உங்களிடம் டைம் மெஷின் கிடைத்தால் முதல் வேலையாக என்ன செய்வீர்கள்?

அப்போலோவில் அம்மா இட்லி சாப்பிட்டாரா எனக் கண்டுபிடிப்பேன்.

ம.இராஜ்குமார்

ஏலம் விடுவேன்.

வெங்கட்

பெரியாரையும் அண்ணாவையும் கலைஞரையும் ஒன்றாகச் சந்திக்க வேண்டும்.

கருப்பு சட்டை

இந்த 2000 ரூபாய் நோட்டோட ஆயுள்காலம் இன்னும் எவ்வளவு நாளைக்குன்னு செக் பண்ணிப் பார்ப்பேன்.

வெங்கடேஷ்

சிலுக்கை தற்கொலை பண்ண விடமாட்டேன்.

Ra Balamurugan

ஒவ்வொரு வருடமாக முன்னோக்கி, ரஜினி எப்பதான் அரசியலுக்கு வருவார்னு பார்ப்பேன்!

ரவிசங்கர்

பேஸிக்கலி ஐயாம் எ வாட்ச் மெக்கா னிக்குங்கி றதால அதைப் பிரிச்சு மேய்வேன்..!

கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி-11

அப்படியே கீழடிக்குப் போய் அந்தச் சாந்தன், வேந்தன் கூட ஒரு செல்ஃபி எடுத்து வரவேண்டியது தான்.

Muthaiya

வேற்றுக்கிரக மனிதர்களைச் சந்தித்தால் என்ன கேட்பீர்கள்?

“ராஜேந்திரபாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு போன்ற திறமைவாய்ந்த விஞ்ஞானி கள், அறிவாளிகள் உங்க கிரகத்திலும் இருக்கி றார்களா?

Ramkumar Kumar

உங்க ஊர்ல `தேசத்து ரோக வழக்குப்பதிவு’ உண்டா?

கே.எம்.ஃபாரூக் சென்னை

உங்க கிரகத்துல பொறியியல் படிச்சவனுக்கு ஏதாவது வேலை இருக்கா?

சுந்தரபாண்டி நயினார்

உங்க கிரகத்துக்கு விசிட் செய்ய எங்க பிரதமர் மோடிக்கு எப்ப அழைப்பு விடப்போறீங்க?

கிருஷ்ணமூர்த்தி, சென்னை

உங்க ஊர்ல பூமியில் வாழும் மனிதர்களைப் பற்றிப் படமெல்லாம் வருமா?

H Umar Farook

விக்ரம் லேண்டரை எங்க மறச்சு வெச்சி ருக்கீங்க?

அல்டாப்பு

எங்களுக்குப் பெரிய ஆறுதல் இசைஞானி. உங்களுக்கு?

Pachai Perumal.A

நீங்க ஆன்ட்டி ஏலியன் இல்லதானே?

Jeevagan Mahendhiran

இடைத்தேர்தல் பற்றி நாலுவரியில் நச் கவிதை சொல்லுங்கள்...

ஆர்டர் பண்ணாமலே வீட்டிற்குப் பொருள் வந்தால் இடைத்தேர்தல்!

T.Anand, Coimbatore.

வந்த விலைக்கு விற்பது பொதுத்தேர்தல்...

சொன்ன விலைக்கு வாங்க வைப்பது இடைத்தேர்தல்.

புகழ்

ரூபாய் நோட்டில் சிரிக்கும் காந்தியைப் பார்த்து நாம் சிரிக்கும் தருணம்.

அல்டாப்பு

‘பொன்மகள் வந்தாள் பணம் ஆயிரம் தந்தாள் இடைத்தேர்தல் என்ற வழியாக...’

ரஹீம் கஸ்ஸாலி

விலைவாசி எல்லாம் விண்ணை முட்டுது. தீபாவளி செலவ நெனச்சா கண்ணக் கட்டுது. எல்லா மக்களுக்குமே தீரா வலிதான், இடைத்தேர்தல் தொகுதிக்கு மட்டும் தீபாவளிதான்..!

மயக்குநன்

வாங்குறோம் ஓட்டுக்குத் துட்டு.

அதனால வெக்கிறோம் ஜனநாயகத்துக்கு வேட்டு.

Vairachandran Ku

ஐந்து வருடப் புத்தகத்தில் நடுவுல கொஞ்சம் வெக்கத்தைக் காணோம்...

Adhirai Yusuf

நடிகரும் அரசியல் தலைவருமான கார்த்திக், ஜெ.தீபா, அழகிரி... இவர்கள் எல்லாம் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்கள்?

கார்த்திக்: ஆ ஊ ஹூம், காலையிலிருந்து யோசிக்கிறேன், நாம ஆரம்பிச்ச கட்சிப் பெயரே ஞாபகம் வர மாட்டிங்குதே.

