Published:Updated:

Oscars 2022: Will Smith மட்டுமல்ல கவனிக்க வைத்த வெற்றியாளர்கள் இவர்களும்தான்! ஏன் தெரியுமா?

Ariana DeBose ( AFP )

Ariana DeBose, Troy Kotsur போன்றவர்களுக்குக் கிடைத்த விருது அனைவரையும் பெருமிதம்கொள்ள வைத்திருக்கிறது. எப்போதும் விமர்சனத்துக்கு உள்ளாகும் ஆஸ்கர் விருதுகள் இந்த வருடம் கொஞ்சம் நல்ல பெயர் வாங்கியிருக்க இவையெல்லாம்தான் காரணம்.

Oscars 2022: Will Smith மட்டுமல்ல கவனிக்க வைத்த வெற்றியாளர்கள் இவர்களும்தான்! ஏன் தெரியுமா?

Ariana DeBose, Troy Kotsur போன்றவர்களுக்குக் கிடைத்த விருது அனைவரையும் பெருமிதம்கொள்ள வைத்திருக்கிறது. எப்போதும் விமர்சனத்துக்கு உள்ளாகும் ஆஸ்கர் விருதுகள் இந்த வருடம் கொஞ்சம் நல்ல பெயர் வாங்கியிருக்க இவையெல்லாம்தான் காரணம்.

Published:Updated:
Ariana DeBose ( AFP )

94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நான்கு ஆண்டுகளாக தொகுப்பாளர்கள் யாருமற்று நடத்தப்பட்ட விழாவில் இந்த ஆண்டு மூன்று தொகுப்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். Regina Hall, Amy Schumer and Wanda Sykes இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். டெனி வில்நௌ (Denis Villeneuve) இயக்கிய சயின்ஸ் பிக்ஷன் படமான 'Dune' ஆறு விருதுகளை அள்ளியிருக்கிறது. மொத்தமாக 10 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டது. சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி, சிறந்த பின்னணி இசை, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு என ஆறு விருதுகளை `Dune' படம் பெற்றிருக்கிறது. ரஷ்ய படைகளின் தாக்குதலில் உள்ள உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக விருது விழாவில் சில நிமிடங்கள் மௌனம் கடைப்பிடிக்கப்பட்டது. "அவர்களின் சொந்த எல்லைக்குள்ளே ஆக்கிரமிப்பு, குளறுபடிகள் மற்றும் அநீதியை எதிர்கொண்டு வரும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சில நிமிடங்கள் மௌனம் காக்கப்படுவதாக" அகாதமி அறிவித்தது.

Ariana DeBose
Ariana DeBose
AFP

குயர் பாலினநடிகை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரியானா டிபோஸ் (Ariana DeBose) சிறந்த துணைநடிக்கைக்கான விருது பெரும் முதல் கறுப்பின, குயர் பாலின வகுப்பைச் சேர்ந்தவர். West Side Story என்ற படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. CODA என்கிற படத்தில் நடித்தற்காக ட்ராய் கொட்சர் (Troy Kotsur)க்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. ஆஸ்கார் விருது பெறும் முதல் காதுகேளாத நடிகர் இவர் தான்.

 Troy Kotsur
Troy Kotsur
AFP

மாற்றுத்திறனாளி நடிகர்!

Encanto படத்திற்கு சிறந்த அனிமேஷன் பியூச்சர் படத்திற்கான விருதும், சிறந்த டாக்குமெண்டரி பியூச்சர் படத்திற்கான விருது “Summer of Soul (Or, When The Revolution Could Not Be Televised)” படத்திற்கும் வழங்கப்பட்டிருக்கிறது. ஹாலிவுட் இயக்குனர் Steven Spielberg ஆறு தசாப்தங்களாக நாமினேட் செய்யப்பட்டு கொண்டிருக்கும் முதல் இயக்குனர் என்கிற பெயரைப் பெறுகிறார். இந்த வருடம் அவரின் 'West Side Story' நாமினேஷனில் இருந்தது. அறிவியல் புனைகதைகளைப் படமாக்குவது எளிதல்ல. Dune போன்ற சிக்கலான கதையைத் திரைப்படமாக மாற்றியதோடு அதற்காக ஆறு விருதுகளையும் தன்வசப்படுத்தி இருக்கும் Dune நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான். இந்த வருடத்தின் பேசுபொருள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Dune
Dune

ஆறு விருதுகள்!

Dune படத்தின் இயக்குனர் டெனி வில்நௌ பள்ளிக்காலத்திலேயே பிராங்க் ஹெர்பர்ட் எழுதிய Dune நாவல்கள் மீது ஈர்க்கப்பட்டு அதனை தன் நண்பனின் உதவியோடு ஸ்டோரிபோர்டு தயாரிக்கும் பணியைச் செய்திருக்கிறார். அதேபோல பால்யகால நினைவோடு இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மரும் Dune படத்தில் இணைகிறார். பாலைவன மணலின் சத்தம், பெண்ணின் குரலில் மந்திரங்கள்போல ஓதுவது என வடிவமைக்கப்பட்ட இசை படத்தின் பேண்டஸிக்கு ஈடு கொடுக்கவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இளமைக்கால கனவுகளைத் துரத்தி ஆஸ்கார் வரை கொண்டு வந்திருக்கிறார்கள்.

King Richard
King Richard

சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது

டென்னிஸ் உலகின் நம்பர் 1 வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸின் தந்தை ரிச்சர்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'கிங் ரிச்சர்ட்' படத்தில் ரிச்சர்ட் ஆக வில் ஸ்மித் நடித்திருந்தார். அதற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல்முறையாக விருது பெறும் ஓடிடி நிறுவனம்!

Coda திரைப்படம் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது பெற்றுள்ளது. இதனை தயாரித்த ஆப்பிள் டிவி ஆஸ்கார் விருது பெறும் ஸ்ட்ரீம்ங் நிறுவனம் என்கிற பெயரைப் பெறுகிறது. சிறந்த படம், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த துணைநடிகர் என்று மூன்று விருதுகளை Coda வென்றிருக்கிறது.

Coda
Coda

லூயிஸா ஹாரிஸ் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'Queen of Basketball' சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதைப் பெற்றது. The Windshield Wiper சிறந்த அனிமேட்டட் குறும்படத்திற்கான விருதையும் The Long Goodbye சிறந்த குறும்படத்திற்கான விருதையும் பெற்றுள்ளன. The Eyes of Tammy Faye படம் இரண்டு விருதுகளை பெற்றிருக்கிறது. சிறந்த நடிகைக்கான விருதும் சிறந்த மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல்க்கான விருதும். இந்தப் படத்தில் நடித்திருந்த ஜெஸிக்கா சாஸ்டைன் (Jessica Chastain) சிறந்த நடிகை விருதைப் பெறுகிறார்.

Jessica Chastain
Jessica Chastain

சிறந்த திரைக்கதைக்கான விருது 'Belfast' படத்திற்கும் சிறந்த காஸ்டியூம் வடிவமைப்பு விருது 'Cruella' படத்திற்கும் சிறந்த பாடலுக்கான விருது No Time to Die படத்தில் இடம்பெற்ற பாடலைப் பாடியதற்காக 20 வயதான பாடகி பில்லி எலிஷ் மற்றும் அவரது சகோதரர் பின்னீஷ் ஆஸ்கார் விருதைப் பெறுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism