Published:Updated:

இங்கே திரைப்படத் தணிக்கை தீர்ப்பாயம் இல்லை; இத்தாலியில் சென்சாரே இல்லை... மாறும் சினிமா உலகம்!

இத்தாலி சினிமா ( wantedinrome.com )

திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் பணி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்தியாவில் இப்படியொரு நிலையிருக்க அதே தினம் இத்தாலியில் திரைப்படங்களின் தணிக்கையில் கூடுதல் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கே திரைப்படத் தணிக்கை தீர்ப்பாயம் இல்லை; இத்தாலியில் சென்சாரே இல்லை... மாறும் சினிமா உலகம்!

திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் பணி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்தியாவில் இப்படியொரு நிலையிருக்க அதே தினம் இத்தாலியில் திரைப்படங்களின் தணிக்கையில் கூடுதல் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published:Updated:
இத்தாலி சினிமா ( wantedinrome.com )
தனிப்பட்ட சிலரின் கருத்தோ, கலையோ பெருவெளி சமூகத்தைப் பாதிக்கக் கூடாது. குறிப்பாகத் திரைப்படங்கள் போன்ற வெகுஜன ஊடக வடிவங்களில் சொல்லப்படும் கருத்துக்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அதிகம், அதை ஒரு வரையறைக்குள் நிறுத்தி முறைப்படுத்த உருவாக்கப்பட்டதுதான் திரைப்படங்களின் தணிக்கை குழுக்கள்.
மத்திய திரைப்பட தணிக்கை குழு
மத்திய திரைப்பட தணிக்கை குழு

சமயங்களில் அந்த தணிக்கை குழுக்கள் தனிநபர் விரோதத்திற்காகவோ, அரசியல் ஆதாயத்திற்காகவோ, ஒருசிலரின் கருத்துகளுக்காகவோ ஒரு கலைஞனின் படைப்பைத் தடுப்பதாக அமைவதும் உண்டு. இந்தியாவில், அப்படியான தருணங்களில் அந்தக் கலைஞன் தன்னுடைய உரிமையை நிலைநாட்ட உதவியது திரைப்பட தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (Film Certification Appellate Tribunal). மத்திய அரசு தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தின் படி, திரைப்பட தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தைக் கலைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால் திரைப்படக் குழுவினர், திரைப்படத் தணிக்கையில் மாற்று கருத்து இருப்பின் நேரடியாக உயர் நீதிமன்றத்தைதான் இனி நாடவேண்டும். இதற்கென பிரேத்யேகமாக இருந்த தீர்ப்பாயம் இனி செயல்படாது. இதனால் எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும். சம்பந்தப்பட்டவர்களுக்கு பல கோடிகளில் நஷ்டங்களும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இப்படி திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் பணி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து இந்தியத் திரைத்துறையினர் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தியாவில் இப்படியொரு நிலையிருக்க அதே தினம் இத்தாலியில் திரைப்படங்களின் தணிக்கையில் கூடுதல் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உலகின் அதீத கட்டுப்பாடுகளுடைய தணிக்கைச் சட்டம் கொண்ட நாடுகளில் ஒன்று இத்தாலி. அரசியல், மதம் மற்றும் சமூக வரையறைக்கு எவ்விதமான மாற்றுக்கருத்துக்களை முன்வைத்தாலும் படத்தில் தணிக்கை குழு கண் வைக்கும். குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்படும்வரை அந்தத் திரைப்படம் வெளியிடப்பட முடியாது. 1914-ம் ஆண்டு இத்தாலியில் தணிக்கை சட்டம் அமலுக்கு வந்தது. கடந்த 100 ஆண்டுகளில் இத்தாலியின் திரைப்படங்கள் அதை உருவாக்கிய கலைஞனின் கற்பனைகளுக்கும், கருத்துகளுக்கும் கட்டுப்பாடுகள் விதித்தே வெளியாகியிருக்கின்றன. சினிசென்சுரா எனும் அமைப்பு சமீபத்தில் நடத்திய ஒரு சர்வேயில் இத்தாலியில் 1944-ம் ஆண்டு முதல் இதுவரை 274 இத்தாலியன் படங்கள், 130 அமெரிக்கன் படங்கள் மற்றும் 321 பிறநாட்டுப் படங்கள் தணிக்கை செய்யப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன. 10,000 - ற்கும் மேற்பட்ட படங்கள் தணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

 தணிக்கை குழு
தணிக்கை குழு

இத்தாலியில் தற்போது இது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இனி திரைப்படங்களுக்குத் தணிக்கை இல்லை என இத்தாலி அரசு அறிவித்துள்ளது. இத்தாலியின் கலாசார அமைச்சர் டாரியோ பிரான்சேசினி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு கலைஞனின் சுதந்திரத்தில் அரசின் தலையீடுகளை அனுமதிக்கும் சட்டதிட்டங்களும், அமைப்புகளும் இன்றோடு முடிவுபெறுகிறது" என்று கூறியிருக்கிறார்.

இதனடிப்படையில் இனி சமூக நெறி, அல்லது மதத்தின் பெயரில் ஒரு திரைப்படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கவோ, அல்லது காட்சிகளை நீக்கக் கூறவோ முடியாது. மாறாக ஒரு படத்தின் இயக்குநர் உட்பட்ட குழுவே, அவர்கள் படம் எந்த வயதினருக்கு ஏற்றது என்ற வரையறையை வெளியிடுவர். இவர்களின் இந்த முடிவைச் சரிபார்க்க 49 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் விலங்குகள் நலம், கல்வி ஆகிய துறைகளைச் சார்ந்த நிபுணர்களும் இந்தக் குழுவில் இடம்பெறுவர்.

OTT  தணிக்கை
OTT தணிக்கை

இத்தாலியின் சினிமா துறையினர் இதுகுறித்து தெரிவித்துள்ள கருத்தில், "நாங்கள் நல்ல அறிவு முதிர்ச்சி பெற்றவர்கள். எங்கள் படங்களின் தன்மையைக் குறித்து, சரியான வயதினருக்குப் பரிந்துரைக்கும் வேலையை செவ்வனே பார்த்து, எங்களை நாங்கள் சுய நிர்வாகம் செய்துகொள்ள முடியும்" என நம்பிக்கை அளித்திருக்கிறார்கள்.

இந்தியாவில், OTT தளங்களுக்கே தணிக்கை வேண்டும் என ஒருபுறம் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் இத்தாலிய அரசு கலைத்துறையினருக்கு அளித்திருக்கும் சுதந்திரமும், அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வோம் என இத்தாலிய சினிமா துறையினர் பொறுப்பு எடுத்துக்கொண்டிருப்பதும் வரவேற்க வேண்டிய விஷயம்.