Published:Updated:

`யெஸ்... வாய்ஸ் ஓவர்ல GVM-க்கே நாமதான் முன்னோடி!' - ஒரு சின்ன ரீவைண்ட்

வாய்ஸ் ஓவர்
வாய்ஸ் ஓவர்

ஆனா, காலச்சக்கரத்தைக் கொஞ்சம் ரிவர்ஸில் சுற்றிப்பார்த்தால், நாமளும் இந்த வாய்ஸ் ஓவர் விஷயங்கள்ல கன்னாபின்னானு கபடி ஆடியிருக்கோம். யெஸ்...

என்ன மாயமோ தெரியலை, மந்திரமோ தெரியலை `எனை நோக்கி பாயும் தோட்டா' பார்த்துட்டு வந்ததிலிருந்து மனசுக்குள்ளே வெறும் வாய்ஸ் ஓவர் மட்டும்தான் கேட்குது. நம்ம மனசும் கௌதம் மேனனால ரொம்ப பாதிக்கபட்ருச்சோ என்னவோ. ஆனா, காலச்சக்கரத்தைக் கொஞ்சம் ரிவர்ஸில் சுற்றிப்பார்த்தால், நாமளும் இந்த வாய்ஸ் ஓவர் விஷயங்கள்ல கன்னாபின்னானு கபடி ஆடியிருக்கோம். யெஸ்...

எல்லாம் பள்ளி, கல்லூரி காலங்களில்தான். அதிலும் குறிப்பாக எக்ஸாம் சமயத்தில் பாரபட்சமே பார்க்காமல் உள்மனதில் சர வெடியைக் கொளுத்திப் போட்டிருக்கும் இந்த வாய்ஸ் ஓவர்கள். `யெஸ்... நாளை எனக்கு எக்ஸாம்... படிக்கலைன்னா பொழப்பு சிரிப்பா சிரிச்சுடும்... யெஸ் மறுபடியும் அது எனக்குக் கேட்குது...'

வாய்ஸ் ஓவர்
வாய்ஸ் ஓவர்

'நாளைக்கு எக்ஸாம். அது மதியமா இருந்திருக்கக் கூடாதா... இருந்திருந்தா காலைல க்ரூப் ஸ்டடிகூட பண்ணிப் பாஸாகிருப்பேன். வெயிட்... க்ரூப் ஸ்டடி யார்கூட பண்ணியிருப்பேன். என் ஃப்ரெண்ட்கூட... அவன் படிச்சிருப்பானா... ஒருவேளை படிச்சிருந்தா அவனைப் பார்த்து எழுதலாமா இல்ல மெயின் கொஸ்டின்ஸை மினி ஜெராக்ஸ் எடுத்துட்டுப் போயிடலாமா... ஹ்ம்ம்... என்ன பண்ணலாம்... யோசி...

வாய்ஸ் ஓவர்
வாய்ஸ் ஓவர்

தூக்கம் வேற வருது... பசிக்கவும் செய்யுது... ஏதாவது சாப்பிடலாமா... வாட் அபௌட் பிரியாணி? வாட் அபௌட் கொத்து பரோட்டா. தொட்டபெட்டா ரோட்டு மேல கொத்து பரோட்டா. அந்தப் பாடலை பாடியவர் விஜய்தானே. இந்தப் பாட்டை பாடினதுக்குதான் அம்மா பூரி கட்டையில வெளுத்தாங்க. வீக்கம்கூட இன்னும் இருக்கு. இல்லை, வெறும் பால் மட்டும் குடிச்சிட்டு காலையில என்ன செய்யலாம்னு யோசிப்போம். ஓகே'

இப்படி வாய்ஸ் ஓவரில் கல்லூரி காலத்தில் நடை பயிலும்போது காதல் காலம் க்ராஸ் ஆகுமா ஆகாதா?

`ப்பா... யார் இவன் செம அழகா இருக்கான். இதுதான் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா... சரி மனசை அலைபாயவிடாம ஆக்டிவா எக்ஸாம் எழுதுவோம். வாட்... நான் காலையில பார்த்த அதே பையன். தட் க்யூட் பாய்! இந்த எக்ஸாம் ஹால்ல, அதுவும் என் பக்கத்துல. சும்மா ஒரு ஹாய் சொல்லலாமா... காறி துப்பிட்டா என்ன பண்றது... துப்புனா துடைச்சுக்கலாம்னு நாஞ்சில் சர்பத் சொல்லியிருக்கார். நோ ஹி இஸ் சம்பத். சர்பத்தும் நல்லாதான் இருக்கும்.

வாய்ஸ் ஓவர்
வாய்ஸ் ஓவர்

குலுக்கி சர்பத் மாதிரி என் மனசுல காதலும் பொங்கி வழியுது. இருந்தாலும் நோ... வேண்டாம். வெறும் ஆல் தி பெஸ்ட் மட்டும் சொல்லலாமா... இல்ல பேப்பரை அவன் பக்கம் பறக்கவிட்டு எடுத்துத் தர சொல்லிக் கேட்கலாமா... பார்த்தா படிக்கிற பையன் மாதிரி தெரியுது. கண்ணாடியெல்லாம் போட்ருக்கான். பேசாம டவுட் கேட்கலாமா... ச்சே! எல்லாமே பழைய ஐடியாவா வருது... ஓகே. அடிஷனல் பேப்பர் வாங்கக் கையெழுத்து போடும்போது பெயரைப் பார்த்து ஃபேஸ்புக்ல ரிக்வெஸ்ட் கொடுத்துடலாம். யெஸ் ஐ காட் இட்..!'

அடுத்து என்ன இன்டர்வியூதானே, வேலை தானே?

அதுவரை வைத்த மொத்த அரியர்களையும் அசால்ட் செய்து, காலேஜில் அரியரை எல்லாம் அசால்ட்டாக எகிறி குதித்து எம்பி வந்து நிமிர்ந்து நிற்கும் இடம் கேம்பஸ் இன்டர்வியூதானே?

வாய்ஸ் ஓவர்
வாய்ஸ் ஓவர்

'செல்ஃப் இன்ட்ரோக்கு நேத்து உக்கார்ந்து நாள் பூரா பிரிப்பேர் பண்ணோமே, "பதட்டத்துல எதுவும் சொதப்பாம இருக்கணும். சப்ஜெட்ல ஏதாவது கேட்டா, நாமளும் ஏதாவது சொல்லிவிடணும். நாம அட்டெண்ட் பண்ற அஞ்சாவது இன்டர்வியூ இது. இதுல மட்டும் செலக்ட் ஆகிட்டோம், மொத மாச சம்பளத்துல 10 ரூவாய கொண்டாந்து உன் உண்டில போடறேன்டா, ஆண்டவா!'

வேலை வாங்கியாச்சு, அடுத்து?

ஆமா பாஸு அதான்! வேலை செட்டான நமக்கு கல்யாணம் செட் ஆக நம்மை நாமே ஸ்கீம்ல படுத்திக்கற பாடு இருக்கே... பாவத்த! வாய்ஸ் ஓவர்ல அந்த கஷ்டத்தையும் கேப்போம்.

வாய்ஸ் ஓவர்
வாய்ஸ் ஓவர்

'லைட்டா தொப்பை வேற வெளிய தெரியுது. முடி வேற கொட்ட ஆரம்பிச்சிருச்சு. வெள்ள முடி அங்கங்க எட்டிப் பார்க்குது. கண்ணு வேற மங்கலா தெரியுது. மீன் சாப்பிடலாம்னு நினைச்சா, ஸீ ஃபுட் அலர்ஜி வேற. `ஐ' விக்ரம் மாதிரி ஆகிடுவோம். இவற்றையெல்லாம் தாண்டி நாம 90'ஸ் கிட் வேற. இனிமேலாவது ஒழுங்கா ஜிம் போகணும். டயட் ஃபாலோ பண்ணணும். இன்னிக்கு பாக்க வர்ற பையனுக்கு சொல்லணும். பதட்டப்படாம பக்குவமா பேசி ஓக்கே வாங்கணும். யெஸ், டேய் கோவாலு, என்னை எப்படியாவது காப்பாத்தி விட்ருடா!'

வில்லனாகவே இருந்தாலும், அப்படிப் பேசியிருக்கக் கூடாது கெளதம்! - `எனை நோக்கி பாயும் தோட்டா’ ப்ளஸ்/மைனஸ்... ப்ளீஸ்!
அடுத்த கட்டுரைக்கு