Published:Updated:

`பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?' - விஜய்கிட்ட அட்லீ சொல்லக்கூடிய `கதை'!

விஜய் - அட்லீ

'விஜய் மக்கள் இயக்கம் எப்போது வேண்டுமானாலும் அரசியல் கட்சியாக மாறும்!' என்று சரசர சரவெடி கொளுத்திப் போட்டிருக்கிறார் அவரின் தந்தை எஸ்.ஏ.சி. அப்படினா அரசியல் என்ட்ரிக்கு முன்னாடி என்ன பண்ணுவாங்க?

`பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?' - விஜய்கிட்ட அட்லீ சொல்லக்கூடிய `கதை'!

'விஜய் மக்கள் இயக்கம் எப்போது வேண்டுமானாலும் அரசியல் கட்சியாக மாறும்!' என்று சரசர சரவெடி கொளுத்திப் போட்டிருக்கிறார் அவரின் தந்தை எஸ்.ஏ.சி. அப்படினா அரசியல் என்ட்ரிக்கு முன்னாடி என்ன பண்ணுவாங்க?

Published:Updated:
விஜய் - அட்லீ

சட்டுபுட்டுனு நாலு டைரக்டர்களைக் கூப்பிட்டு அடுத்த படத்துக்குக் கதை கேட்பாங்கதானே? ஒருவேளை இவங்க டைரக்ட் பண்ணுனா விஜய்கிட்ட இப்படிக் கதை சொல்வாங்களோ?

அட்லீ:

"நான் இல்லாம தளபதிக்கு அரசியல் என்ட்ரியா? எங்க அண்ணனுக்கு நான்தான்டா செய்வேன். கதைப்படி அண்ணன் மரகதம் சென்னைல குட்டியானை ஓட்டுறார். தண்ணி கேன்ல சாராயத்தைக் கடத்துற கும்பல் அவர் வண்டியில அவருக்கே தெரியாம சரக்கைக் கடத்துறாங்க. லோக்கல் ஸ்டேஷன்ல லாடம்கட்டி அடிச்சப்பவும் யார்னு காட்டிக்கொடுக்காம கம்முனு அடி வாங்கிட்டு வீட்டுக்கு வந்திடுறாரு.

மொட்டை மாடில துணி காயப்போடப்போன தங்கச்சிமேல லைட் அடிச்சு விளையாடுறான் எதிர் போர்ஷன் பிளேபாய் ஒருத்தன். அவ கதறிட்டு வந்து சொன்னப்பவும் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு, 'அது வாலிப வயசு'ன்னு கப்சிப்புனு நிக்கிறான். கிரிக்கெட் விளையாடப்போன தம்பியோட மண்டையப் பொளந்து மாவிலக்கு ஏத்தி அனுப்புறான் ரௌடியோட மகன் ஒருத்தன். 'அண்ணே, வந்து தட்டிக்கேளுண்ணே'ன்னு அழுதுட்டு நிக்கிற தம்பிய, 'சாந்தமு லேகா சௌக்கியமு லேது!' என சமாதானப்படுத்துகிறான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விஜய்
விஜய்

இப்படி கோபமே படாம கோழை மாதிரி இருக்குற மரகதத்துக்கிட்ட ஒருநாள் குடும்பமே கோபமாகி, கட்டிவெச்சு உறிக்குது. 'சொல்லுங்க...யாரு நீங்க... தூக்கத்துல பாம்பேன்னு சொன்னீங்க. பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?'ன்னு கேட்குறாங்க. 'நான் பாம்பேல இருந்தேன்னு சொல்லவே இல்லையே... கனவுல பார்த்த பாம்பைத்தான் சொன்னேன்!'னு சமாளிக்கிறார் மரகதம்.

ஆனா, வீட்டுவாசல்ல பாம்பே குல்பி ஐஸ் விக்கிற தினேஷ் வந்து, 'தலிவரே, நம்ம அடுத்த ஆபரேஷன் என்ன?'ன்னு கேட்டுவைக்க, வசமா மாட்டிக்கிட்டார் மரகதம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்புறம் என்ன, ஏரியாக்குள்ள பீடாக் கடை போட்ட சேட் பிரெண்டும், டீக்கடை வெச்சிருக்குற சிங்கும் சொன்னபிறகுதான் தெரிய வருது மரகதத்தோட முழுப்பேரு மரகதமணின்னு. மும்பை பவசோனா கட்சியோட தலைவரு. அப்பாவை எதிரி கேங் போட்டுத் தள்ளுனதும் சென்னைக்கு வந்து அடையாளத்தை மறைச்சு மரகதமா குட்டியானை, மீன்பாடி லாரி ஓட்டிக்கிட்டு ஒண்டுத்தன குடும்பத்தோடு ஒண்டிக்கிட்டார். ப்ளாஷ்பேக்கை சத்தமாவா சொல்லுவான் மனுஷன்? விஷயம் கேள்விப்பட்டு ஆப்போசிட் கேங்கும் மும்பை போலீஸும் துரத்த, எல்லோர் கண்ணிலும் விரலைவிட்டு ஆட்டிட்டு சுயேச்சையா எலெக்‌ஷன்ல நின்னு ஜெயிச்சு எம்.எல்.ஏ ஆகுறார்.

இவர் யாருன்னு மீடியா மூலம் விஷயம் தெரிஞ்சதும் எல்லா எம்.எல்.ஏக்களும் வரிசையா வந்து கையில் முத்தம் கொடுத்து இவரோட இணைஞ்சுக்கிறாங்க. க்ளைமாக்ஸ்ல சி.எம் நாற்காலில கம்பீரமா உட்காருறார் தளபதி! அவர் கட்சி பெண் எம்.எல்.ஏக்களுக்கு சிங்கப் பெண்ணே சிங்கப்பெண்ணே சாங் போட்டுரலாம்!"

- இதுபோலவே ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் விஜய்கிட்ட இப்படிக் கதை சொன்னா எப்படி இருக்கும்? - ஆனந்த விகடன் இதழில் முழுமையாகவும் ஜாலியாகவும் வாசிக்க > கடுப்பேத்தினா கதை... உசுப்பேத்தினா உல்டா! https://bit.ly/35LDtPk

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV