தொடர்கள்
Published:Updated:

வாசகர் மேடை - மாதா இங்கே - ஆவோ... ஆவோ..

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

எந்தத் தமிழ் சினிமாவைப் பார்க்கும்போது ‘எந்த ஊர்ல இப்படில்லாம் நடக்குது?’ என்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறது? ஜாலியான உதாரணம் ப்ளீஸ்...

டிகர் திலகம் நடித்த `மிருதங்க சக்கரவர்த்தி’ படத்தில் சிவாஜி அவர்கள் மிருதங்கம் வாசிக்க வாசிக்க... வாழைக்காய் பழுத்துவிடும். இதெல்லாம் எப்படி நடக்கும்? (நாங்கெல்லாம் 68 கிட்ஸ்)

மேதாவி நடராஜன்

வாசகர் மேடை - 
மாதா இங்கே - ஆவோ... ஆவோ..

செத்துப்போன பறவையோட ஆவியெல்லாம் ஒருத்தர் உடம்புல புகுந்து செல்போன் வெச்சிருக்கவனைப் பூரா கொலை பண்ணுதே, அந்த ஊர் எங்க சார் இருக்கு?

RavikumarMGR

ஒரு ஓட்டு போட தனி பிளைட்ல வருவாராம்... மக்கள் கேள்வி கேட்டாங்கன்னு, கோடிகோடியா சம்பளம் வாங்கிட்டிருக்கற வேலையையே ராஜினாமா பண்ணிடுவாராம்... எனக்கெல்லாம் 1000 ரூவா எக்ஸ்ட்ரா கொடுத்தா ராவுபுல்லா கண்ணுமுழிச்சு வேலை செய்வேனாக்கும்.

kalpanan sen

எல்லாப் பேய்களுமே அரண்மனை பங்களா வீடுகளுக்குத்தான் வருமா, ஒண்டிக்குடித்தன வீடுகளுக்கெல்லாம் வராதா பாஸ்?

Mani Pmp

எல்லா ஏரியாவிலும் போய்ப் பார்த்துட்டேன்... ஊஹூம்... ரவுடி நடந்து வரும்போது தீப்பொறியோ, தூசியோ பறக்கவே இல்லே...

Adhirai Yusuf

காமெடியன்களுக்கு மட்டும் பாம் வெடிச்சாலும் ஒண்ணும் ஆகாது. சட்டை, பேன்ட் மட்டும் கிழிந்து வாயில் புகை மட்டும் வரும். பயங்கர கறுப்பா இருக்கிறவங்களும் கறுப்பா பயங்கரமா மாறுவாங்க அவ்ளோதான். முடி மட்டும் ஸ்பைக் வச்சா மாதிரி ஆகிடும்.

செ.செந்தில்குமார்

குழந்தைக்கு அம்மை போட்டிருந்தா, ஹீரோயின் ஒரே ஒரு சாமிப் பாட்டு பாடினா போதும், அந்த அம்மை அப்படியே மறஞ்சு போயிடும்.

Mr. அ ல் லு

தன்னைக் கொன்றவனைப் பேயாக மாறிப் பழிவாங்கும் காட்சிகள். ஊர் உலகத்தில் இப்படியெல்லாம் நடந்தால் ஒரு கொலை நடக்குமா?

ஆதவன்

எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் விதவிதமாக இந்தித் திணிப்பு முயற்சிகளில் ஈடுபடுகிறது மத்திய அரசு. இன்னும் என்னென்ன புதிய ஐடியாக்களில் இந்தியைத் திணிப்பார்கள் என்று உங்கள் கற்பனைக்குதிரையைத் தட்டிவிடுங்கள்.

இந்தி பேசறதாயிருந்தா, `பிஸ்என்எல்’ல ஃபுல் டாக் டைம்ல ஃப்ரீ சிம் கொடுக்கறதா அறிவிக்கலாம்.

sanjeevi bharathi

தமிழ்த்தாய் வாழ்த்தை இந்தியில் பாட வைக்கலாம்.

