Published:Updated:

BTS: பிரிகிறது உலகப் புகழ்பெற்ற இசைக் கூட்டணி... மீண்டும் இணைவது எப்போது?

இதற்கு முன்பு 2019லும், 2021லும் ஒரு சின்ன பிரேக் எடுத்திருக்கிறது BTS க்ரூப் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை பிரிவு கொஞ்ச காலம் நீடிக்கும் என்றே சொல்கிறார்கள்.

BTS: பிரிகிறது உலகப் புகழ்பெற்ற இசைக் கூட்டணி... மீண்டும் இணைவது எப்போது?

இதற்கு முன்பு 2019லும், 2021லும் ஒரு சின்ன பிரேக் எடுத்திருக்கிறது BTS க்ரூப் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை பிரிவு கொஞ்ச காலம் நீடிக்கும் என்றே சொல்கிறார்கள்.

Published:Updated:
உலகின் நம்பர் ஒன் பாப் குழுவான BTS பிரிந்துவிட்டது. இந்த மாதம் இந்தக் குழு அமெரிக்க அதிபரை வெள்ளை மாளிகையில் சந்தித்தது பெரிய நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.

BTS குழு தற்காலிமாகப் பிரிந்து அவர் அவரின் வாழ்க்கையின் அடுத்தக்கட்டம் குறித்து யோசிக்க இருக்கிறார்களாம். இனி தனித்தனியாக பாடல்கள் வெளியிட இருக்கிறார்கள் என FESTAவில் அறிவித்து இருக்கிறார்கள்.

BTS
BTS

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொறு... பொறு... BTSன்னா என என்ன எனக் கேட்பவரா நீங்கள்? வீட்டில் இருக்கும் 2K கிட்ஸிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். 'டான்' படத்தில் சிவகார்த்திகேயன் விரலை வைத்து 'லவ் யூ' என்பதை ஒருவாறு காட்டுவாறே, அதுகூட கொரியன் பாலிசிதான். BTS குழு அதைக் காண்பித்தாலும், அது கொரியன் சிம்பலாம், BTS கிடையாதாம். நானொரு 2கே கிட்டிடம் கேட்ட போது இப்படித்தான் பதில் வந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
"BTS பாடல்கள் கேட்கும்போதே ஒரு மன அழுத்தத்துல இருந்து வெளிய வர்ற மாதிரி இருக்கும். அதே மாதிரி, காலேஜ் படிக்கறப்ப சிலருக்கு எல்லாம் நாம எதுக்குமே வொர்த் இல்லைன்னு அப்படின்னு தோணும். நம்மளே நாமளே எப்படி லவ் பண்ணணும்னு யோசிக்க வைக்கும். அவங்க வாழ்க்கைல பட்ட கஷ்டங்கள், அனுபவங்கள், அதுல இருந்து எப்படி அவங்க மேல வந்தாங்க, எல்லாமே அவங்க பாடல்கள்ல இருக்கும். ஒரு பாட்டுக்கு எல்லாம் 20 நிமிசத்துல 40000 டிக்கெட் வித்துச்சு."
ஸ்ரீமதி
BTS
BTS
கிம் நம்ஜூன், கிம் சியோக்ஜின், மின் யூங்கி, ஜெ ஹோப், பார்க் ஜிமின், கிம் தேயங், ஜியான் ஜங்கூக். இப்படி BTSல மொத்தம் ஏழு பேர் இருக்காங்க. இதுல ஜங்கூக், கிம் தேயங், பார்க் ஜிமின், சியோக்ஜின் இவங்க எல்லாம் பாட்டுப் பாடறவங்க. அதாவது vocals. மின் யூங்கி, ஹோப், நம்ஜூன் மூணு பேரு ரேப்பர்ஸ். கிம் நம்ஜூனோட ஸ்டேஜ் பேரு RM, அதாவது RAP MONSTER. Idol, Fake love, On, Mic drop, DNA, Anpanman, Make it right, Boy with luv, Fire, Blood Sweat and Tears, Dope, Save me இப்படி நிறைய பாடல்கள் ஹிட் ஆகியிருக்கு. ஜங்கூக் ஒரு செக்ஸி ஸ்டார். கூகுள் சர்ச்ல எல்லாம் எப்பவும் நம்பர் ஒன் கிம் தேயங்தான். அவங்க எல்லோரும் அடிக்கடி உச்சரிக்கறது 'Love Yourself'தான். நானெல்லாம் மூணு வருஷமா இந்தப் பாடல்கள் கேட்டுக்கிட்டு இருக்கேன். அவ்ளோ மோட்டிவேசனா இருக்கும். என்னோட ஃபேவரைட் சாங் 'Life goes on.'
ப்ரீத்தி
ஓகே, விஷயத்துக்கு வருவோம். அடுத்த சில மாதங்களுக்கு தனித்தனியாக ஆல்பம் வெளியிட இருக்கிறார்கள். தங்கள் குழுவின் ஒன்பதாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாடும் விதமாக FESTAவில் இதை அறிவித்திருக்கிறார் RM. அதாவது கிம் நம்ஜூன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"மற்ற குழுக்களில் இருந்து BTS தனித்து இருக்கிறது என்றுதான் எப்போதும் நான் எண்ணியிருக்கிறேன். மற்ற கொரிய பாப் குழுக்கள் தங்களிடம் இருக்கும் பாடகர்களை வளரவிடுவதில்லை" என வருத்தப்பட்டார் RM.

"எங்களுக்கு எல்லாமே எங்களின் ரசிகர்கள்தான். எங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் யோசித்திருக்கிறோம். இனி எங்கள் ரசிகர்களின் விருப்பத்தில் எந்தக் குறையும் இல்லாமல் தனித்தனியாக சாதிக்க இருக்கிறோம்" எனக் கண்ணீர் மல்க தெரிவித்தார் பார்க் ஜிமின்.

"இப்ப எங்களுக்கு கொஞ்சம் சோதனையான காலம். எங்களோட தனித்தன்மையத் தேடி நாங்க பயணப்படறோம். அது ரொம்பவே நீண்டதொரு முயற்சி. ஆனா, நாங்க மறுபடியும் ஒண்ணா சேர்ந்து வர்றப்ப வேற லெவல்ல இருக்கும்" என்கிறார் V.

"இனி, ஒண்ணா வாழ்றதோட சந்தோஷம் எப்படி இருக்கும்னு கொஞ்சம் தனியா வாழ்ந்து கத்துக்கப் போறோம். இதை நாங்க நெகட்டிவா பார்க்கல. ஆரோக்கியமானதொரு விஷயமாத்தான் பார்க்கறோம்" என்கிறார் ஹோப்.

BTS
BTS
Jordan Strauss

இதற்கு முன்பு 2019லும், 2021லும் ஒரு சின்ன பிரேக் எடுத்திருக்கிறது BTS க்ரூப் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை பிரிவு கொஞ்ச காலம் நீடிக்கும் என்றே சொல்கிறார்கள். ஏனெனில் இந்த வீடியோவில் அனைவருமே அழுதுகொண்டுதான் பேசினார்கள்.

இந்தச் சோகத்தை எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறார்களோ என உடன் பயணிக்கும் 2K கிட்டிடம் கேட்டால், "காலைல இருந்து எல்லோரும் அந்த சோகத்துலதான் இருக்கோம். ஏன்தான் இப்படி பண்றாங்களோ" என கவலை தோய்ந்த முகத்துடன் பதில் அளிக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism