
தவறான வார்த்தைகள் பிரயோகித்து comment செய்தவரை சென்னை பெருநகர காவல் பக்கத்தில் tag தான் செஞ்சு விட்டேன். Comment deleted, ஆள் escape. அவ்ளோ பயம் இருக்கு இல்ல...
Uma Mohan
என்ன வேலைக்குப் போவாய் என எங்களை யாரும் கேட்டதில்லை.
அப்போதே எங்கள் ஊரில் குடையும் நோட்டுப்புத்தகங்களுமாக நடக்கும் ஏழெட்டு டீச்சர்கள் உண்டு.
பெரிய டீச்சர் உட்பட ஆயா, நர்சுகளோடு கண்ணாடி அணிந்த பெண் மருத்துவர் ஒருவரும் உண்டு.
தூக்கிச்செருகிய முந்தானையோடு சமையலறைக்கும் முன்வாசல் மளிகைக் கடைக்குமாக அலைந்து வியாபாரம் பார்த்த பெண் உண்டு.
ஊராட்சி அலுவலகத்துக்கு அவ்வப்போது மாற்றலில் வந்துபோகும் பெண் எழுத்தர் வரிசையில் ஒரு அதிகாரிகூட இரண்டு வருடமிருந்தார்.
ஆனாலும், படிச்சு என்னவாகப் போகிறாய் என்ற கேள்வி எங்களிடம் கேட்கப்படவேயில்லை.
வெகுகாலம்... நழுவும் காற்சட்டைகளை இழுத்துவிட்டபடி இதற்குப் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவன்களுக்குத்தான் இருந்தது.
வழியனுப்ப யாருமில்லாவிடிலும் ரயிலேறிவிடுபவர்களாகத்தான் புறப் பட்டோம் மகளே!

Shan Karuppusamy
செய்யவே இல்லை என்று சாதிப்பவர் களைக் கூட நம்பலாம். இது எல்லோரும் செய்வதுதானே என்று, ஒரு குற்றத்தை அன்றாடமாக்குபவர்களிடம்தான் அதிக கவனம் தேவை.
Kotravai N
எல்லா அம்மாக்களுக்கும் கடவுள் தேவைப்படுவது அவள் பிள்ளைகளுக்காகத்தான்!
Toshila Umashankar
தவறான வார்த்தைகள் பிரயோகித்து comment செய்தவரை சென்னை பெருநகர காவல் பக்கத்தில் tag தான் செஞ்சு விட்டேன். Comment deleted, ஆள் escape. அவ்ளோ பயம் இருக்கு இல்ல... எதுக்கு இந்த தேவை இல்லாத ஆணி?! பிடிக்கலைன்னா unfollow பண்ணித் தொலைங்க, எதுக்கு Hatred பரப்பிக்கிட்டு..?
Cyber complaints easy தான். சில நேரம் இதனால் immediate தீர்வு கிடைக்குமா தெரியாது. ஆனா abusive profile கண்காணிக்கப்படும் என்பது உண்மை. போன வருடம் மன்னிப்பு கேட்டவர்கள் எல்லாம் உண்டு.
Sharmila Seyyid
இந்த நாட்களில் என்னோடு உரையாடும் தோழி களில் பலர் தாங்களும் மேமோகிராம் (Mammogram) சோதனைக்குச் செல்லவேண்டிய சூழல் இருந்தும் சங்கடம் அல்லது அச்சம் காரணமாக இன்னும் செய்து கொள்ளாதிருப்பதாகச் சொல்கிறார்கள். சிலர் நாற்பது அல்லது ஐம்பது வயதுக்குப் பின்னர்தான் மேமோகிராம் சோதனையைச் செய்ய வேண்டும் என்று நம்புகிறார்கள்.
மேமோகிராம் பற்றி அறியாதவர்களுக்கு இந்தச் சிறு குறிப்பு உதவலாம்.
முதலில், மேமோகிராம் செய்வதற்கு நாற்பது, ஐம்பது வயதாகியிருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. பொதுவாக இந்த வயதுகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். என் விசயத்தில், வயதுக்கு எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
நான் மேமோகிராம் செய்வதற்கு எந்தப் பிரதான காரணமும் இருக்கவில்லை. நோய் அறிகுறிகள் காரணமாகவோ, மார்பிலோ, மார்புக் காம்புகளிலோ தென்பட்ட அசாதாரணங்கள் காரணமாகவோ, அல்லது மருத்துவரின் பரிந்துரையினாலோ நான் மேமோகிராம் பரிசோதனைக்குச் செல்லவில்லை. 2022 அக்டோபர் மாதத்தில் முதலாவது மேமோகிராம் சோதனைக்கு நான் சென்றபோது எனக்கு 39 வயது முடிவடைந்திருக்கவுமில்லை. வழக்கமாக ஆறு மாதங் களுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைகளுடன் மேமோகிராமும் செய்து கொள்வது என்று நானாகவே தீர்மானித்தேன். மன உந்துதலினால் தான் இது நிகழ்ந்தது.
எனது கொரியன் தோழி தனது இருபத்தி நாளாவது வயதில் புதிதாக வேலையில் இணைந்து கொண்ட போது அந்நிறுவனம் பரிந்துரைத்த மருத்துவ பரிசோதனைகளில் மேமோகிராமும் இருந்ததென்றும், தான் அப்போதே அந்த பரிசோதனையைச் செய்திருந் தேன் என்றும் கூறினார்.
மேமோகிராம் பற்றி பெண்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மேமோகிராம் என்பது மார்பகத்தின் எக்ஸ்ரே படம். மார்பக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறி களைக் கண்டறிய மருத்துவர்கள் மேமோகிராம் பயன்படுத்துகின்றனர். மேமோகிராம்கள் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான சிறந்த சோதனை என அறியப்படுகின்றது.
இந்தப் பரிசோதனை வலிக்குமா என்றால், ஆமாம். ஒரு சிறப்பு எக்ஸ்ரே இயந்திரத்தின் முன் நிற்க வைத்து, ஒரு தொழில்நுட்பவியலாளர் உங்கள் மார்பகத்தை ஒரு பிளாஸ்டிக் தட்டில் வைப்பார். மற்றொரு தட்டு உங்கள் மார்பகத்தை மேலே இருந்து உறுதியாக அழுத்தும். எக்ஸ்ரே எடுக்கும்போது தட்டுகள் மார்பகத்தைத் தட்டையாக்கும். நீங்கள் ஒருவித அழுத்தத்தையும் வலியையும் உணர்வீர்கள். மார்பகத்தின் பக்க காட்சியை உருவாக்க மீண்டும் மீண்டும் இவ்வாறு அழுத்தி எக்ஸ்ரே படங்கள் எடுக்கப்படும். மற்ற மார்பகமும் இதே வழியில் எக்ஸ்ரே எடுக்கப்படும். தொழில்நுட்பவியலாளர் X-கதிர்களை சரிபார்க்கும் வரை படங்களை மீண்டும் செய்ய வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்த நீங்கள் காத்திருக்க வேண்டும். உங்கள் மேமோகிராம் முடிவுகளை தொழில்நுட்பவியலாளர் உடனே அறிவிக்க மாட்டார் என்பதையும் கவனத்திற் கொள்வது நல்லது.
மேமோகிராம் எக்ஸ்ரேயின் போதான வலி சில கணங்கள் மட்டுமே இருக்கும். இந்த அசௌகரியம் விரைவில் நீங்கிவிடும். நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பது தொழில்நுட்பவியலாளரின் திறமை, உங்கள் மார்பகங்களின் அளவு, அவை எவ்வளவு அழுத்தப்பட வேண்டும் என்பதைப் பொறுத்தது. மாதவிடாய் வரவிருக்கும் காலமாக இருந்தால், மார்பகங்கள் அதிக உணர்திறன் கொண்டதாக இருக்கலாம். மாதவிடாய் நாட்களில் அல்லது அதற்கு முன்பாக மேமோகிராம் எடுப்பதைத் தவிர்ப்பதும் நலம்.

