Published:Updated:

"கலைகள் தடை செய்யப்படும், கருத்துரிமை மௌனிக்கப்படும்!"- ஆப்கன் பெண் இயக்குநரின் உருக்கமான கடிதம்

ஷஹ்ரா கரிமி
ஷஹ்ரா கரிமி

“தாலிபன்கள் கலைகள் அனைத்தையும் தடைசெய்து விடுவார்கள். அவர்களின் கொலைப் பட்டியலில் அடுத்து நானும், மற்ற திரைக் கலைஞர்கள் இருக்கக் கூடும்... எங்கள் கருத்துரிமை மௌனிக்கப்படும்.”

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிதைத் தொடர்ந்து, காபூல் நகரைக் கைப்பற்றியிருப்பதன் மூலம், மீண்டும் அந்நாட்டை தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்திருக்கின்றனர் தாலிபன்கள்.

20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கப் படைகளால் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட தாலிபன்கள், வெறும் இருபதே நாள்களில் மீண்டும் தேசத்தைக் கைப்பற்றிவிட்டனர்.

தாலிபன்
தாலிபன்

தலைநகர் காபூலின் எல்லையில் தாலிபன்கள் தடம் பதித்த விஷயம் அறிந்ததும், பல நாடுகளின் தூதரகங்கள் பதற்றமாகிவிட்டன. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா என வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் பறந்துவந்து தங்கள் தேசத்தவரையும் தூதரக அதிகாரிகளையும் மீட்டுச் சென்றன.

யார் இந்த தாலிபன்கள், அமெரிக்கா ஏன் பின்வாங்கியது, ஆப்கானிஸ்தானில் நடப்பது என்ன? - 1

1996-2001 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தாலிபன்கள், மிக மோசமான ஒடுக்குமுறையை அப்போது கட்டவிழ்த்துவிட்டனர். சமூக, கலாசார நிலைகளில் அவர்கள் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் நாட்டை மிக மோசமாக பின்நோக்கி கொண்டு சென்றது. இந்தப் பின்னணியில், தாலிபன்கள் இப்போது மீண்டும் நாட்டைக் கைப்பற்றியிருப்பது, உள்நாட்டில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தாலிபன்கள்
தாலிபன்கள்
Sidiqullah Khan

ஆப்கானிஸ்தானைத் தாலிபன்கள் கைப்பற்றியிருப்பதைத் தொடர்ந்து, நாடு எதிர்கொண்டிருக்கும் மோசமான சூழலை கவனப்படுத்த வேண்டி, அந்நாட்டின் முக்கியப் பெண் இயக்குநரும், ஆப்கன் திரைப்பட அமைப்பின் முதல் பெண் தலைவருமான ஷஹ்ரா கரிமி, உலக மக்களிடம் கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“உலகெங்கிலும் உள்ள திரைச் சமூகங்களுக்கும், சினிமாவைக் காதலிப்பவர்களுக்கும், உடைந்த இதயத்துடன் இதை எழுதுகிறேன்; எங்கள் அழகிய மக்களை, குறிப்பாக திரைக்கலைஞர்களை தாலிபன்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு என்னுடன் நீங்கள் இணைவீர்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் எழுதுகிறேன்.”
ஷஹ்ரா கரிமி
ஷஹ்ரா கரிமி
ஷஹ்ரா கரிமி

உருக்கமான வரிகளோடு தொடங்கும் தொடங்கும் கரிமியின் கடிதம், தாலிபன்கள் ஆப்கனின் மாகாணங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, மக்களைக் கொன்றது, குழந்தைகளைக் கடத்தியது, திரைத்துறையைச் சேர்ந்த நகைச்சுவைக் கலைஞர் ஒருவரைத் துன்புறுத்திக் கொன்றது தொடங்கி ஆப்கனில் தாலிபன்கள் நிகழ்த்திய அட்டூழியத்தைப் பட்டியலிட்டுச் செல்கிறது.

தாலிபன்கள் ஆட்சியில் என்னவெல்லாம் நடந்ததன?! - ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் இனி என்னவாகும்?

“இது ஒரு மனிதகுல நெருக்கடி. என்றபோதிலும் உலகம் மௌனமாக இருக்கிறது. நாங்கள் இந்த மௌனத்துக்குப் பழகிவிட்டோம் என்றாலும், இது நியாயமாக இல்லை. எங்களுக்கு உங்கள் குரல் தேவை. தாலிபன்களுடனான 'அமைதி உடன்படிக்கை' நியாயமானது என்பது போல், ஊடகங்களும், அரசாங்கங்களும், மனித உரிமை அமைப்புகளும் வசதியாக மௌனம் காக்கின்றன. அதை அங்கீகரித்ததன் மூலம், அவர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான நம்பிக்கையை அவர்களுக்கு அளித்துள்ளனர்” என்று பிரச்னையின் பின்புலத்தை கரிமி விளக்குகிறார்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

“என்னுடைய நாட்டில் ஒரு திரைக்கலைஞராக நான் அரும்பாடுபட்டு உருவாக்கிய அனைத்தும் இப்போது வீழ்ந்துவிடும் அபாயத்தில் உள்ளது. தாலிபன்கள் கலைகள் அனைத்தையும் தடைசெய்து விடுவார்கள். அவர்களின் கொலைப்பட்டியலில் அடுத்து நானும், மற்ற திரைக் கலைஞர்களும் இருக்கக்கூடும்... எங்கள் கருத்துரிமை மௌனிக்கப்படும்” என்ற வரிகளில் துயரம் மேலிடுகிறது.

“எனக்கு இந்த உலகத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த மௌனத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் இங்குதான் இருப்பேன், என்னுடைய நாட்டுக்காகப் போராடுவேன், ஆனால் என்னால் தனியாக இதைச் செய்ய முடியாது. உங்களைப் போன்ற துணைகள் எனக்குத் தேவை. எங்களுக்கு நடப்பதை உலகுக்குத் தெரியப்படுத்தி எங்களிடம் அக்கறை கொள்ள தயவுசெய்து உதவுங்கள். ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்பதை உங்கள் நாட்டின் முக்கியமான ஊடகங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். ஆப்கானிஸ்தானுக்கு வெளியே எங்கள் குரலாக இருங்கள்” என்று எழுதும் கரிமி, “உலகம் எங்களிடம் முகத்தைத் திருப்பிக் கொள்ளக் கூடாது. ஆப்கன் பெண்கள், குழந்தைகள், கலைஞர்கள், திரைக்கலைஞர்கள் ஆகியோர் சார்பாக உங்கள் குரலும், உங்கள் ஆதரவும் எங்களுக்குத் தேவை. இந்த நேரத்தில் உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். உலகம் ஆப்கானிஸ்தானைக் கைவிட்டுவிடாமல் இருக்க எங்களுக்கு உதவுங்கள்” என்ற வேண்டுகோளுடன் கடிதத்தை முடிக்கிறார்!

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
சர்வதேச சமூகத்தினரிடையே கடும் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ள கரிமியின் கடிதத்தை, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் பகிர்ந்துள்ளார்.
அடுத்த கட்டுரைக்கு