எம்.சேவியர் பால், கோயம்புத்தூர்

ரயிலில் முன்பதிவு செய்யும் நபர்களில் மத்யமா போன்ற இந்தித்தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 30% கட்டணச் சலுகை.

இராஜவேல் தேனி

ஹிந்தியில் தாலாட்டு பாடும் தமிழகத் தாய்மார்களுக்குத் தங்கக்காசு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தலாம்.

Vaira Bala

மத்திய அரசின் திட்டங்களைப் பெற இந்தியில்தான் கையெழுத்துப் போடணும் என்றுகூடச் சொல்லுவாங்க!

H Umar Farook

ஹிந்தி பேசினா அக்கவுன்ட்ல 15 லட்சம் உடனடியாகப் போடப்படும்.

Vj Kumar

இனி எந்த OTP-யா இருந்தாலும் அது நம்பர் கிடையாது, ஒன்லி ஹிந்தி எழுத்துகள்தான்னு ஒரு `இனிமா’ கொடுக்கலாம்.

பொம்மையா முருகன்

தொலைக்காட்சியில் பெண்கள் பார்க்கும் தொடர்கள் அனைத்தின் வசன உச்சரிப்பும் இனி இந்தியில் மட்டுமே இருக்கும் என்றால் பெண்கள் இந்தி கற்க ஆரம்பித்துவிடுவார்கள்.

G. சத்தியமூர்த்தி , கும்பகோணம்

மினி பஸ்களில் ராஜா பாட்டுகளைத் தடை பண்ணிட்டு இந்திப் பாட்டுகள் மட்டும்தான் போடணும்னு சொல்லலாம். மீறிப் போடுபவர்கள் லைசன்ஸை கேன்சல் பண்ணிடலாம்.

காட்டுப்பயல்

உங்கள் கம்ப்யூட்டருக்குச் செல்லப்பெயர் வைப்பது என்றால் என்ன பெயர் வைப்பீர்கள்?

விடாது விண்டோஸ்.

latha athiyaman

இம்சைதாங்கி.

ottakkooththan

வாழ்க்கையில் எந்நேரமும் நாம் கேட்டதற்குப் பதிலை, விளக்கத்தை உடனே தந்து கொண்டிருப்பதால் அவரவர் ‘மனைவி’யின் பெயரை வைக்கலாம்.

த.இராஜவேல் , தேனி

பல வெப்`சைட்டு’களில் நம்மை மூழ்கடிப்பதால், `சைட்டானிக்.’

AmbikaArun

செல்ல`மடி’(கணி)நீ எனக்கு!

Neravy Gajendiran

`நம்ம வீட்டுப் பிள்ளை’ - வீட்டில் எல்லாருக்கும் பிடிப்பதாலும், பயன்படுவதாலும்!

கந்தையன் இளங்கோ

அல்லுடு! -மீம்ஸ் கிரியேட்டர்ஸின் வாழ்வாதாரமான தமிழிசை மேடம் தெலங்கானா ஆளுநர் ஆகியிருப்பதன் ஞாபகார்த்தமாக..!

Laks Venik

எப்போதும் கையில் தூக்கிக்கொண்டு அலைவதால், ‘கைப்பிள்ளை.’

Hemalatha Srinivasan

5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வை அறிவித்திருக்கிறது தமிழக அரசு. நம் தமிழக அமைச்சர்களுக்கு விநோதமான தேர்வுகள் நடத்தலாம் என்றால் என்ன தேர்வுகள் நடத்தலாம்?

சரியா, தவறா:

சிலப்பதிகாரத்தை எழுதியவர் சிலம்பரசன்.

பெரியபுராணத்தை எழுதியவர் பெரியார்.

திருக்குறளை எழுதியவர் திருநாவுக்கரசர்.

மல்லிகா குரு

வாசகர் மேடை - 
மாதா இங்கே - ஆவோ... ஆவோ..

உச்சரிப்புத் தேர்வு - Los Angeles கூட வாசிக்கத் தெரியாத அமைச்சர்களுக்கு இத்தேர்வை நடத்த வேண்டும்.

