தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

நவீன அறிவியல் மருத்துவம் என்பது அதி நவீன மருந்துகள், பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகள் மட்டுமல்ல. அவை முக்கியம்தான்.

Gokul Prasad

வலைத்தொடர்களுக்கு விமர்சனம் எழுதிவிட்டு மனசாட்சியே இல்லாமல் ஒருமுறை பார்க்கலாம் என முடிக்கிறார்கள்.

10 சீசன், 130 எபிசோடுகள்... எப்படிறா ரெண்டாவது தடவை பார்க்க?

Amuthan

தனக்கு என்ன வேண்டும் எனத் தெளிவாக தெரிந்த பெண்ணைக் கண்டால் எல்லாருக்கும் ஒரு வித பயம்தான். ஏனென்றால் அவளுக்குப் படிப்பிக்க எதுவும் இல்லை, தனக்குத் தேவையானதை அவளே வாங்கிக் கொள்கிறாள், அவளுக்கு செல்ல வேண்டிய இடத்திற்கு, அவளே சென்று வருகிறாள். அப்படி ஒரு பெண்ணை வீண் உணர்ச்சி குழம்புகளில் மூழ்கடிக்க முடியாது, வெற்று மிரட்டல்களுக்கு அடிபணிய வைக்க முடியாது. ஆனால் இங்கே முக்கால்வாசி பேருக்கு, அப்படி ஒரு பெண் தனக்கு தெரிந்த ஒரு பெண்ணாக இருக்கலாமே தவிர தன் வீட்டில் இருக்கக் கூடாது.

alya_manasa: சீரியல் டும்டும்டும்!
alya_manasa: சீரியல் டும்டும்டும்!

Ramanujam Govindan

நான் அடிக்கடி சொல்வதுதான்...

உடற்பயிற்சி, உணவு, உறக்கம், உள நலம்

ஆகிய நான்கு ‘உ’ க்கள்தான் ஆரோக்கியத்துக்கு அவசியம்.

வாழ்க்கைமுறைகளான இவற்றை மாற்றினாலே சர்க்கரை நோய், உடற்பருமன், ரத்த அழுத்தம், தூக்க மின்மை மன அழுத்தம், முதுகுவலி, கழுத்துவலி போன்ற பல நோய்களைத் தவிர்க்கலாம், கட்டுப் படுத்தலாம்.

நவீன அறிவியல் மருத்துவம் என்பது அதி நவீன மருந்துகள், பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகள் மட்டுமல்ல. அவை முக்கியம்தான். ஆனால், அதே அளவு முக்கியம் உடற்பயிற்சி, உணவுப்பழக்கம் இவற்றை அறிவியல்பூர்வமாக விளக்குவதும்.

உடற்பயிற்சியால் நன்மைகள் கிடைக்கும், கலோரிகள் என்றால் என்ன, கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, இன்னின்ன உணவில் இந்த வைட்டமின்கள், சத்துகள் கிடைக்கும் என்றெல்லாம் கண்டறிந்ததும் அறிவியல்தான். அதை வைத்துக் கொண்டுதான் இன்று முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல என கம்பு சுத்திக் கொண்டிருக் கிறார்கள்.

இவற்றைப் பற்றியெல்லாம் அறிவியல்ரீதியாகப் பேசாமல் இருப்பதால்தான் பல போலிகள் சமூக ஊடகங்களில் பெருகி மருத்துவர் அன்று அடைமொழி யோடு ஆலோசனைகளை அள்ளி வழங்குகின்றனர்.

எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தில் Diet, Exercise, Physiotherapy போன்றவற்றைப் பற்றி எல்லாம் விரிவாகப் படிப்பதே இல்லை. அபூர்வமான வியாதி களைப் பற்றிப் பக்கம் பக்கமாகப் படிப்பார்கள். அறிவியல்பூர்வமாக இவற்றைப் படிக்கும் Physiotherapist, Dietician ஆகியோரோடு இணைந்து மக்களுக்குப் புரியும் வகையில் எளிய முறையில் பேச, எழுத வேண்டும்.

