Published:Updated:

மொபைல் டேட்டாவும், பாக்கெட் பேட்டாவும் காலி… விஜய் பிறந்தநாளும், ரசிகர்களின் ஸ்டேட்டஸ் அலப்பறைகளும்!

விஜய் பிறந்தநாளின் போது ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்த சமூக வலைதளங்களில் போஸ்ட், ஸ்டேட்டஸ்களை விதவிதமாக பகிர்வார்கள். அதில் சிலர் ஒரு ஸ்டேட்டஸிற்கும் மற்றொரு ஸ்டேட்டஸிற்கும் இடைவெளியே இல்லாத அளவுக்கு ட்ரெயின் விட தவித்துப்போனார்கள் பிற கான்டாக்ட் வாசிகள்.

ஜூன் மாதம் வந்துவிட்டாலே விஜய் ரசிகர்களின் பேட்டையில் கொண்டாட்டம் தொடங்கிவிடும். சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்வது, காமன் டி.பி-க்களை வெளியிடுவது, அன்னதானம், ரத்ததானம், பேனர், சுவரொட்டிகள் என திருவிழா போன்று கோலாகலமாக இருக்கும். அதுவும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிவிட்டால் கொண்டாட்டம் உற்சாகத்தின் உச்சமாக இருக்கும். அப்படி மாஸ்டர் ஜே.டி-யைத் தொடர்ந்து 'தளபதி 65' படத்தில் இன்டர்நேஷனல் ரேஞ்சுக்கு களமிறங்கினார். கேங்ஸ்டர், ஸ்பை என பல கதைகள் உலவ கடந்த 21-ம் தேதி 'பீஸ்ட்' மோடில் வந்திறங்கினார் விஜய்.

ஃபர்ஸ்ட் லுக் வெளியான கொஞ்ச நேரத்தில், 'ஷார்ட் கன்னுக்கு எதுக்கு திமிங்கலம் 8x ஸ்கோப்' என்று நமது பப்ஜி ப்ரோ பிளேயர்ஸ் கேள்வியெழுப்ப, "இருக்க... ஆனா இல்ல" என்ற விவாதம் கிளம்பி இப்போது "இருக்கும்" என்று எக்ஸ்பர்ட்ஸ் சிலர் தெளிவுபடுத்த அமைதியாகியுள்ளனர். வழக்கமாகவே விஜய் பிறந்தநாளின் போது ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்த சமூக வலைதளங்களில் போஸ்ட், ஸ்டேட்டஸ்களை விதவிதமாக பகிர்வார்கள். அதில் சிலர் ஒரு ஸ்டேட்டஸிற்கும் மற்றொரு ஸ்டேட்டஸிற்கும் இடைவெளியே இல்லாத அளவுக்கு ட்ரெயின் விட தவித்துப்போனார்கள் பிற கான்டாக்ட் வாசிகள். லாக்டெளனில் வீட்டிலேயே பிஸியாக இருக்கும் நெட்டிசன்கள் வாட்ஸ் அப்பை நோக்கி படையெடுத்ததில் வாட்ஸ்அப்பே திணறிப்போனது!

அப்படி நொந்து நூடூல்ஸான பரிதாப மீம்ஸ்களின் தொகுப்பு மேலே!

அடுத்த கட்டுரைக்கு