கு. ராஜசுவாதி ப்ரியா

சென்னை

பதவியில் தொடர `சுலபமான நீட்

தேர்வு’ நடத்தலாம்.

sugumar arjunan

PEET : Political Eligibility cum Entrance Test -ல் பாஸாகணும்.

பாடத்திட்டம்:

5 ஆம் வகுப்பில் பாஸ் ஆகியிருக்க வேண்டும்.

1330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்பிக்க வேணடும்.

அதன் விளக்கவுரையை இந்தியில் எழுத வேண்டும்.

Ramuvel Kanthasamy

இப்ப உள்ள 5-ம் வகுப்புப் பொதுத்தேர்வுக் கேள்வித்தாள்களையே கொடுத்து பதில் எழுதச்சொல்லுங்க. எத்தனை பேரு பாஸ் ஆகுறாங்கன்னு பார்க்கலாம்.

கடவுள் துணை பாபு

இந்தியா - இத்தாலியை ஜீன் லெவலில் பிரிச்சு மேயும் திறமை கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ‘ஜெனிட்டிக்ஸ்’ பாடத்தில் ஒரு தேர்வு நடத்தலாம்..!

KLAKSHM14184257

5-ம் வகுப்பு மாணவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், கல்வி அமைச்சர் பதவி தரலாம்.

Ravikumar Krishnasamy

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உலகின் எட்டாவது அதிசயம், மற்ற ஏழு அதிசயங்கள் எவை?

malliga guru

ரோஹித் - விராட் கோலி பனிப்போரைத் தீர்த்துவைக்க சமரச ஐடியாக்கள் சொல்லுங்கள்...

ஆடும்போது கோலி படம் போட்ட சட்டையை ரோஹித்தும், ரோஹித் படம் போட்ட சட்டையை கோலியும் அணியச் சொல்லலாம்.

அம்பை தேவா

இருவர் அல்லாத வேறொரு வீரரை கேப்டனாக்கப்போவதாகக் கொளுத்திப் போடலாம்.

jayachandrababu

ஆட்டத்தில் முதல் பாதியில் கோலி கேப்டன்! அடுத்த பாதியில் ரோஹித் கேப்டன்! இப்படிப் பண்ணலாம்!

அம்பை தேவா

ரோஹித்தோட குட்டிப் பாப்பா, கோலியோட நல்லாப் பழகுற மாதிரி சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம். இந்தப் பழக்கமே பனிப்போரைப் பாசப்போரா உருக வெச்சிடுமே.

வெங்கடேஷ்

ICC கிட்ட நைசாப் பேசி, அதிமுகவைப்போல இந்திய கிரிக்கெட் டீமிற்கும், ‘இரட்டைத் தலைமை’ கொண்டு வரலாம்..!

KrishnaratnamVC

இவரைப் பற்றி அவரும், அவரைப் பற்றி இவரும் புகழ்ந்து பாடும்படி டாஸ்க் கொடுக்கலாம்!

Sri Vidya

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க! உங்கள் கடிதம் மிஸ் ஆகிறது என்கிற சந்தேகமா? இனி வாசகர்மேடை பகுதிக்கு நீங்கள் vasagarmedai@vikatan.com என்னும் ஈமெயில் முகவரிக்கு உங்கள் பதிலை அனுப்பலாம்.

வாசகர் மேடை - 
மாதா இங்கே - ஆவோ... ஆவோ..

? உங்களிடம் டைம் மெஷின் கிடைத்தால் முதல் வேலையாக என்ன செய்வீர்கள்?

? இடைத்தேர்தல் பற்றி நாலுவரியில் நச் கவிதை சொல்லுங்கள்...

? வேற்றுக்கிரக மனிதர்களைச் சந்தித்தால் என்ன கேட்பீர்கள்?

? உங்கள் சிறுவயது தீபாவளிக்கும் இப்போதைய தீபாவளிக்கும் என்ன வித்தியாசம்?

? நடிகரும் அரசியல் தலைவருமான கார்த்திக், ஜெ.தீபா, அழகிரி...இவர்கள் எல்லாம் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்கள்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை,ஆனந்த விகடன்,757, அண்ணா சாலை,

சென்னை 600 002.