இல்லையென்றால் நமக்கு ‘பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதால்தான் எல்லாப் பிரச்னைகளும் வருகின்றன, கக்கூஸில் கக்கா போவ தால்தான் எல்லா நோய்களும் வருகின்றன’ என மனம் போல அடித்து விடுபவர்கள்தான் மலிந்துவிடுவார்கள்.

உண்மையே மக்களுக்கு நன்மைதருவது.

உண்மையை அறிவதே அறிவியல்!

டாக்டர் ஜி.ராமானுஜம்

janhvikapoor: அம்மா அம்மா... நீ எங்க அம்மா!
janhvikapoor: அம்மா அம்மா... நீ எங்க அம்மா!

Vannadasan Sivasankaran S

அம்மா ஒரு அறையில் இரு என்றால்

அம்மா இருக்கமாட்டாள்.

முன்னறை,

பின்னறை,

அடுப்பறை,

படிப்பறை

குளிப்பறை,

கழிப்பறை என்று

மாறி மாறிக் கொண்டிருப்பாள்.

படுத்த படுக்கை ஆனபின்

ஒரே இடத்தில் இருக்கிறாள்.

ஒவ்வொரு அறையும் அவளிடம்

வந்து வந்து போகிறது.

Ram Vasanth

நேற்று ஒரு வங்கி, ஹைதராபாத்தில் ஒரு பெரிய மீட்டிங் நடத்தியது ஒரு நட்சத்திர ஹோட்டலில்.

அழைக்கப்பட்டிருந்தேன். எனக்குத் தெரிந்து அழைக்கப்பட்டவர்களில் நான்தான் சிறிய வணிகன் என நினைக்கிறேன். வந்தவர்களில் பாதி பேர் ஆயிரம் கோடி turnover காரர்கள். 100, 200, 500 கோடிகளும் அவர்களோடு கலந்திருந்தார்கள்.

நான் 7:30 (மாலை) மணி மீட்டிங்கிற்கு,

7:35 க்கு சென்றேன். மிகப்பெரிய அறை, ஒரு கால் பாந்தாட்ட மைதானம் அளவு. நூறு வட்ட மேசைகள் இருக்கும். மேடையில் யாருக்கும் இடம் கிடையாது. ஒரு podium... முதல் பேச்சாளர் (வங்கியின், இந்திய அளவிளான பெரிய அதிகாரி ஒருவர் ) பேசிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சி நிரலின்படி அடுத்து ஒரு அதிகாரி பேசுவார். பிறகு QA session. பிறகு cocktails, dinner.

7:35 க்கு உள்ளே சென்றவன் நேரே மேடை வரை சென்றேன். ஆறு வட்ட மேசைகள் முதல் வரிசையில் இருந்தன. அதில் ஒன்றில் அமர்ந்தேன். ஒரு பத்து வருடங்களாக, இப்படித்தான் செய்கிறேன். எந்த சந்திப்பு, விசேஷம் நடந்தாலும் முதல் வரிசையில்தான் அமர்வேன். என்னை நன்றாக தெரிந்த இடங்களில் (வணிக சந்திப்புகளில்) நானே அமர வைக்கப்படுவேன். தெரியாத இடங்களில் நான் சென்று அமர்ந்துவிடுவேன்.

அமரச் செல்லும்போது, ஒரு வினாடி கூட தரை நோக்க மாட்டேன். மெதுவாக இப்படியும் அப்படியும் அரச பார்வை பார்த்தவாறு, சென்று அமர்ந்துவிடுவேன். காரணம்... `இந்தாளு பெரிய பிஸ்தா போல, அதான் அங்க (முதல் வரிசையில்) போய் உட்கார்றான்’ என உண்மையான பிஸ்தாக்கள் எண்ணக் கூடும். அல்லது என்னை யாரும் எழுப்பி, சார் இது vipங்க உட்கார்ற இடம் என வேறு வரிசையை தராமல் இருக்கக் கூடும்.