ஜெ.எம்.ஜி.ராஜவேல், கோவை

தன் பிறந்தநாளுக்கும் குடும்பத்தினர் பிறந்தநாள்களுக்கும் பிளக்ஸ் பேனர் வைக்க முடியாமற்போனதற்கு வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார் அழகிரி.

நீலவேணி, கோவை

தீபா: அதை நீங்கள்தான் கூற வேண்டும்.

செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்.

கார்த்திக் - மறுபடியும் படத்துல நடிக்கலாமா என்று யோசிப்பார்.

தீபா - மறுபடியும் புதிய கட்சி ஆரம்பிக்கலாமா என்று யோசிப்பார்.

அழகிரி - மறுபடியும் அமைதிப் பேரணி நடத்தலாமா என்று யோசிப்பார்.

பாலசுப்ரமணி

மூவரும் சேர்ந்து ‘அகில இந்திய நாடாளும் அஞ்சாநெஞ்சன் எம்ஜிஆர் பேரவை’ ஆரம்பிக்கலாமான்னு பிளான் பண்ணிக்கிட்டு இருப்பாங்க..!

மயக்குநன்

அழகிரி - தேர்தல் எப்போ வரும் என்று யோசித்துக்கொண்டிருப்பார்.

கார்த்திக் - தேர்தல் வந்தால் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டி ருப்பார்.

ஜெ.தீபா - தேர்தல் ஏன் வருகிறது என்று யோசித்துக்கொண்டிருப்பார்.

Gold King

ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து மறுபடியும் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

மா.ச.பாரத்குமார்

தமிழ்நாட்டில் நம்மைப் பற்றி நினைப்பதற்கு விகடன் பத்திரிகையாவது இருக்கிறதே என்று மூவரும் நினைத்துக்கொண்டிருப்பார்கள்.

Vani Ganapathy

உங்கள் சிறுவயது தீபாவளிக்கும் இப்போதைய தீபாவளிக்கும் என்ன வித்தியாசம்?

அப்ப ரஜினி படம் வராதான்னு ஏங்கிக்கிட்டு இருப்போம்...

இப்ப ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதுன்னு ஏங்கிக்கிட்டு இருக்கோம்...

ட்விட்டர் MGR

காலம் கடந்தும் மனதில் நிற்குது.

காலம் மட்டும் கடந்து போகுது.

வீரணம் சரவணன்

“காசைக் கரியாக்காதடா” என்று அப்பா அன்று சொன்னது,

இன்று நம் பையன் ராக்கெட் வாங்க நம் பாக்கெட்டுக்கு வேட்டு வைக்கும்போதுதான் புரிகிறது.

செல்லத்துரை சென்னை

அது வாழ்த்து அட்டைக் கால தீபாவளி. இது வாட்ஸ் அப் ஃபார்வேர்டு கால தீபாவளி.

வெங்கடேஷ்

அப்போ வெடி, புத்தாடை வாங்கித் தரச் சொல்லி அழுதிருக்கேன்.

வாங்கித் தர முடியாம அப்பா அழுதிருப்பார்.

இப்போ எல்லாம் இருந்தும் அந்த எண்ணம் வரதில்லை.

ஓசிரிஸ் கிருஷ்

அன்று: அம்மா சமைத்த அறுசுவை உணவுடன் தீபாவளி கொண்டாடினோம்..!

இன்று: Swiggy, Zomato-வில் வாங்கிய உணவுடன் தீபாவளி..!

Sivakumar

சிறுவயது: அப்பெல்லாம் 8, 9 படம் ரிலீஸாகும். எது நூறுநாள் ஓடும்னு போட்டியே நடக்கும்.

இப்போது: ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு... ரெண்டு மூணு வாரம் ஓடினாலே டாப்தான்.

Velanganni Velu

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது.கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி.சிவா ஸ்டைலில் அந்தப் படத்திற்கு ஒரு டைட்டில் சொல்லுங்களேன்!?

தமிழ் சினிமாவில் பேய்ப்பட சீசன் திரும்பத் தொடங்கியிருக்கிறது. இதுவரை இல்லாத ஒரு வித்தியாச பேய்ப்பட ஒன்லைன் ப்ளீஸ்!?

உள்ளாட்சித் தேர்தல் தேதி சொல்லாமல் இழுத்தடிக்கிறது அ.தி.மு.க அரசு. அவர்களை சமாதானப்படுத்தி, தேர்தலை நடத்த வைக்க ஒரு ஜாலி காரணம் சொல்லுங்களேன்!?

இன்றைய தேதியில் எந்த சூப்பர்ஹீரோ இந்தியாவிற்குத் தேவை? ஏன்?

? உங்கள் நண்பர் செய்யும் அட்ராசிட்டிகளில் உங்களால் பொறுத்துக்கொள்ளவே முடியாதது எது?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :வாசகர் மேடை,ஆனந்த விகடன்,757, அண்ணா சாலை,

சென்னை 600 002.ஈமெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com