Published:Updated:

பாகிஸ்தானுக்கு முதல் கிராமி விருது; யார் இந்த பாடகி அரூஜ் அஃப்தாப்?

Arooj Aftab ( Twitter Photo )

இவ்விழாவில் `Best Global Performance' பிரிவில் முதன் முறையாக பாகிஸ்தானை சேர்ந்த பாடகி அரூஜ் அஃப்தாப் (Arooj Aftab) தன்னுடைய `மொஹபத்' (Mohabbat) பாடலுக்காக கிராமி விருதை வென்றுள்ளார்.

பாகிஸ்தானுக்கு முதல் கிராமி விருது; யார் இந்த பாடகி அரூஜ் அஃப்தாப்?

இவ்விழாவில் `Best Global Performance' பிரிவில் முதன் முறையாக பாகிஸ்தானை சேர்ந்த பாடகி அரூஜ் அஃப்தாப் (Arooj Aftab) தன்னுடைய `மொஹபத்' (Mohabbat) பாடலுக்காக கிராமி விருதை வென்றுள்ளார்.

Published:Updated:
Arooj Aftab ( Twitter Photo )

இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிகு உயரிய விருதுகளில் ஒன்று, கிராமி விருதுகள். இன்று லாஸ் வேகாஸில் 64-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், இசைத்துறையில் சிறந்த பங்களிக்கும் கலைஞர்களுக்குப் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.

Arooj Aftab
Arooj Aftab
Twitter Photo

இவ்விழாவில் `Best Global Performance' பிரிவில் முதன் முறையாக பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகி அரூஜ் அஃப்தாப் (Arooj Aftab) தன்னுடைய `மொஹபத்' (Mohabbat) பாடலுக்காக கிராமி விருதை வென்றுள்ளார்.

நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் 15 ஆண்டுகளாக வசித்து வரும் 37 வயதான அரூஜ் அஃப்தாப், சவூதி அரேபியாவில் உள்ள பாகிஸ்தானிய பெற்றோருக்கு பிறந்தார். பாஸ்டனில் உள்ள புகழ் பெற்ற இசைப்பள்ளியான Berklee School of Music-ல் சேர்ந்து தன்னுடைய இசைப் பயணத்தைத் தொடர்ந்தார். லிங்கன் சென்டர் மற்றும் மியூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட் உட்பட நியூயார்க்கின் முக்கியமான பல இடங்களில் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 2018-ல் Mitski at The Brooklyn Steel என்ற நேரடி இசை நிகழ்ச்சியைத் தொடங்கினார். இசைத் துறையில் இது இவருக்கான மைல்கல் என்று கூட சொல்லலாம். அதைத் தொடர்ந்து தனது மூன்றாவது ஆல்பமான வல்ச்சர் பிரின்ஸை வெளியிட்டார்.

Arooj Aftab
Arooj Aftab

2021-ல் `மொஹபத்' பாடலில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சேர்த்துப் பாடியதால் உலக அளவில் அனைவரின் கவனமும் அவர் பக்கம் திரும்பியது. பழைமையான நாட்டுப்புற சூஃபியில் ஜாஸ் மற்றும் மினிமலிச இசையை இணைத்து உலகளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

தன்னுடன் இசைத்துறையில் பயணிக்கும் கலைஞர்கள் கிராமி விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டதற்கு அரூஜ் பாராட்டு தெரிவித்தார்.