Published:Updated:

``55 கோடி ஜாக்பாட்'' துபாய் ஹோட்டலில் பணிபுரிந்த இந்தியருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

lottery ( Pixabay )

நவம்பர் 3-ம் தேதி வியாழன் அன்று பிக் டிக்கெட் லைவ் டிராவில் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. 25 மில்லியன் திர்ஹம் பெரும் பரிசை வென்றதாக என்.எஸ்.சஜேஷ் அறிவிக்கப்பட்டார். அதாவது, இந்திய மதிப்பில் ரூ.55 கோடியை பரிசுத் தொகையாக வென்றுள்ளார்.

துபாயில் உள்ள ஓர் உணவகத்தில் இந்தியாவைச் சேர்ந்த சஜேஷ் என்பவர் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இவர் நான்கு ஆண்டுகளாக மாதம்தோறும் பிக் டிக்கெட்டுகளை வங்கி வந்துள்ளார்.

துபாய்
துபாய்

சஜேஷ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான் ஓமனில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றுள்ளார். ஆன்லைனில் பிக் டிக்கெட்டை வாங்க அவருடன் பணிபுரிந்த 20 பணியாளர்கள் அவருக்கு உதவி செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நவம்பர் 3-ம் தேதி வியாழன் அன்று பிக் டிக்கெட் லைவ் டிராவில் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்து. 25 மில்லியன் திர்ஹம் பெரும் பரிசை வென்றதாக என்.எஸ்.சஜேஷ் அறிவிக்கப்பட்டார். அதாவது, இந்திய மதிப்பில் ரூ.55 கோடியை பரிசுத் தொகையாக வென்றுள்ளார்.

பரிசை வென்ற அடுத்த கணமே இந்தியாவில் இருக்கும் தன்னுடைய மனைவிக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு செய்தியைத் தெரிவித்துள்ளார். 

பரிசை வென்றது குறித்துப் பேசிய என்.எஸ்.சஜேஷ், ``இந்தத் தொகையில் பலருக்கும் உதவ உள்ளேன். நான் பணிபுரியும் ஹோட்டலில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர்க்கு, இந்தத் தொகையைப் பிரித்துக் கொடுப்பதன் மூலம்  உதவ உள்ளேன்.

என்.எஸ்.சஜேஷ்
என்.எஸ்.சஜேஷ்
twitter

மேலும் பரிசு விழும் லாட்டரியை ஆன்லைனில் பதிவு செய்ய உதவியதற்காக, என்னுடைய 20 சக ஊழியர்களோடு பரிசுத் தொகையைப் பகிர்ந்துகொள்ள உள்ளேன். இதோடு நிறுத்திக் கொள்ளாமல், தொடர்ச்சியாக மாதம்தோறும் பிக் டிக்கெட்டுகளை வாங்க உள்ளேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.