இப்போதெல்லாம் இதை மட்டுமல்ல.. அரங்கில் பேசச் சொன்னால் முதல் ஆளாக எழுந்து பேசுவேன். பாடச் சொன்னால் உடனே பாடி விடுவேன். என் நாற்பதுக்கு முந்தைய சுபாவம் இதற்கு நேரானது. கடைசி வரிசையில் யாருக்கும் தெரியாமல் போய் உட்காருவேன். எல்லாற்றுக்கும் கூச்சப்படுவேன். இரண்டாவது முறை சோறு கேட்கத் தயங்கி அரை வயிற்றோடு வெளியே வந்து ஓட்டல் சென்று சாப்பிட்ட சம்பவம் கூட உண்டு. ஆனால், இப்போது இப்படி இருக்கிறேன். முதல் வரிசையில் அமரும் attitude-டோடு. இந்த attitude தந்த நன்மைகள்/வாய்ப்புகள் அதிகம். பழகுங்கள் நீங்களும். எங்கு போனாலும் முதல் வரிசையில் சென்று அமருங்கள். முடிந்த வரை சுற்றம் நட்பு சந்திப்புகளிலேனும். எப்போதேனும் யாரேனும் எழுப்பலாம். அடுத்த முறை செல்லும்போது எழுப்பியவர்களே, உங்களை உட்கார வைக்கும் நிலைக்குச் சென்று விடுங்கள். அதுவரை அங்கு செல்லாதீர்கள்.

priyabhavanishankar: செக்கச் சிவந்த கலர்!
priyabhavanishankar: செக்கச் சிவந்த கலர்!

இந்திரா ராஜமாணிக்கம்

எல்லா தேவதைக்கும் சிறகிருக்க வேண்டிய அவசியமில்லை. மீசை கூட இருக்கலாம்.

நர்சிம்

இந்த, யாதும் ஊரே யாவரும் கேளிர்ங்குறத நாம நமக்கு மட்டும்னு எடுத்துக்கிட்டோம்ல்ல. நாம எல்லா ஊர்க்கும் போகலாம். நம்ம ஊர்தான் அது. எல்லாரும் சொந்தங்கள். ஆனா, இங்க யாராவது வந்தா அடி வெளு அப்டீன்னு. அதே பாட்லதான் தீதும் நன்றும் பிறர் தர வாரான்னும் இருக்கு.

Twitaholic

20 வயசுல கல்யாணம் பண்ணி, 25 வயசுக்குள்ள புள்ள பெத்து கெரியர்லயும் முன்னேறுன பொண்ணு ங்கள பாத்தா பொறாமையா இருக்கு. அவங்களுக்கு 40-45 வயசு ஆகும்போதே அவங்க பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி அந்த பொண்ணு Campus interviewல செலக்ட் ஆகி வேலைக்கும் போகுது. Family support + Career balance.

black cat (tribal)

He: என்ன தினமும் மெசேஜ் பண்றேன், பாத்துட்டு reply பண்ணவே மாட்றீங்க... ரொம்ப பிஸியா...?

Msgஐ பாக்காம இருந்தாதான் பிஸி, பாத்துட்டு reply பண்ணலான avoid பண்றேன்னு அர்த்தம்.

T.R.

நீங்கள் அமைதியாக வாழ விரும்பினால்

நீங்கள் பார்த்ததையும்

கேட்டதையும் எல்லோரிடமும் கூறாதீர்கள்!

Priya Thangavel

பொண்ணுகளை வீட்டுக்குள்ளேயே பத்திரமா வச்சிக்கோங்கனு advice பண்ணாதீங்க. பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றம்னு சொல்லுங்க. பொண்ணை மதிக்கக் கத்துக்குடுங்க. பெண்களுக்கு ஆபத்து நேரத்துல போராடுற உடல்பலத்தையும் மனபலத்தையும் வளர்த்து விடுங்க. பெண்களுக்கு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குங்க