Published:Updated:

'ஹாஸ்ய' பாலாஜி டு 'ஜெய் ராஜூ பாய்'. - வாசகர் மேடை 'ஹிட்' லிஸ்ட்!

வாசகர் மேடை
வாசகர் மேடை

ராஜூ பாய். உலக வரலாற்றில் இவர் நகைச்சுவைப் பேச்சுக்குத் தனி இடம் கிடைக்க வேண்டும். ஜெய் ராஜூ பாய்!

? இப்போதைய தமிழக அமைச்சர்களில் உங்கள் மனம் கவர்ந்தவர் யார்? ஏன்?

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தினமொரு திடுக்கிடும் அறிக்கை விட்டு பொதுமக்களை நகைச்சுவைக் கடலில் மிதக்க வைப்பார். ஹாஸ்ய உணர்வு கொண்ட ஒரே அ.தி.மு.க அமைச்சர். மேலும் படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2otZ7pK

- வெ.பெத்துசாமி

அமைச்சரா இருந்தும் இஸ்ரோ-வின் விஞ்ஞானிகளுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் செல்லூர் ராஜுதான்.

- நாஞ்சில் நபீல்

ஜெயக்குமார். ஏன்னா, அவர் அமைச்சர் மட்டுமல்ல, பாடகர், பாக்ஸர் என்ற பல முகம் கொண்டவர்.

- mohanram.ko

அறிவிக்கப்படா மின்வெட்டை அமல்படுத்தி, தமிழகம் இன்னமும் மின் மிகை மாநிலம்தான் என்று சமாளிக்கும் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி.

- அதிரை புகாரி

முதலமைச்சர் பழனிசாமி... தவழ்ந்து தவழ்ந்து போகும் குழந்தைத்தனம் இருப்பதால்.

90ஸ் கிட்ஸ் போல, 80ஸ் கிட்ஸ் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது

- பாலசுப்ரமணி

ராஜூ பாய். உலக வரலாற்றில் இவர் நகைச்சுவைப் பேச்சுக்குத் தனி இடம் கிடைக்க வேண்டும். ஜெய் ராஜூ பாய்!

- Sowmya Red

ஓபிஎஸ்! இத்தனை நாளா அரசியல்ல தியாகம்தான் முக்கியம்னு நினைச்ச எனக்கு... 'தியானம்'தான் அதைவிட முக்கியம்னு துணை முதல்வர் பதவியைப் பெற்று நிரூபித்துக் காட்டியதற்காக..!

- மயக்குநன்

போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஏசி இல்லாத பேருந்துப் பயணிகளை மகிழ்விக்க, பேருந்தில் காற்று வரப் பல ஓட்டைகள், மழைக்காலத்தில் மினி அருவி போன்றவற்றை அமைத்தமைக்கு.

- எம்.சேவியர் பால், கோயம்புத்தூர்.

? வடிவேலு, சந்தானம், சூரி எல்லோருமே கதாநாயகர்கள் ஆகிவிட்டார்கள். மூன்று ஹீரோக்களும் ஒரு படத்தில் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

வடிவேல்
வடிவேல்

'23 புரோட்டா தின்ன ஆசையா' - ரமேஷ்பாபு, தஞ்சாவூர்

'முட்டுச் சந்தில் மூவர் கூடம்' - Shanmugasundaram-Tss

'மூவொண்டர்கள்' - Laks Veni

'ஜோக்காளிகள்' - பெ.பச்சையப்பன், கம்பம்

'அலிபாபாவும் மூணு காமெடியன்களும்' - பூநசி.மேதாவி, சென்னை

'தில்லுக்கு பாடிசோடாவும் பரோட்டாவும்' - கு.ராஜசுவாதிப்ரியா, சென்னை

'ஒரு நேசமணியும் இரு அப்ரன்டீசுகளும்' - ஆதவன்

'லஜக் மஜக் லொஜக்' - mohanramko

'நாங்களும் ஹீரோதான்டா' - வெங்கடேஷ்

? 90ஸ் கிட்ஸ் போல, 80ஸ் கிட்ஸ் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன ?

? காதலுக்கு இதயம், தாஜ்மகால் என்று எத்தனையோ சின்னங்கள் இருக்கின்றன. காதல் தோல்விக்குச் சின்னம் உருவாக்குவது என்றால் எதைச் சின்னமாக்கலாம்?

? 'உலகத்தின் கடைசி மனிதனின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது' - காலங்காலமாக ஒற்றைவரி சிறுகதைக்குச் சொல்லப்படும் உதாரணம். எங்கே நீங்கள் ஒரு புதிய ஒற்றைவரி சிறுகதை சொல்லுங்களேன்!

- இந்தக் கேள்விகளுக்கு வாசகர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அசத்தல் பதில்களை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > வாசகர் மேடை - முட்டுச் சந்தில் மூவர் கூடம்! https://cinema.vikatan.com/humoursatire/vasagar-medai-oct-16th

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2MuIi5Z |

அடுத்த கட்டுரைக்கு