முக்கியமாக, மேமோகிராம் அறிக்கை உடனே கேன்சர் என்று முடி வுறுவதற்கில்லை. எக்ஸ்ரே படங்களில் அசாதாரண தன்மைகள் காணப்பட்டால் மீண்டும் மேமோகிராம், சிடி ஸ்கேன், பயாப்சி என்று பல கட்டங்களின் பின்பே கான்சர் உறுதிப்படுத்தப்படும். மேமோகிராம் மட்டுமே ஒருவருக்கு கேன்சர் நோய் இருக்கிறது என்று உறுதிப்படுத்தி விடாது. இது ஒரு ஆரம்ப பரிசோதனை மட்டுமே.
நம் நாட்டில் எல்லா மாகாணங்களிலும் உள்ள போதனா வைத்திய சாலைகளில் மேமோகிராம் வசதிகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திரா ராஜமாணிக்கம்
என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம், எப்படி வேண்டுமானாலும் உடுத்தலாம், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம் என்கிற சுதந்திரத்திற்கு ‘தனிமை’ என்று இன்னொரு பெயர் உண்டு.
மாஸ்டர் பீஸ்
ஒருத்தவங்க நம்மிடம் ஆலோசனை கேட்டால் விரும்பமிருந்தால் நம்ம பார்வையை பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்ம ஆலோசனைப்படிதான் நடக்க வேண்டுமென எதிர்பார்க்கக்கூடாது!
மிருதுளா
Perfume அடிச்சிக்கிட்டவங்கள விட தைலம் பூசின யாராவது பக்கத்துல உட்கார்ந்தா அவ்ளோ நல்லாருக்கு.

Selva Bharathi
முடியுமோ, முடியாதோ என்ற தயக்கத்தினாலேயே பல நல்ல வாய்ப்புகளைத் தவறவிடுகிறோம்.
{m}
Yes it exists. Unconditional loveனா கோபப்படவும் சண்டை போடவும் 100 விஷயம் இருந்தாலும், அது நடந்தாலும் உள்ளூற அவங்கள *அவங்களாவே* பாக்கறது. அவங்க inborn இயல்புகளை பக்குவத்தோட deal பண்ணி சரிபண்ணி ஏத்துக்கறது. அவங்க மகிழ்ச்சில அவங்களவிட அதிகமா நாம மகிழ்றதும்,
விழும்போது அவங்களவிட அதிகமான வலிமை யோட நாம அவங்களை தாங்கிப் பிடிச்சிக்கறதும்தான் unconditional love. IMO, இதைத்தவிர வேற எப்டி சொன்னாலும் its just a chocolate cover wrap on a stone. அவ்ளோதான். சண்டை வராம/போடாம இருக்கறது is not unconditional love!! Its slavery. Know the difference!