற்றை அமைத்தமைக்கு.

எம்.சேவியர் பால், கோயம்புத்தூர்.

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை
வாசகர் மேடை

? இளம் வயதில் ஒரே ஒரு படத்தில் நடித்த ஸ்டாலின் இப்போது ஒரு படத்தில் நடித்தால், அந்தப் படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும்?

? பெண்களின் மனதைக் கடலுடன் ஒப்பிடுவது வழக்கம். ஆண்களின் மனதை எதனுடன் ஒப்பிடலாம், ஏன்?

? யூடியூப் சினிமா விமர்சனங்களில் உங்களை எரிச்சலூட்டும் விஷயம் எது?

? நீங்கள் ஒருநாள் விஞ்ஞானியானால் உங்கள் புதிய கண்டுபிடிப்பு என்னவாக இருக்கும்?

? ரோகித் சர்மா ஒரே டெஸ்ட்டில் இரண்டு சதம் அடித்ததைப் பார்த்ததும் கேப்டன் கோலியின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி :வாசகர் மேடை,ஆனந்த விகடன்,757, அண்ணா சாலை, சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப: vasagarmedai@vikatan.com